ஸ்ரீகாந்த் ஒதேலா – “தி பாரடைஸ்” படத்திற்காக லெஜெண்ட்டரி  மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்!

இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் தி பாரடைஸ், ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களின் ஆவலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘ஜடால்’ வேடத்தில் நானியின் லுக் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதேலா படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைத்து வருகிறார், இதுவரை அவர் தந்து வரும்  ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களைப் பெரிய அளவில் உற்சாகப்படுத்தி வருகிறது. இன்று, “தி பாரடைஸ்”  படக்குழு, சினிமா வரலாற்றில் தனித்துவமான இடம் பிடித்த மூத்த நட்சத்திரம் மோகன் பாபுவை ‘ஷிகன்ஜா மாலிக்’ என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்குத் திரும்பும் மோகன் பாபுவின் இந்த வேடம், அவர் பழைய “வின்டேஜ்” அழகை மீண்டும் உயிர்ப்பிக்கும்விதமாக அமைந்துள்ளது. கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சொன்னவுடன் மோகன் பாபு பெரும் உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர்…

Read More

‘லாரா திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் அவதாரம் எடுக்கும் புதிய படம் ‘அறுவடை’ !

அண்மையில் வெளிவந்த ‘லாரா’ திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் ஊடகங்களால் பாராட்டப்பட்டது.பட்ஜெட் படங்களில் எதிர்பாராத வகையில் சிறு ஆச்சரியம் அளித்த படம் என்று பத்திரிகைகள் எழுதின. வணிக ரீதியாகவும் அந்த படம் வெற்றி பெற்றது. வசூல் செய்ததால்தான் அதே தயாரிப்பாளர் அடுத்த படத்தைத் தொடங்குகிறார்.’அறுவடை’ என்கிற பெயரில் புதிய படம் உருவாகிறது. இப்படத்தில் ‘லாரா’ தயாரிப்பாளர் கார்த்திகேசன் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் தயாரித்து இயக்குவதுடன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஏற்கெனவே ‘லாரா’ படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் தொடக்க விழா அண்மையில் கோவையில் நடைபெற்றதுடன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. கோவை, கோபிசெட்டிபபாளையம், பவானி ,பொள்ளாச்சி, பகுதிகளில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடக்க உள்ளது. ‘அறுவடை’ திரைப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும்…

Read More

அந்த 7 நாட்கள் – திரை விமர்சனம்

சூரியகிரகண ஆராய்ச்சியில் ஈடுபடும் கல்லூரி மாணவருக்கு அதிசயசக்தி கிடைக்கிறது. அதாவது ஒருவரை உற்றுப் பார்த்த மாத்திரத்தில் அவரது மரண தேதி தெரிகிறது.அது அப்படியே பலிக்கவும் செய்கிறது. இந்நிலையில் அவரது காதலியை உற்று நோக்கிய போது இன்னும் 7நாட்களில் அவள் மரணமடைவாள் என்பது தெரியவர… காதலியைக் காப்பாற்றப் போராடுகிறார். அவருக்குள் இருந்த அந்த அதிசய சக்தி அதுவரை பலித்து வந்த நிலையில், உயிருக்கு உயிரான தன் காதலியும் மரணத்தை தழுவி விடுவாளோ என்ற பதட்டம் நாயகனை ஆக்கிரமிக்க, காதலியை காப்பாற்ற அந்த ஏழு நாட்களும் விடாப்பிடியாக போராடுகிறார். காதலியை காப்பாற்ற முடிந்ததா என்பது உணர்வு பூர்வமான கிளைமாக்ஸ். அஜிதேஜ் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பில் எந்த இடத்திலும் அறிமுக நடிகர் இரண்டு அடையாளமே இல்லாத அளவுக்கு இயல்பாக நடித்து ஆச்சரியப்படுத்துகிறார். காதலியைக் காப்பாற்ற மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் நடிப்பால் மனதை…

Read More

முதல்மொழி தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை நடத்திய அறிவியல் விழா!!

முதல்மொழி தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை நடத்திய அறிவியல் விழா இன்று (செப்டம்பர் 27, சனிக்கிழமை) அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது இந்நிகழ்வில் – முதல்மொழி் அறிவியல் காலாண்டு முதல் இதழ் மற்றும் – ⁠கருப்பு தங்கம் பெட்ரோலியம் நூலை மாண்புமிகு அமைச்சர் வெளியிட்டார். ⁠ மேலும் ⁠வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி (முதல் பரிசு ₹10000, 2 ஆம் பரிசு ₹7000, 3 ஆம் பரிசு 5000 மற்றும் ஆறுதல் பரிசுகள் 15 – ₹ 2000) சிறப்பு செய்து, தமிழறிஞர் மணவை முஸ்தபா நினைவு பரிசை ( ₹ 10000) மறைந்த அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்கள் குடும்பத்துக்கு வழங்கினார் இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக, முதல் மொழி அறிவியல் நூலகம் இரண்டு – 1) அரசினர்…

Read More

சூர்யா ஜோதிகா தயாரிப்பில், தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்கு டிராமா !!

