தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வினில் *இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,* இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது.…
Read Moreகுற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!
2014ஆம் ஆண்டு வெளியான குற்றம் கடிதல் திரைப்படம், இயக்குநர் பிரம்மா G இயக்கத்தில், JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகி, ஆசிரியர்–மாணவர் உறவை மையமாகக் கொண்ட ஆழமான கதை மூலம் தேசிய விருதுகளை வென்று தனித்துவமான இடத்தைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம், இந்திய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது. இப்போது, அதன் தொடர்ச்சியாக குற்றம் கடிதல் 2, இயக்குநர் S. K. ஜீவா இயக்கத்தில், மீண்டும் JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகிறது. இவரே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். குற்றம் கடிதல் முதல் பாகம் சமூக அவலம் பற்றிப் பேசியது. ஆனால் இந்த படம் அத்தன்மையிலிருந்து விலகி, ஒரு சமூக த்ரில்லர் வகையில் உருவாகி, அதே சமயம் பள்ளிக்கூடப் பின்னணியைத் தக்க வைத்துள்ளது. நடிகர் பாண்டியராஜன்…
Read Moreஇசை நிகழ்ச்சிக்காக ஒன்று கூடும் வேடன், அறிவு, அசல் கோலார்
தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 11ஆம் தேதி பார்தியா மால் ஆஃப் பெங்களூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3 மாநிலங்களைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு அதிரடியான அனுபவத்தை வழங்கினர். வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி மற்றும் டகால்டி ஆகியோரின் உற்சாகமான நிகழ்ச்சிகளுடன், தமிழ் கலைஞர்கள் அறிவு மற்றும் அசல் கோலார் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் ஹிப்-ஹாப் இசையின் பல்வேறு முகங்களை ஒரே மேடையில் கொண்டு வந்த இந்த விழா, மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை தாண்டிய இசை ஒன்றிணைப்பாக அமைந்தது. ரசிகர்களின் பெரும் திரளான வருகையுடன், இந்த நிகழ்ச்சி ஒரு உற்சாகமான, சமூகத்தை…
Read Moreஇயக்குநர் சேரன் – நடிகை அதுல்யா ரவி துவங்கி வைத்த ‘நீர் மோர் பந்தல்’ திறப்பு விழா
கோடை கால வெப்ப அலையின் காரணமாக தாகத்தால் தவிக்கும் பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் தாகம் தணிக்கும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சென்னை பிரசாத் லேப் வளாகத்திற்கு அருகே , அருணாச்சலம் சாலையில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று சித்திரை திருநாளில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இயக்குனரும் , நடிகருமான சேரன் மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினர். இந்நிகழ்வில் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் சேரன் பேசுகையில், ” வெயில் நூறு டிகிரிக்கு மேல் அடித்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது. அனைவருக்கும் தாகம் எடுக்கிறது. இதனால் ஒரு நாளைக்கு இரண்டு…
Read Moreதிட்டக்குடியில் “TN 2026” வெற்றி கொண்டாட்டம் – ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த படக்குழு !!
KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பெயர்களாக உயர்ந்து வருகின்றனர். தரமான கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், மற்றும் சிறப்பான வணிக அம்சங்கள் கலந்த படங்களைத் தேர்வு செய்வதில் இவர்களின் தேர்ச்சி, அவர்களை மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது. அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள “TN 2026” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம், சமூக கருத்துகளையும், அரசியல் பகடியையும், சிரிப்பூட்டும் நிகழ்வுகளாக இணைத்து மக்களிடம் எளிதாக சேர்கிறது. படம் வெளியாகிய பிறகு, தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் சொந்த ஊரான திட்டக்குடியில் நடைபெற்ற கொண்டாட்டம்…
Read Moreசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 13.04.2026 (மாலை), கவிஞர் காவிரிமைந்தன் எழுதி – கங்கை பதிப்பகத்தார் பதிப்பித்த கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் திரு.லஷ்மிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டு முதல் பிரதியை திரு.செல்வரத்னம் (இலங்கை) பெற்றுக்கொண்டார்.
வலமிருந்து இடமாக : திரு.ஆர். பத்மநாபன், திரு.பால சீனிவாசன், திரு.பி.வி.வைத்தியலிங்கம், திரு.ரவி தமிழ்வாணன், திரு.செல்வரத்னம், கவிஞர் காவிரிமைந்தன், திரு.லஷ்மிநாதன், திரு.நிகில் முருகன், திருமதி.வெண்ணிலா காமராஜ், திருமதி. கல்யாணி ஸ்ரீதர், திருமதி.ஸ்ரீதேவி துரை அரசு, திரு.அந்தமான் கிருஷ்ணமூர்த்தி கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில் நிகழ்ச்சியில் கவிஞர் லஷ்மிநாதன் அவர்களின் தொடர் தமிழ்ப் பணிகளையும் பல்வேறு நிகழ்வுகளுக்கு அவர்தரும் பேராதரவும் ஊக்கமும் கருதி “சுடர்கவி” எனும் விருது வழங்கப்பட்டது. கவிஞர், எழுத்தாளர் திரு. செல்வரத்தினம் (எ) செல்வா (இலங்கை) அவர்களுக்கு தமிழ், கவிதை மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்காக பாராட்டி “வாழ்வியல் வழிகாட்டி” எனும் விருது வழங்கப்பட்டது. தென்னிந்திய திரைத் தொடர்புத் துறையில் தனித்துவமாய்த் திகழும் திரு. நிகில் முருகன் அவர்களுக்கு மக்கள் தொடர்பு மாமணி எனும் விருது வழங்கப்பட்டது.
