கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்குநர் பிரபு சாலமனின் – கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் பொத்தி பொத்தி உன்ன வச்சு பாடல் வெளியீடு. டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கும்கி 2” படத்திலிருந்து, “பொத்தி பொத்தி உன்ன வச்சு” எனும் முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் “கும்கி”. 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 படத்தை உருவாக்கி வருகிறார். ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றியும், அன்பை பற்றியும்…

Read More

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்

“45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், படக்குழு வெளியிட்ட தனித்துவமான, அதிரடி நடனப்பாடல் “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) ரசிகர்களிடையே இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடல் ஒரு காடு சூழலில்தான் தொடங்குகிறது — இதில் ராஜ் பி ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்துகின்றன, அவர் ஒரு பள்ளத்தில் விழுகிறார். பின்னர் சில ஆப்பிரிக்க பழங்குடி சிறார்கள் அவருக்கு உதவுகிறார்கள்; அவருடைய உடையை மாற்றி…

Read More

அர்ஜூன் அசோகன் – ரோஷன் மாத்யூ நடித்த “சத்தா பச்சா: த ரிங் ஆஃப் ரௌடீஸ்” தமிழ் டீசர் வெளியானது

“கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து வந்த நடிகர்கள், காலம் காலமாக தமிழ் திரை ரசிகர்களின் இதயத்தையும், அவர்களின் சினிமா ருசியையும் வென்றுள்ளனர். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை தாண்டி, “தமிழ்நாட்டின் சொந்த மகன்” என்ற அன்பு பெயரைப் பெற்ற நடிகர்கள் வரிசையில், அர்ஜூன் அசோகன் இப்போது இணைகிறார். *ரோமாஞ்சம்* மற்றும் *தளவரா* போன்று சிறப்பாக பாராட்டப்பட்ட திரைப்படங்களில் அவர் காட்டிய நடிப்பு, ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அவர் தனது நேரடி தமிழ் அறிமுகத்தை ப்ரோ கோட் (Bro Code) மூலம் செய்ய தயாராகி வருகிறார். இந்த நிலையில், அவரது அடுத்த முயற்சி “சத்தா பச்சா” படத்தின் டீசர் வெளியீடு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய நேரத்திலேயே, அந்த டீசர் ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்துள்ளது. இயல்பான…

Read More

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

Verus Productions தயாரிப்பில், கெளதம் ராம் கார்த்திக் நடித்துவரும் “ROOT – Running Out of Time” திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 30, அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. Sci-Fi க்ரைம் த்ரில்லரான இப்படம், சிறந்த தயாரிப்பு நிர்வாகத்தால், திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. “ROOT – Running Out of Time” படத்தை சூரியபிரதாப் S எழுதி இயக்கியுள்ளார். இதன் மூலம் பாலிவுட் நடிகர் அபர்ஷக்தி குரானா தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். படத்தில் பாவ்யா த்ரிகா நாயகியாக நடித்துள்ளார். மேலும், Y.Gee. மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர். உணர்ச்சிமிகுந்த கதாபாத்திரங்களோடு, அறிவியலையும் மனித உணர்வுகளையும் இணைக்கும் தனித்துவமான கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல…

Read More

செகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 இன் தொடக்க விழாவில் ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ டீசரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டது!

இந்திய விமானப்படையின் துணிச்சலையும் பாரம்பரியத்தையும் கௌரவிக்கும் வகையில், கார்கில் போரின் போது நடத்தப்பட்ட உலகின் மிக உயரமான விமான நடவடிக்கையின் (Air operation) கதையைச் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸின் இந்தத் தொடர். புது தில்லி, நவம்பர் 2, 2025: கார்கில் போரில் இந்திய விமானப்படையின் முக்கிய பங்கை எடுத்து சொல்லும் வகையில் நெட்ஃபிலிக்ஸில் வரவிருக்கும் தொடரான ’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ இருக்கிறது. புது தில்லியில் முதன்முதலில் நடைபெற்ற செகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 (SIM-25) இல் வெளியிட்டபோது இந்தியாவின் உற்சாகம் உச்சத்தை எட்டியது. அபிஜீத் சிங் பர்மர் மற்றும் குஷால் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் உருவாக்கப்பட்டு ஓனி சென் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், அபய் வர்மா, மிஹிர் அஹுஜா, தாருக் ரெய்னா மற்றும் அர்னவ் பாசின் உள்ளிட்ட பலர் பணியாற்றியுள்ளனர். புது தில்லி ஜவஹர்லால்…

