நண்பர்கள் தினத்தில் டெட்பூல் & வால்வரின் முன்பதிவு

இந்திய ரசிகர்களுக்கு இந்த நண்பர்கள் தினம் மிகவும் சிறப்பானதாக ‘டெட்பூல் & வால்வரி’னோடு அமைய இருக்கிறது. ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்ற பிறகு மார்வெல் ஸ்டுடியோஸ் டெட்பூல் & வால்வரின் ஐமேக்ஸ் அட்வான்ஸ் புக்கிங்கை நாளை (ஜூன் 8) ஒரு நாள் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது.   கோடைக்கால கொண்டாட்டமாக ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் படம் திரையிடப்பட இருக்கிறது. படத்தில் இருந்து வெளியான முதல் டிரெய்லர், வெளியான 24 மணி நேரத்திலேயே ஆன்லைனில் 365 மில்லியன் முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இரண்டாவது டிரெய்லர் இந்த வாரம் வெளியாகி முந்திய சாதனையை முறியடித்துள்ளது. இது LFGக்கான நேரம்! மார்வெல் ஸ்டுடியோஸின் ஐக்கானிக் சூப்பர் ஹீரோ டெட்பூல் மற்றும் வால்வரின் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 26 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Read More

சினிமாவில் நுழைந்த பத்திரிக்கையாளர் கோடங்கி ஆபிரகாமின் மகன் “சந்தோஷ் பிரபாகர்”

அதி வேகமான இயந்திர வாழ்க்கையில் சிக்கி பல வித போதைக்கு அடிமையாகி பாதை மாறி செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் வெகு சிலரே தங்களின் கனவுகளை நிஜமாக்க ஓடுகிறார்கள். அப்படி காண்கிற கனவுகளில் பிரதானமானது சினிமாவில் நடிகராவது… ஆனால் நிஜத்தில் சினிமாவை எட்டி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு. திரையுலகில் நுழைவதற்கு கண்டிப்பாக சிபாரிசு, வாரிசு என பல சூழல்களில் பலர் நேபோட்டிசம் அடிப்படையில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் களத்தில் இறங்கி தோல்வி கண்டு காணாமல் போகும் காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கல்லூரி படிப்பை முடித்து ஒருவன் சினிமாவை அடைகிறான் என்றால் அவனுக்கு இந்த சினிமா ஏதோ ஒரு இடத்தை வழங்க காத்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அதிலும் முதல் படத்திலேயே வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் செகண்ட் இன்னிங்க்ஸ் படமான “ஹரா” படத்தில்…

Read More

பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020) வரிசையில் BAD BOYS: RIDE OR DIE (2024)

‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமான இது, ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)’ படத்தின் தொடர்ச்சியாகும். ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), ‘பேட் பாய்ஸ் 2 (2023)’ படத்திற்கு வழி வகுத்தது (2003). இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர். இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்! 4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியுடன், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6 ஆம் தேதி படம் வெளியிடப்படுவதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம். உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ‘பேட் பாய்ஸ்’ அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான…

Read More

கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர்

இந்தியக் கல்வி வளர்ச்சியில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் கோ.விஸ்வநாதன் ஐயா அவர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டி அமெரிக்காவின் பிங்ஹாம்டன்  பல்கலைக்கழகம், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் வேலூரில் நடைபெற்ற விழாவில் நானும் பங்கேற்றேன். கல்வித்துறையில் எனக்கு ஆசானாக விளங்கும் ஐயா அவர்கள் ஆற்றிய கல்விச்சேவை பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியது, உயர் கல்வியின் முக்கியத்துவத்தை மக்களிடம் போதித்தது. இந்தியாவின் பல மூலைகளில் இருந்தும் இங்கு கல்வி பயில வந்த மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியது. இத்தகைய மகத்தான மனிதரின் பாராட்டு நிகழ்வில் பங்கேற்றது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.

Read More

என் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் விரும்புவார்கள் – ராஜீவ்மேனன்

ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பிற்கு பலரது பாராட்டுகளையும் பெற்றார். இப்போது ‘வெப்பன்’ திரைப்படத்தில் இன்னுமொரு அசரடிக்கும் நடிப்பைக் கொடுத்துள்ளார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் இந்தப் படம் ஜூன் 7, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “இயக்குநர் குகன் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது கதையின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, தெளிவு மற்றும் சரியான நோக்கம் இதையெல்லாம் என்னால் உணர முடிந்தது. இந்தக் கதையில் ஒரு வலுவான கதாபாத்திரத்திற்காக அவர் என்னை அணுகியது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், இந்த கதாபாத்திரத்தை பல முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்புவார்கள் என்பது எனக்குத்…

