Beyond Pictures தயாரிப்பாளர் ஜெய்வர்தா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான படைப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் திரைப்படத் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். பல்வேறு திட்டங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன; அவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இதற்கிடையில், சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும், மரியா இளஞ்செழியன் இயக்கும் “ப்ரொடக்ஷன் நம்பர் 1” படத்தை அறிமுகப்படுத்தினர். இப்போது அந்த படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக “ஹேப்பி ராஜ்” என அறிவித்துள்ளனர். இயக்குனர் மரியா இளஞ்செழியன் தலைப்பின் பின்னணி குறித்து கூறும்போது, “ஹேப்பி ராஜ்” என்ற தலைப்பு ஒரு எளிய ஆனால் ஆழமான சிந்தனையில் இருந்து உருவானது — சினிமாவை மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம். ஆக்ஷன் நிறைந்த மாஸ் என்டர்டெயினர்களுக்கு ரசிகர்கள் உற்சாகமாகக் குரல் கொடுப்பதை நாம் தினந்தோறும் காண்கிறோம். ஆனால்,…
Read More‘மூன்வாக்’ படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் !!
Link: https://www.youtube.com/watch?v=IwGXuGtQL4A Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’, Behindwoods Founder & CEO திரு. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார். தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என இந்த படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு விதத்தில், ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை படைக்கும் வகையில் உருவாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளால் அசத்தி வரும் படக்குழு இந்த படத்தின்…
Read Moreபோராடும் குணம் மட்டுமே வெற்றியை சாத்தியமாக்கி தோல்விகளை களையச் செய்கிறது: கவிஞர் கருணாகரன்
‘வல்லவன்’ திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கவிஞர் கருணாகரன் பல்வேறு தடைகளை தாண்டி இன்று பல படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ மற்றும் ‘கிணறு’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பாராட்டுகளை பெற்ற நிலையில் தற்போது விஷால் நடிக்கும் ‘மகுடம்’ மற்றும் ‘லைப் டுடே’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் படங்களுக்கும் இவர் பாடல்களை எழுதி வருகிறார். தனது பயணத்தை பற்றி பேசிய கவிஞர் கருணாகரன், “எனது கலை உலக பயணம் போராட்டம் நிறைந்தது. மாற்றுத்திறனாளி இவர் என்ன எழுதுவார் என்று பல பேரின் கண்கள் என்னை நோக்கி கேள்வி எழுப்பிடும். அவர்களின் வார்த்தை மழுப்பலான பதில்களை கொடுக்கும். இவற்றைத் தாண்டி என் மீது…
Read Moreசாரா – திரை விமர்சனம்
பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றும் சாக்க்ஷி அகர்வால், அதே நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் விஸ்வாவை காதலிக்கிறார். பெற்றோர் சம்மதத்தின் பேரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்துக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் சாக்ஷி அகர்வால், அவரது காதலர், சாக்ஷி அகர்வாலின் தம்பி ஆகியோர் கடத்தப்படுகிறார்கள் அந்த நிறுவனத்தில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றும் செல்லக்குட்டி அவர்களை கடத்தி சிறை வைக்கிறார். இத்தனைக்கும் சாக்ஷி அகர்வாலும் செல்லக்குட்டியும் பள்ளிப் பருவ நண்பர்கள். இப்படி இருக்க அவர் அப்படி செய்தது ஏன்? கடத்தியவர் அவர்களை என்ன செய்தார்? கேள்விக்கான விடையை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்வதே இந்த ‘சாரா’. கதையின் நாயகியாக சாரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால், அந்த கேரக்டரில் தேர்ந்த நடிப்பில் பிரகாசிக்கிறார். தன் சிறு வயது நண்பனை, தொழிலாளியாக பார்த்த நிலையிலும் அவர் காட்டும்…
Read Moreசாவீ – திரை விமர்சனம்
நாயகன் உதய் தீப், தனது தந்தை கொலையுண்டு இறந்ததற்கு தன் இரண்டு மாமன்கள் தான் காரணம் என நினைக்கிறார். அதுவே அவர்கள் மீது கோபமாக அவருக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அதே சமயம், இரண்டு மாமன்களில் ஒரு மாமன் மகளை காதலிக்கவும் செய்கிறார். இதற்கிடையே, அவர் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விட.. துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட, பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது. குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார். இந்த தொடர் மரணங்களின் மர்மப் பின்னணிக்கும் காணாமல் போன பிணத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா… பிணத்தை கடத்தியது யார் என்பதை பிளாக் காமெடி ஜானரில் சொல்கிறது படம். நாயகனாக நடித்திருக்கும்…
Read MoreJioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு, JioStar Leadership குழுவினர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் !!