Read More

தடை அதை உடை –  திரை விமர்சனம்

1990 களில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவரின் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் குணா பாபு, தயாரிப்பாளரிடம் இந்த உண்மை சம்பவத்தை கூறுகிறார். அது தயாரிப்பாளருக்கு திருப்தி அளிக்காததால் நிராகரிக்கிறார். அதனால், அவர் வேறு ஒரு கதையை தயார் செய்து சொல்கிறார். ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட.. மீண்டும் கதை சொல்ல முயற்சிக்கிறார். இதிலாவது அவர் வெற்றி பெற்று இயக்குநர் ஆனாரா என்பது கதை. இப்போது அவர் உருவாக்கிய கதைக்கு வருவோம். ஏழைத் தந்தை ஒருவர் அந்தஊர் பெரிய மனிதர் ஒருவரிடம் வாங்கிய கடனுக்கு காலத்துக்கும் அடிமையாக இருக்க வேண்டிய கட்டாயம். அவர் மட்டுமல்ல அவரது குடும்ப வாரிசுகளும் அந்தக் குடும்பத்துக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். இதில் கொடுமை என்னவென்றால்…

Read More

தேசிய தலைவர் –திரை விமர்சனம்

சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்து கதை தொடங்குகிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு வரும் முத்துராம லிங்க தேவர், ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். அது சமயத்தில் ஆங்கிலேயே அரசின் கை ரேகை சட்டத்தை எதிர்த்து போராடுகிறார். இதற்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் பயணி ப்பவர், கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி, பார்வேர்ட் பிளாக் கட்சியில் இணைகிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் முத்துராமலிங்க தேவர், தென் மாவட்டங்களில் பலம் வாய்ந்த தலைவராக உருவெடுக்கிறார். முத்துராமலிங்க தேவரின் வளர்ச்சியி ல் அச்சமடையும் காங்கிரஸ் தலைமை அவரை மீண்டும் காங்கிரஸில் இணைய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. அது முடியாமல் போக, அவர்…

Read More

திருமணத்திற்கு நூறு சவரன் நகைகளை அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்த மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் இன்று கண்ணகி நகர் சென்று, கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்து, வாழ்த்தினார்! ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகாவின் திருமணத்திற்கு நூறு சவரன் நகைகளை வழங்குவதாக கார்த்திகா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் மன்சூர் அலிகான் வாக்களித்தார்.

Read More

“என்னை நிறைய பேர் முதுகில் குத்தியுள்ளனர்” – நடிகர் ஆனந்த்ராஜ் கண்ணீர்

அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை  தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க,  கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்  திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் அண்ணாதுரை பேசியதாவது.., எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்துள்ள அனைத்து பிரபலங்கள் நண்பர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை அழகாக உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு வலுவான இசையைத் தந்த ஶ்ரீகாந்த் தேவா அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் அருமையாக நடித்துத் தந்த ஆனந்த் ராஜ் சார், சம்யுக்தா மேடம் ஆகியோருக்கு நன்றி. திரைத்துறையில் வருடத்திற்கு வரும் 240 படங்களில் 5 சதவீத படங்கள் தான் வெற்றி பெறுகிறது.…

Read More

ராம் அப்துல்லா ஆன்டனி — திரை விமர்சனம்

இளம் சிறார்களின் தடம் மாறிப் போன வாழ்க்கை. ராம் அப்துல்லா ஆண்டனி மூவரும் ஒரே பள்ளி மாணவர்கள். நண்பர்கள். மதங்களை தாண்டிய நட்பு இவர்களுடையது,. ஒரு நாள் மூன்று நண்பர்களும் ஒன்றிணைந்து தொழிலதிபர் வேல. ராமமூர்த்தியின் பேரனை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் போட்டு விடுகின்றனர். இதனை போலீசாக வரும் சௌந்தரராஜன் கண்டுபிடிக்கிறார். கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் கொலைக்கு பின்னான அதிர்ச்சி தகவல் தெரிய வர, சட்டம் தன் கடமையை செய்கிறது. 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு ஏன் போனார்கள் என்பது கிளைமாக்ஸ் வரையிலான மீதிக்கதை. நண்பர்களாக பூவையார், அர்ஜூன், அஜய் அர்னால் வருகிறார்கள். தலைவாசல் விஜய், சௌந்தரராஜன் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக காட்சிகளில்…

Read More