’ஒற்றாடல்’ படத்தை இயக்கிய இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன், தனது இரண்டாவது படமாக, ‘யாமன்’ என்ற படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு, கே.எஸ்.எம். ஸ்கிரீன் பிளே பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். சக்தி சிவன், காயத்ரி ரெமா நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஆதேஷ் பாலா, சம்பத்ராம், அருள் டி.சங்கர், திருச்சி சாதானா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. திகில் ஜானர் திரைப்படமான இப்படம், பார்ப்பவர்களை மிரள வைப்பதோடு, வழக்கமான பாணியில் பயத்தாலும் திகில் காட்சிகள் நிறைந்த, சுவாரஸ்யமான பேய் படமாக பயணிக்கிறது, என்று படம் பார்த்த பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில், ‘யாமன்’ படத்திற்காக அப்படத்தில் நடித்தவர்களே விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்துள்ளதால், தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.எஸ்.மணிகண்டன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும்,…
Read Moreமுன்னெப்போதும் காணாத முன்னோட்டம்: மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ‘பிளாக் ரோஸ்’ திரைப்படத்தின் பைலட் மூவி திரைப்பட விழாக்களிலும் ஓடிடியிலும் வெளியீடு
சிறு வயது முதல் இங்கிலாந்தில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான SJ சரண், லண்டனில் வெற்றிகரமான தொழிலதிபராக திகழந்து வருகிறார். திரைத்துறை மீது தீராத தாகம் கொண்ட இவர், இயக்குநர் ஏ எல் விஜய் உடன் ‘மிஷன்’ திரைப்படத்திலும், மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடித்த ‘மோகினி’ திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் கே பாக்யராஜிடமும் பயிற்சி பெற்ற இவர், ‘பிளாக் ரோஸ்’ எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி இருக்கிறார். நிழல்கள் ரவி, பிரித்விராஜ் (பப்லு), சாந்தினி தமிழரசன், நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் பேரன் விஜேஷ், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இத்திரைப்படம் ஒரு கிரைம் திரில்லர் ஆகும். இது வரை யாரும் மேற்கொள்ளாத புதுமையான முயற்சியாக, இத்திரைப்படத்திற்காக மிக அதிக பொருட்செலவில் பைலட் மூவி ஒன்றை சரண்…
Read Moreகீனோ – திரை விமர்சனம்
திகில் மர்மம் கொண்ட பட வரிசையில் வந்திருக்கும் படம் கீனோ. ஆனால் இந்த கீனோவில் இடம் பெறும் திகில் எந்த வகையைச் சேர்ந்தது என்பது தான் படமே. மகாதாரா பகவத்- ரேணு சதீஷ் தம்பதியருக்கு ஒரே மகன் கந்தர்வா. அவன் தனியாக இருக்கும் போதெல்லாம் மனித உடலும் வித்தியாசமான தலையும் கொண்ட ஓர் உருவம், அவன் முன் தோன்றி, ‘ நான் தான் கீனோ என்னிடம் வா’ என்று அழைக்கிறது. சிறுவன் பயந்து நடுங்க, பெற்றோர் இது ஏதேனும் ஆவி சேட்டையாக இருக்குமோ என்ற கோணத்தில் மந்திரவாதிகளை அழைத்துப் பார்க்கிறார்கள். அவர்கள் அலசி ஆராய்ந்து வீட்டில் தீய சக்தி எதுவும் இல்லை என்று உறுதி கூறுகிறார்கள். ஆனாலும் மறுநாளே வந்து சிறுவன் முன் நிற்கிறது கீனோ. அதே அழைப்பு.அதே மிரட்டல்.உண்மையில் அந்த கீனோ யார்? சிறுவன் கீனோவில்…
Read Moreதிரௌபதி அம்மனுக்கான புதிய பாடலை இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஜிப்ரான் வைபோதா. இவர் தமிழில் வாகை சூடவா,குட்டிப்புலி, நையாண்டி ,அறம், தீரன் அதிகாரம் ஒன்று, குரங்கு பெடல், ஆயுதம் என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது திரௌபதி அம்மனுக்கான பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார்.அலங்கு படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹீரோவான குணாநிதி அவர்களின் இயக்கத்திலும், அதே படத்தின் தயாரிப்பாளரான சங்கமித்ரா அதாவது அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் தயாரிப்பிலும் உருவாகி உள்ளது. கு கார்த்திக் எழுதிய இந்தப் பாடல் வரிகளை..ஸ்ரீதர் ரமேஷ் ,கோல்ட் தேவராஜ், ரோஷினி JKV, கனகலட்சுமி சுச்சாரிதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் இந்தப் பாடல் வருகிற ஞாயிற்றுக்கிழமை 11ஆம் தேதி மாமல்லபுரம் அருகில் திருவிடந்தை என்ற கிராமத்தில் பாமக சார்பில் நடைபெற இருக்கும் சித்திரை முழு நிலவு இளைஞர்…
Read More‘தி வெர்டிக்ட்’ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீட்டுத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யூலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றி உள்ளனர். ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சரத்குமார் வெளியிட்டிருந்த நிலையில்,ஃபர்ஸ்ட் சிங்கிளை மதன் கார்க்கி வெளியிட்டிருந்தார். இந்தப் படத்தின் டீசரை குஷ்பூ வெளியிட்டு இருந்தார். இந்த மூன்றும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது . அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக…
