அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது… His Untamed Presence, Is Your…
Read Moreஆரியன் — திரை விமர்சனம்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவ்வளவு எளிதில் செய்தியாளர்களிடம் சிக்காத பிரபல நடிகரின் நேர்காணல் நடக்கிறது. அப்போது பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் செல்வராகவன், திடீரென்று எழுந்து அந்த நடிகரை சகட்டுமேனிக்கு திட்டியவாறு துப்பாக்கியால் அவரது காலில் சுடுகிறார். அதே வேகத்தில் பார்வையாளர்களாக வந்த அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக்கி அதிர்ச்சியளிக்கிறார் காவல்துறை அவரது டிமாண்ட் என்ன என்று கேட்க, அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதோடு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரையும் விடுகிறார். பொதுமக்கள் கண் முன்னே இறந்தவர் எப்படி இந்த கொலைகளை செய்வார்? அந்த ஐவர் யார்? ஐவரும் கொல்லப்பட்டனரா என்ற கேள்விக்கு விடையே ஆரியன். தொடர் கொலைகளை தடுத்து நிறுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியாக விஷ்ணு…
Read Moreமெஸஞ்ஜர் –திரை விமர்சனம்
காதலித்த பெண் மனிஷா ஜஸ்னானி ஏமாற்றியதால் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முடிவுக்கு வருகிறார். அதற்காக தூக்கில் தொங்க முயலும் நேரத்தில் அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசேஜ் வருகிறது.தற்கொலை முடிவை தள்ளி வைத்து விட்டு மெசேஜை பார்க்கிறார். அதில், “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருக்கிறார்கள்” என்ற செய்தி இருக்கிறது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார் என்பது தான். இறந்தவர் எப்படி மெசெஜ் அனுப்ப முடியும்? அவர் உண்மையில் இறந்து விட்டாரா ? என்பதை விசாரிக்கும் ஸ்ரீராம் கார்த்திக்குக்கு அவர் இறந்தது உண்மை தான் என்பது தெரிய வருவதோடு, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது ?…
Read Moreஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
ஹனு மேன் திரைப்படத்தின் மூலம், இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களை மறுபரிமாணம் செய்த தொலைநோக்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா (Prasanth Varma)மற்றும் ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) இணைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ‘மஹாகாளி’ படத்தின் நாயகியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மஹாகாளி’ படத்தின் நாயகியாக பூமி ஷெட்டி (Bhoomi Shetty) நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காட்சிப் பிரமாண்டத்திற்கான மேடையை அமைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 50% முடிவடைந்துள்ளதுடன், தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது. நட்சத்திர நடிகர்கள் இல்லாத இப்படத்தில், மிகப்பெரிய தயாரிப்பு செலவினை மேற்கொள்வதில் தயாரிப்பாளர்கள் எந்த தயக்கமும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகைகள் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டாலும், கதையின் உண்மைத்தன்மை மற்றும்…
Read Moreபுகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’!
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து, ‘அங்கம்மாள்’ படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்தை எஸ். கார்த்திகேயன், பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சோய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையின் தழுவலே ‘அங்கம்மாள்’ திரைப்படம். இதுபற்றி பெருமாள் முருகன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படத்தின் கதை என்னுடையது என்றாலும் இதற்கான தழுவல் உரிமையை கொடுத்ததோடு என் பங்கு முடிந்துவிட்டது. இதன் பிறகு, இந்தக் கதையை முழுமையாகப் புரிந்து கொண்டு படமாகக் கொண்டு வந்ததில்தான் இயக்குநரின் திறமை உள்ளது. சிறுகதை சினிமாவாக மாறும்போது அதில் பல விஷயங்கள் மாறலாம். குறிப்பாக இந்தக் கதையில் கிளைமாக்ஸ் மற்றும் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்துவதை சொல்லலாம். 25 நிமிடங்கள் நீளம் கொண்டு குறும்படத்திற்கான கதையை முழுநீள…
Read Moreமர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு நின்றுபோன ஆவியை எழுப்பிவிடுகிறார்கள். ஆர்வத்துடன் தொடங்கிய பயணம், விரைவில் ஒரு திரில்லிங்கான அனுபவமாக மாறுகிறது. குழுவினர் அங்கு…
Read Moreகபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும், கண்ணகிநகர் கபடிகுழுவிற்கும் 10 லட்சம் காசோலை வழங்கிய இயக்குநர் மாரிசெல்வராஜின் பைசன் படக்குழு
கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவினரின் சாதனைகளையும், கபடி விளையாட்டின் உணர்வையும் கொண்டாடும் வகையில், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் பைசன் படக்குழுவின் சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக ₹10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் இன்று கார்த்திகாவின் கண்ணகி நகர் வீட்டுக்கு சென்று வழங்கினார். 2025 ஆம் ஆண்டு பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக கார்த்திகா சமீபத்தில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். இறுதிப் போட்டியில் ஈரானு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார், பல முக்கியமான புள்ளிகளைப் பெற்றார். கார்த்திகா மற்றும் அவரது குழுவினரின் கபடியும்,…
Read Moreஅனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !
அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது… His Untamed Presence, Is Your…
Read Moreஒற்றுமையை வலியுறுத்தும் ‘RAGE OF KAANTHA’ தமிழ்-தெலுங்கு ராப் பாடல் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இணையத்தில் டிரெண்டாகியுள்ளது!
வெளிவர இருக்கும் ‘காந்தா’ திரைப்படத்தின் டைட்டில் டிராக்கான ‘RAGE OF KAANTHA’ புதிய எனர்ஜியையும் அதிர்வையும் இசை உலகில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் பாடல் என்று கடந்து செல்ல முடியாத அளவுக்கு தீவிரமான, கதாபாத்திரத்தால் இயக்கப்படும் இசையமைப்பு, கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் உணர்ச்சிகளைக் கடந்து ஒற்றுமையை எதிரொலிக்கும் வகையில் தமிழ்- தெலுங்கில் ராப்-ஸ்டைல் டிராக்காக வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் பாடலின் டீசர் வெளியான 32 நிமிடங்களிலேயே டிவிட்டரில் டிரெண்ட் ஆனது. இன்று வெளியாகும் ‘RAGE OF KAANTHA’ பாடல் வரிகள் கிளர்ச்சி, மன உறுதி மற்றும் லட்சியத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் பாடலில் ராப் இசையுடன் கூடிய வசனங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் இடம்பெறும். ஜானு சந்தாரின் இசை இருமொழிகளுக்கானது மட்டுமல்ல, இருமொழி ரசிகர்களின் மனங்களையும் உள்ளடக்கியது.…
Read More“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!
டான் டிராக்டன்பெர்க்கின் ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் இங்கிலாந்தில் முதன் முதலாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பார்வையாளர்களும் விமர்சகர்களும் படம் குறித்து தங்கள் உற்சாகத்தையும் நேர்மறை விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். புகழ்பெற்ற இந்த ஃபிரான்சைஸின் சமீபத்திய வரவான இந்தப் படத்தில் எமோஷன், நகைச்சுவை மற்றும் அதிரடி ஆக்ஷன் நிறைந்துள்ளது என்ற பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரே’ (Prey) திரைப்படத்தின் மூலம் இந்தத் தொடருக்கு புத்துயிர் அளித்த டான் டிராக்டன்பெர்க், பிரிடேட்டர் பிரபஞ்சத்தின் புதிய சினிமா பார்வையை வழங்கியதற்காக மீண்டும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். விமர்சகர்கள் இந்த படத்தை, “பிரிடேட்டர் நம்பிக்கைகளை சிறந்த முறையில், விரிவாக எடுத்துரைக்கும் பொழுதுபோக்கு அறிவியல் புனைகதை சாகசம்” என்று பாராட்டுகின்றனர். புகழ்பெற்ற வேற்றுகிரக வேட்டைக்காரர்களான Yautja- வின் கதையை விறுவிறுப்பாக சொல்லியதன் மூலம் பேட்லேண்ட்ஸ் பார்வையாளர்களை சீட்டின்…
Read More