ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’. இந்தக் கதைக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. *மும்பை, 4 செப்டம்பர் 2025:* மிக ஆபத்தான பிளேயர்ஸ் தங்கள் முகத்தை எப்போதும் வெளியே காட்ட மாட்டார்கள். முகமூடிக்கு பின்பு தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு நடக்கும் குழப்பங்களை கவனிக்கிறார்கள். அக்டோபர் 2 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகும் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடர், ஹைப்பர் கனெக்டட் உலகின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நகரும் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தமிழ் சீரிஸ் ஆகும். ரகசியங்கள் நழுவி, அழுத்தத்தை மீறி நம்பிக்கை உடைக்கப்படும்போது அடையாளமும் அதிகாரமும் வெளிப்படுகிறது என்பதே…
Read Moreபிரபாஸ் – அனுஷ்கா ஷெட்டியின் காட்டி டிரைலருக்கு இதயம் கனிந்த வாழ்த்து
காட்டியைச் சுற்றியுள்ள சர்ச்சை இன்னும் அதிகரித்துள்ளது, அதற்கு காரணம் இந்தியா முழுவதும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் உள்ளார். இந்த செய்தி உடனடியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பாகுபலி ஜோடிகளின் பாசத்திற்காக மட்டுமல்லாமல், அந்த படத்திற்கான எதிர்பார்ப்பையும் உயர்த்தியுள்ளார்கள். அன்போடு “ஸ்வீட்டி” என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டி, இந்த அதிரடியான ஆக்ஷன்-க்ரைம் டிராமாவில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் பிரபாஸ், டிரைலர் குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து, நீண்டநாள் இணை நட்சத்திரம் மற்றும் நண்பர் அனுஷ்கா ஷெட்டிக்கு இதயம் கனிந்த குறிப்பை எழுதியுள்ளார். அவரது பதிவு : “காட்டி ரிலீஸ் டிரைலர் ரொம்ப தீவிரமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் உன்னை பார்க்க காத்திருக்கிறேன் ஸ்வீட்டி. முழு குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!” என்று கூறினார். கிரிஷ் ஜகர்லாமுடி இயக்கியுள்ள காட்டி,…
Read More“பேட் கேர்ள்’ என்னுடைய தயாரிப்பில் கடைசிப் படம்” – இயக்குனர் வெற்றிமாறன்
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பாக வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில், அனுராக் காஷ்யப் வழங்கும் படம் “பேட் கேர்ள்”. அஞ்சலி, சரண்யா, ஹ்ரிது ஹரூன், டீஜே அருணாசலம் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பகிர்ந்து கொண்டதாவது, இயக்குனர் வர்ஷா பேசும் போது, “ஏழு மாதத்திற்கு முன்பு டிரைலர் வெளியீட்டு விழாவில் முதன் முதலாக மேடை ஏறினேன். அன்று முதல் இன்று வரை பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இந்த படம் பல நாடுகளில் பட திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 13 நாடுகளில் 13 பட திருவிழாக்களில் பங்கேற்று வந்திருக்கிறேன். பேட் கேர்ள் பட குழுவினர் அனைவருக்கும் நன்றி. முக்கியமாக இந்த வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு மிக்க நன்றி. வெளிநாடுகளில் திரையிடப்பட்டபோது அனைவரும் அங்கு கொண்டாடினார்கள்.…
Read Moreஅமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான “நிஷாஞ்சி” படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது!!
அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான “நிஷாஞ்சி” படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியுள்ளது. ஆக்சன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த டிரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே (Aaishvary Thackeray) இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதை சித்தரிக்கிறது. ஜார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ளிப் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு பிரசூன் மிஸ்ரா (Prasoon Mishra), ரஞ்சன் சந்தேல் (Ranjan Chandel)…
Read Moreகீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!