2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் “லீடிங் லைட்” #LeadingLight. சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார். திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி – டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் oscar Qualifying Run க்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது. அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. படத்தின்…

Read More

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும்“சரஸ்வதி”

நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை, மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இந்த சிறப்பான துவக்கத்தில்,“சரஸ்வதி” என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில்  வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். முன்னனி இசையமைப்பாளர் தமன் S இசையமைக்க, A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு – வெங்கட் ராஜன் கலை இயக்கம் – சுதீர் மச்சர்லா திரையுலகில் தங்கள் புதிய பயணத்தை தொடங்கும் இந்த முயற்சி, சகோதரிகள் இருவருக்கும் மறக்க முடியாத தொடக்கமாக அமைந்துள்ளது.

Read More

சரீரம் – திரை விமர்சனம்

கல்லூரியில் படிக்கும் தர்ஷன் பிரியனும், சர்மி விஜயலட்சுமியும் காதலர்கள். நாயகியின் குடும்பத்தார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதன் பிறகும் காதல் தொடரவே நாயகியின் குடும்பம் நாயகனை கொலை செய்யவும் முயற்சிக்கிறது. இந்த விஷயத்தில் சொத்துக்காக நாயகியை அடைய விரும்பும் அவள் தாய் மாமன் நாயகனை கொல்ல கொலை வெறியுடன் அலைகிறான். இந்தக் கொலை வெறிக்கும்பலிடம் இருந்து தப்ப காதல் ஜோடி யாரும் யோசித்துக் கூட பார்க்க முடியாத ஒரு விபரீத காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அது என்ன ? அதன் மூலம் அவர்களது காதல் வாழ்க்கை நீடித்ததா என்பதை வித்தியாசமான முற்றிலும் எதிர்பாராத திரைக்களத்தில் தந்திருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் பிரியன், நடனம், நடிப்பு, ஆக்‌ஷன் என எல்லா ஏரியாவிலும் அடித்து ஆடுகிறார். காதலுக்காகவும், காதலிக்காவும் எதையும் செய்ய துணிந்தவர், தனது சரீரத்தையே மாற்றிக் கொள்ள சம்மதித்து, அதன்…

Read More

பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, தக்‌ஷன் விஜய் நடிக்கும் “சினிமா கிறுக்கன்” படத்தை பூஜையோடு, தொடங்கி வைத்தார்.

தக்‌ஷன் விஜய் முதன்முதலாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிக்கிறார். மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில், சி.பியூலா தயாரிப்பில், தக்‌ஷன் விஜய் எழுத்தில் உருவாகும் “சினிமா கிறுக்கன்” படத்தை, சமூக விரோதி, பொதுநலன் கருதி ஆகிய படங்களை இயக்கிய சீயோன் ராஜா இயக்குகிறார். கதாநாயகன் தக்‌ஷன் விஜயின் அப்பாவாக பிரபல இயக்குனர் ஜி.ம்.குமார் நடிக்கிறார். அம்மாவாக தனுஷின் அம்மாவாக கர்ணன் படத்தில் நடித்த வாழை ஜானகி நடிக்கிறார். விஜய் டிவி அமுதவாணன், லொள்ளுசபா ஜீவா, சாகிதா சுகன்யா, விதுஷ்னியா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனத்தை தக்‌ஷன் விஜய் எழுதுகிறார். இயக்கம் சீயோன் ராஜா. ஒளிப்பதிவு வினு பெருமாள், இசை ஷ்யாம், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு சி.பியூலா. தக்‌ஷன் விஜய் இந்தப் படத்திற்காக தாடி வளர்த்து, புதிய தோற்றத்தில், புதிய…

Read More

ரைட் – திரை விமர்சனம்

காவல் நிலையத்தை மையமாக வைத்து ஒரு திரில்லர் படம் தந்திருக்கிறார்கள். கோவளம் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளராக இருப்பவர் நட்டி. பிரதமர் பாதுகாப்பிற்காக அவர் சென்ற நிலையில் அவர் பொறுப்பில் உள்ள காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார். அவை உண்மை என்று நிரூபிப்பது போல் லாக்கப்பில் இருந்து நைசாக வெளியேற முயன்ற கைதி ஒருவர் குண்டு வெடித்து சிதறிப் போகிறார் அந்த நேரத்தில், தன் மகனை காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண்பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் ஆகியோர் காவல் நிலையத்திற்குள்…

Read More

அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து, செங்கோலைத் தந்ததற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு தேவா நன்றி

 தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரிலேய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெள‌ரவித்தது. ஆஸ்திரிலேயாவிற்கு சென்றிருந்த தேவாவும் அவரது இசைகுழுவினரும் ஆஸ்திரேலேய அரசுக்கு இதற்காக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தேவா கூறியதாவது: “ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கௌரவத்தை வழங்கியதற்காக அன்புள்ள திரு. லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். செப்டம்பர் 24ம் தேதி மாலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டு, மரியாதைக்குரிய செங்கோல்…

Read More