Read Moreயோகி பாபுவின் சன்னிதானம் பிஓ படம்! வெளியானது ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்!
யோகி பாபுவின் அடுத்த படமான சன்னிதானம் பிஓ-வின் முதல் சிங்கிள் ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ வெளியீடு: ஆன்மீக உணர்வை தட்டியெழுப்பும் பாடல்! சன்னிதானம் பிஓ படக்குழுவினர் படத்தின் முதல் பாடலான ஏறி வந்தோம் ஐயப்பா பாடலை வெளியிட்டுள்ளனர். சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் சாரத்தை அழகாக படம்பிடித்துக் காட்டும் வகையிலும், மனதை உருக்கும் பக்தி பாடலாகவும் இது அமைந்துள்ளது. அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோரின் ஆழமான குரலில் உணர்வுபூர்வமாக பாடப்பட்டுள்ள இந்த பாடல், மோகன் ராஜனின் மனதை தொடும் வரிகளாலும், ஏ.ஜி.ஆர்-ன் மெய்சிலிர்க்க வைக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்டுள்ளது. இது படத்தின் உணர்ச்சிகரமான மற்றும் ஆன்மீக பயணத்திற்கு சரியான அடித்தளத்தை அமைத்துள்ளது. புகழ்பெற்ற இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரால் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே…
Read Moreராக்கிங் ஸ்டார் யாஷ்: ‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்!
CinemaCon 2026 விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” திரைப்படம் !! CinemaCon 2026 விழாவில் லாஸ் வேகாஸ் நகரில் இந்திய சினிமா உலகளவில் கவனம் ஈர்த்த வேளையில், நடிகர் யாஷ் தனது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) படம் குறித்து பகிர்ந்த கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நமித் மல்ஹோத்ரா உடன் கலந்து கொண்ட அவர், இந்த படம் கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படைப்பாக இருக்குமென தெரிவித்தார். படத்தைப் பற்றி யாஷ் கூறியதாவது: “எங்கள் திரைத்துறையில் முதன்முறையாக இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்துள்ளோம். இந்த படத்தின் கான்செப்ட் பல அடுக்குகள் கொண்டது. இது சாதாரண கேங்ஸ்டர் ஆக்ஷன் படம் அல்ல. வெளிப்படையாக பார்த்தால் இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர்…
Read More‘லாரா’ புகழ் கார்த்திகேசன் நடித்து தயாரித்து இயக்கும் படம் ‘அறுவடை’!!
ஆன்மீகம் தத்துவங்களின்படி கர்மா என்பது பேசப்படுகிறது. அதன்படி ,’நீங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அல்லது ஆற்றல் எதுவாக இருந்தாலும் அது நல்லதாகவோ கெட்டதாகவோ உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்’ என்கிறது.சுருக்கமாக ‘விதைத்ததையே அறுப்பாய்’ என்கிறது. அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது நியூட்டனின் மூன்றாவது விதி இது பற்றிக் கூறும்போது, ‘ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு’ என்று கூறுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் உள்ள எதிர்வினை பற்றித் தான் ‘அறுவடை’ படம் பேசுகிறது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான் ‘என்கிற கருத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம்தான் ‘அறுவடை’.ஆக அறுவடை என்கிற இந்தப் படத்திற்குத் தலைப்பாக வந்திருக்கிற சொல் செயலுக்கான எதிர்வினையைக் குறிக்கிறது எனலாம். இந்த ‘அறுவடை’ திரைப்படத்தை எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம் .கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.படத்தை அவரே இயக்கியது மட்டுமல்லாமல் கதையின் நாயகனாக…
Read Moreவிஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்– அதிரடி ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த அதிரடி முன்னோட்டம்!!
தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ பிரபல இயக்குநர் A. R. முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்தப் படம், தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன், செண்டிமெண்ட் மற்றும் வலுவான கதாபாத்திரங்களின் பயணம் ஆகியவற்றை இணைத்து, இந்த ட்ரைசர் ஒரு தீவிரமான சினிமா உலகத்தை சிறிய நேரத்தில் மிகச் சக்திவாய்ந்த முறையில் காட்டுகிறது. “ட்ரைலர் + டீசர்” என்ற புதிய வடிவமைப்பில் உருவான இந்த ட்ரைசர், குறுகிய நேரத்தில், நீண்டநாள் நினைவில் நிற்கும் அனுபவத்தை வழங்குகிறது.இந்த ட்ரைசரில் மிக முக்கியமாக திகழ்வது, அதிவேக எடிட்டிங், ஆழமான சவுண்ட் டிசைன் மற்றும் சாம் C. S. இன் அதிரடி பின்னணி இசை. ஒவ்வொரு காட்சியிலும்…
Read More