Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் (சாய் ராம் கல்லூரி) கல்லூரியில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்…, *நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது..* பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்த படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.…
Read Moreதிரையில் ஒரு துணிச்சலான சினிமா முயற்சி: காந்தி டாக்ஸ்
Zee Studios ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வழக்கத்திற்கு மாறான திரைப் படைப்பான “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 30 ஜனவரி 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவீன இந்திய சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒரு மௌனத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ள “காந்தி டாக்ஸ்”, வசனங்கள் ஏதுமின்றி, மௌனமே கதையை சொல்லும், மிக வலுவான ஒரு துணிச்சலான படைப்பாக உருவாகியுள்ளது. சினிமா பெரும்பாலும் பிரமாண்டம் மற்றும் ஒலியால் உருவாக்கப்படும் இக்காலகட்டத்தில், “காந்தி டாக்ஸ்” அதிலிருந்து மாறுபட்டு, உணர்ச்சி மற்றும் அமைதியைத் தனது மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்தப் படம், தனது கருத்தை வெளிப்படுத்த சத்தமின்றி, உணர்வோடு, நிசப்தமாக பேசுகிறது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு…
Read Moreசிறை பட நடிகர் ரகு இசக்கிக்கு நடிகர் சூரி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’. பத்திரிக்கையாளர்கள் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள சிறை திரைப்படத்தில் நாயகியின் அக்கா கணவராக கோவிந்தராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நடிகர் ரகு இசக்கி.. பாலு மகேந்திரா சினிமா பட்டறை மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஆதிசக்தி தியேட்டர்ஸ் ஆகியவற்றில் நடிப்பு பயிற்சி பெற்றவர் நடிகர் ரகு இசக்கி. நடிகர் விவேக் முதன்முறையாக சீரியசான கதாபாத்திரத்தில் நடித்த ‘நான்தான் பாலா’ என்கிற படத்தில் தான் அறிமுகமானார் ரகு இசக்கி. ஆனாலும் விஜய்சேதுபதியின் தம்பியாக தர்மதுரை படத்தில் நடித்த பிறகுதான் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமானார். தர்மதுரையில் விஜய்சேதுபதியின் கடைசி தம்பியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பின்னர் பூஜை, கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள், யாதும் ஊரே…
Read Moreவீரமங்கை வேலுநாச்சியாரின் வீரமான வாழ்க்கை பதிவு!!
இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், சிவகங்கை அரசியாகவும் இந்தியாவின் முதல் பெண்சுதந்திரப் போராளிகளில் ஒருவராகவும் திகழ்ந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரமான வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. அவரது கணவர் முத்துவடுகநாத தேவர், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கொல்லப்பட்ட பிறகு, வேலுநாச்சியார் துன்பத்துக்கு அடங்காமல் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்குகிறார். போர்க்கலை, ஆயுதப் பயிற்சி மற்றும் அரசியல் தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற அவர், ஹைதர் அலி மற்றும் டிப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து, பெண்களால் உருவான சக்திவாய்ந்த படையை உருவாக்குகிறார். குயிலி என்ற வீரமங்கை மேற்கொண்ட தியாகச் செயல் மூலம் சிவகங்கையை மீட்டெடுக்கும் வரலாற்றுச் சம்பவம் திரைப்படத்தின் முக்கிய அம்சமாகும். இந்தக் கதை, தைரியம், தியாகம், தலைமைத் திறன் மற்றும் பெண்சாதிகானத்தின் அடையாளமாக வேலுநாச்சியாரை உயர்த்திக் காட்டுகிறது.
Read MoreTHALAIVAR173 – இயக்குநர் அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படமான ‘#THALAIVAR173’ படத்தினை இயக்கும் இயக்குநரை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI) நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிக்கும், இந்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் தயாரிப்பு பணிகள் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். #THALAIVAR173 திரைப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று பிரம்மாண்டமான வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Read More2005-ஆம் ஆண்டின் காதல் கதை “மாயபிம்பம்” – ஜனவரி 23 அன்று திரைக்கு வருகிறது !!
“மாயபிம்பம்” 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம். K.J. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம், Self Start Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜானகி, ஆகாஷ், ஹரிகிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சிறப்பம்சமாக, நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்பக் குழுவும் முழுவதுமாக புதிய முகங்களைக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் ஆகியோர் தங்கள் முதல் முயற்சியாக இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர். 2005-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் காதல் கதை, அந்த காலத்து உணர்வுகளையும் நினைவுகளையும் உயிர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் மட்டுமின்றி, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளும் அழகாக பின்னியமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும்,…
Read Moreஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்” !!
RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”. குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன், ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையை பேசும் அழகான திரைப்படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். அம்மா எனும் உறவை கொண்டாடும் சமூகம், அம்மாவின் பாசத்தை, தியாகத்தை போற்றும் சமூகம் அப்பாவை பற்றிப் பேசுவதே இல்லை. அப்பாவின் பாசம், பெருமை, வலிகள், எதுவும் எங்குமே பதிவு செய்யப்படுவதில்லை. ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவையும், அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும்…
Read Moreபோதிய திரையரங்கங்கள் கிடைக்காததால் சல்லியர்கள் படம் ஓடிடியில் வெளியாகிறது
CW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்ஷனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் சத்யாதேவி நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து, கிட்டு பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு சேது கருணாஸ், அவரது மகன் நடிகர் கென் கருணாஸ் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மூலமாக இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். அதேசமயம் இப்படம் ஜனவரி முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திரையரங்குகளில் இப்படம் வெளியாக முடியாத…
Read Moreதிரௌபதி 2’ திரைப்படத்தில் நடிகர் சிராக் ஜானி வில்லனாக நடித்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது!
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை பல மொழிகளில் திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) U/A சான்றிதழைப் பெற்றுள்ளது ‘திரெளபதி2’ திரைப்படம். ரிச்சர்ட் ரிஷியின் கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம், அற்புதமான பாடல்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் ஆகியவை படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று வலுவான வில்லன் கதாபாத்திரங்களில்…
Read Moreமார்க் – திரைவிமர்சனம்
முதலமைச்சர் கொல்லப்பட்டதை தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள். கட்சித் தலைமை அனுபவம் ஆற்றல் வாய்ந்த சீனியர் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க, இறந்து போன முதலமைச்சரின் மகனோ, ‘நாளை நானே முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும்’ என்கிறார், அதிரடி பிளஸ் அடாவடியாக. எதிர்த்து கேட்பவர்களின் வாயை பணத்தால் அடைக்கிறார். இதே நாளில் 16 சிறுவர்கள் கடத்தப் படுகிறார்கள். அவர்களை மீட்பதற்கு காவல்துறையில் இடைநீக்கம் செய்யப்பட்ட சுதீப் போராடுகிறார். அவரிடம் முதலமைச்சரின் கொலைக்கு ஆதாரமான வீடியோ இருக்கும் தகவல் சொல்லப்பட்டு, அதைத் தேடி கண்டுபிடிக்கும் பணியும் தரப்படுகிறது. ஒரு பக்கம் கடத்தப்பட்ட குழந்தைகளையும் மறுபக்கம் முக்கியமான ஆதாரமான வீடியோவையும் தேடி சாகச பயணம் மேற்கொள்கிறார் கிச்சா சுதீப். இந்த இரண்டு சம்பவங்கள் இடையிலான தொடர்பையும் கண்டு பிடிக்கும் கிச்சா, அதில்…
Read More