Read More’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இயக்குநர் ஏழுமலைக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம். புதிய முயற்சியாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது பழைய பாரதிராஜா படங்களைப் பார்ப்பது போல இருந்தது. இந்தப் படம் அறிவால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினுக்கும் நம்ம வீட்டுப் பெண் போல அழகு உள்ளது. ஹீரோவுக்கும் நிச்சயம் பெரிய எதிர்காலம் உள்ளது. சிறந்த டெக்னீஷியன்ஸ் தான் சிறந்த படிப்புகளை உருவாக்குகிறார்கள். உருவாக்குவது கடினம். அதை உடைப்பது எளிது. கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்தவர்களைத் தூண்டி விடுவது…
Read Moreநோர்வே திரைப்பட விழாவில் விருது வென்ற நடிகர் சௌந்தரராஜா
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ள சௌந்தரராஜா நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில், இவர் மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற பெயரை அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை சார்பில் மரங்களை நடுவது மற்றும் பொது மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். நடிப்பு மற்றும் சமூக பணி என பிசியாக சுழன்று கொண்டிருக்கும் நடிகர் சௌந்தரராஜாவுக்கு நோர்வா தமிழ் திரைப்பட விருது விழாவில் “கலைமகன் 2025” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் கடந்து சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதை பாராட்டி இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விருது வென்றது குறித்து நடிகர்…
Read Moreஎன் காதலே – திரை விமர்சனம்
சுனாமியில் தங்கையையும் தங்கையின் கணவரையும் பறிகொடுத்த மீனவர் குப்பத்து தலைவர் ( மதுசூதனன் ) தப்பி பிழைத்த தங்கையின் மகனை தன் பிள்ளையாக எடுத்து வளர்க்கிறார். அவன் வளர்ந்து வாலிபன் ஆகும் நேரத்தில் தலைவரின் மகளுக்கு (திவ்யா) அவன்( லிங்கேஷ்) மீது காதல். அவனுக்கோ அப்படி ஒரு சிந்தனையே இல்லை. ஆனாலும் சிறு வயது முதல் அவன் காட்டி வந்த அன்பை மாமா மகள் தவறாக புரிந்து கொள்வதாலேயே அவளுக்குள் மாமா மனதளவில் மணாளன் ஆகிப் போகிறான். இந்த நிலையில் லண்டனில் இருந்து தமிழ்க் கலாசாரம் கற்க வரும் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் ( லியா) அவனுக்கும் காதல் வர…மாமனே உலகம் என்று வாழும் திவ்யாவுக்கு இது தெரிய வர… விஷயம் அவள் அப்பா வரை போக….கொந்தளிக்கும் தலைவர் அந்தப் பெண்ணை உடனே ஊரை காலி பண்ண…
Read Moreஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்! இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்!
திரு. ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள திரு. ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம், ரசிகர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை இயக்கும் திரு. ஷெரீஃப், தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே கொண்டாட்டமளிக்கும் வரவேற்பையும் பெற்றவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய திரைப்படம், ஒரு…
Read Moreஉலகின் தலைசிறந்த கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” !
ஒவ்வொரு வருடமும் உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் கேன்ஸ் திரைவிழாவிற்கும் படைப்புகள் அனுப்பப்படும். கேன்ஸ் திரைவிழாவில் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டு பார்க்கப்படுவது, படைப்பாளிகளுக்கு உட்சகட்ட மதிப்பாக, மிகப்பெரும் பெருமைக்குரிய விசயமாக கருதப்படுகிறது. இந்த வருடம் 2025 கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் அனுப்பப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களிலிருந்து ஒரு தமிழ்த்திரைப்படமாக மாண்புமிகு பறை திரைப்படம் இடம் பெற்றது தமிழ் திரைத்துறைக்கே பெரும் பெருமை சேர்க்கும் இந்நிகழ்வு, படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பறை இசையின் பெருமை சொல்லும் இப்படம் எல்லா இசையும் ஒன்று தான் ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் புகழும் மட்டுமே பறை இசைக்கு கிடைப்பதில்லை, அந்த பறை இசையின் பின்னணியை, வலியை,பெருமையை சொல்லும் படைப்பாக மாண்புமிகு பறை திரைப்படத்தை அறிமுக இயக்குநர் s. விஜய் சுகுமார் உருவாகியுள்ளார். இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக…
Read More