Zee studios & Drumsticks Productions தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவங்கியது !! Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது. கோர்ட் ரூம் டிராமாவாக இப்படத்தை உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், R சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.…
Read Moreநடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘குமார சம்பவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
Trailer ▶️ https://youtu.be/cTTlzYh246I ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்பாளர் கணேஷ் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரித்திருக்கிறார். வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில்…
Read Moreசென்னை எடிஷன் கேமிங் திருவிழாவை கிட்டத்தட்ட 17,000 ரசிகர்களுடன் ஸ்கைஸ்போர்ட்ஸ் நிறைவு செய்துள்ளது!
உலகளாவிய அறிவுசார் சொத்து மற்றும் சமூக கட்டமைப்பாளரான ஸ்கைஸ்போர்ட்ஸ், ஆகஸ்ட் 30–31 அன்று சென்னை வர்த்தக மையத்தில் கேமிங் திருவிழாவின் முதல் பதிப்பை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இரண்டு நாட்கள் நடந்த இந்த நிகழ்வில் கேமிங், அனிமே, ஸ்டாண்ட்-அப் காமெடி, காஸ்ப்ளே, கலாச்சாரம் மற்றும் இசை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் சுமார் 17,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். விளையாட்டு முதல் காஸ்ப்ளே, நேரடி ஸ்டாண்ட்-அப் காமெடி மற்றும் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் என சென்னை வர்த்தக மையமே திருவிழாக்கூடமாக மாற்றியது. அங்கு ரசிகர்கள் வெறுமனே பங்கேற்கவில்லை. நிகழ்வை அவர்கள் கொண்டாடி, ஒன்றாக நினைவுகளை உருவாக்கினர். கல்லூரி மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இங்கு ஒன்று கூடினர். இந்த நிகழ்வு மூலம் கேமிங் மற்றும் அனிமே வெறுமனே…
Read Moreகட்டா குஸ்தி 2 பிரம்மாண்ட பூஜையுடன் இனிதே துவங்கியது!
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் “கட்டா குஸ்தி 2” இன்று பிரம்மாண்டமான பூஜையுடன் இனிதே துவங்கியது. முன்னதாக, நேற்று இப்படத்தின் அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோ, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையம் முழுவதும் வைரலாகியது. இதில் விஷ்ணு விஷால், ஐசரி கே கணேஷ் , ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் செல்லா அய்யாவும் தோன்றினார். வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் அமைந்த அந்த ப்ரொமோ, இப்படமும் மிரட்டலாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியது. முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக, ஸ்போர்ட்ஸ்…
Read MoreVijay Antony Film Corporation தயாரிப்பில், அஜய் திஷன் நடிக்கும் “பூக்கி” பூஜையுடன் துவங்கியது!!
Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகும் புதிய திரைப்படம் “பூக்கி”. இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டதுடன், வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், ‘ஓஹோ எந்தன் பேபி’ பட நாயகன் ருத்ரா, ஒளிப்பதிவாளர் சக்திவேல், இயக்குநர் ராம் மகேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இன்றைய தலைமுறை தங்களுக்குள் செல்லமாக, கொஞ்சி அழைக்கும் வார்த்தையே “பூக்கி”. அது கதைக்கு பொருத்தமாகவும் கதைக்குள்ளும் வருவதால் இப்படத்திற்கு பூக்கி என தலைப்பிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் பெருவெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுகமாகி, ஜெயில், காரி, Miss Match (தெலுங்குப் படம்) உள்ளிட்ட படங்களுக்கு…
Read Moreகாந்தி கண்ணாடி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனருக்கு நடிகை அர்ச்சனா புகழாரம்
ஜெய் கிரண் தயாரிக்க, ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேலும் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசும் போது, “அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் தேசிய விருது வாங்கும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நான் அவருடன் இணைந்து பல வேலைகள் செய்து இருக்கிறேன். இப்போது இப்படத்தை தயாரித்திருக்கிறேன். பலர் என்னிடம் ஆம்புலன்ஸ் படத்தை தொடர்ந்து காந்தி கண்ணாடியா?என்று கேட்கிறார்கள். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு…
Read More