JioStar Head Entertainment Business, South Cluster, திரு.கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil திரு. பாலச்சந்திரன் R, Turmeric Media – CEO திரு. R. மகேந்திரன் ஆகியோர், இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் JioHotstar South Unbound என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர். இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்திய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்து குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் JioStar வழங்கும்…
Read Moreநிர்வாகம் பொறுப்பல்ல – திரை விமர்சனம்
நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட திட்டமிட்ட நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் தொக்காக சிக்கிக் கொள்கிறார். போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்தார்? அவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம் ? கேள்விகளுக்கான விடை பரபர கிளை மாக்ஸ். படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வரும் கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும் அடப்பாவி ரகம். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன், பலவித கெட்டப்புகளில் தோன்றி ஆச்சரியப் படுத்துகிறார். நடிப்பு, நடனம், காமெடி, ஆக்ஷன் என அனைத்திலும் பட்டை கிளப்பியி ருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி…
Read More‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான ஐமேக்ஸ் முன்பதிவுகள் நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது! உங்கள் டிக்கெட்டை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!
இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று முதல் இந்தியா முழுவதும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா நிகழ்வாக கொண்டாடப்படும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் இருக்கைகளை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! ரசிகர்களுக்கு டிக்கெட் புக்கிங்கை எளிமையாக்கும் வகையில் ஐமேக்ஸில் முன்னணியில் இருக்கும் PVR INOX நிறுவனம் திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களை திறந்துள்ளது. PVR INOX உள்ளிட்ட திரையரங்குகள்…
Read Moreவிரைவில் வெளியாகும் புத்தம் புது நேரம் -படத்தின் இசை வெளியீட்டு விழா!!
சக்தி பீடம் ப்ரொடக்ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் “புத்தம் புது நேரம்”. கே.பரஞ்சோதி இசையமைக்க, முரளி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வினில் இயக்குனர் சந்திரகுமார் பேசும்போது, “35 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். பிளாக் & ஒயிட் சினிமாவில் இருந்து கலர், தற்போது டிஜிட்டல் சினிமா வரை வந்து நிற்பது மகிழ்ச்சி. கோவிட் பெருந்தொற்று காலத்தில் கிளப் ஹவுஸில் பேசும்போது சினிமா பற்றி நிறைய…
Read Moreஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!
தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.118.76 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை, படத்தின் கதை பல்வேறு நாடுகளிலும் உள்ள ரசிகர்களுடன் உருவாக்கிய வலுவான இணைப்பை வெளிப்படுத்துகிறது. மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்கும் இசையை பரிசாக அளித்த லெஜண்டரி இசையமைப்பாளர் AR ரஹ்மானின் இசை, ஹிமான்ஷு சர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய மனதை வருடும் எழுத்து, ஆனந்த் L ராய் கொண்டு சென்ற மென்மையான இயக்கம், பூஷண் குமார் அளித்த வலுவான தயாரிப்பு ஆதரவு ஆகியவை இணைந்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் மனதில் இந்த படத்தை ஆழமான உணர்ச்சி மட்டத்தில் தொட்டிருக்கிறது. நடிகர்களின் தீவிரமான நடிப்பும், அடுக்கடுக்கான உணர்ச்சி தரப்பட்ட கதை சொல்லலும் வலுவான…
Read More