Read More

‘வெப்பன்’ பற்றி நிறைய விஷயங்களை பேச வேண்டும் என்று நினைக்கிறேன்’ – வசந்த் ரவி

நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனது இயல்பான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் ஜூன் 7, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் குறித்து நடிகர் வசந்த் ரவி கூறும்போது, ”’வெப்பன்’ திரைப்படத்தின் விஷுவல் புரோமோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அபரிதமான வரவேற்பு எங்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. படத்தையும் பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம். எமோஷன்ஸ், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் கலவையாக படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை பார்வையாளர்களை நிச்சயம் இந்தப் படம் மகிழ்விக்கும். ஒரு நடிகராக நான் எப்போதும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து எனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். அந்த வாய்ப்பு ‘வெப்பன்’…

Read More

’வெப்பன்’ பட இயக்குநர் குகன் சென்னியப்பன் இன்னும் உயரத்திற்குச் செல்வார்

’வெப்பன்’ திரைப்படத்தின் அசரடிக்கும் விஷூவல் மற்றும் டிரைய்லர் காட்சிகள் திரையுலகினர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஹ்யூமன்’ எலிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைக்கதை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 7, 2024 அன்று வெளியாகிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் பேசுகையில், “படம் உருவாக்குவதில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் நோக்கமும் ஒன்றாக இருந்தால் படத்தின் வெற்றி என்பது தவிர்க்க முடியாததாகிவிடும். ’வெப்பன்’ படத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான். படக்குழுவினர் அனைவரும் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த சூழல் எனக்கு நேர்மறையாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை, திரைப்படத் துறையின் தரத்தை உயர்த்த விரும்பும் தயாரிப்பாளர்கள் கிடைப்பது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம். மில்லியன் ஸ்டுடியோவின் எம்.எஸ்.மஞ்சூர், எம்.எஸ்.அப்துல் காதர் மற்றும் எம்.எஸ்.அஜீஷ்…

Read More

வெப்பன் திரைப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்

நடிகை தன்யா ஹோப் அனைத்துத் தரப்பு பார்வையாளர்களாலும் விரும்பப்படும் நடிகையாக தமிழ் சினிமாவில் உள்ளார். குறுகிய காலத்தில், பலதரப்பட்ட கேரக்டர்களில் தனது நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார் தான்யா. இப்போது, குகன் சென்னியப்பன் இயக்கத்தில் ஜூன் 7, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக உள்ள ’வெப்பன்’ படத்திலும் அவர் வலுவான கதாபாத்திரத்தைப் பெற்றிருக்கிறார்.   “குகன் சார் இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, முதலில் என் மனதில் வந்தது நடிகர்கள் சத்யராஜ் சார், ராஜீவ் மேனன் சார், வசந்த் ரவி மற்றும் பல பெரிய நடிகர்களுடன் இணைந்து பணிபுரிகிறேன் என்பதுதான். இதுவரை நான் நடித்தப் படங்களில் இருந்து இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நான் செய்யாத வித்தியாசமான ஒன்று. என்னுடையது மட்டுமல்ல, படத்தில் நடித்திருந்த எல்லோருடைய கதாபாத்திரங்களுமே வலுவானதாக இருக்கும். ஜூன் 7ம்…

Read More

சஸ்பென்ஸ் நிறைந்த “நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்” வெஃப் சீரிஸ்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது! டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது மலையாள வெப்சீரிஸ், நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் சீரிஸை, விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் அதிரடி திருப்பங்களுடன் உருவாகியுள்ள ஹனிமூன்ஸ் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.   சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி,…

Read More

எதிர்பார்ப்பை எகிற வைத்த கல்கி 2898 AD டிரைலர் தொடர்பான அறிவிப்பு

கல்கி 2898 கிபி திரைப்பட டிரெய்லர் ஜூன் 10, 2024 இல் வெளியாகிறது!! இந்தியாவெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கல்கி படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் & திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள “கல்கி 2898 கிபி” சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான டிரெய்லர் ஜூன் 10, 2024 அன்று வெளியிடப்படவுள்ளது. அமேசான் பிரைமில் புஜ்ஜி & பைரவா என்ற தலைப்பில், படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் அனிமேசன் வீடியோ வெளியான பிறகு, உலகம் முழுவதிலும் இப்படத்தின் மீதான அறிவிப்பு அதிகரித்துள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கம், புதன்கிழமை காலை டிரெய்லர் வெளியீட்டு செய்தியைப் பகிர்ந்து கொண்டது: “ஒரு புதிய உலகம் காத்திருக்கிறது #Kalki2898AD டிரெய்லர் ஜூன் 10 முதல்.” https://x.com/kalki2898ad/status/1798210288849940678?s=46&t=td36fd1VqvQ20yDywt6_9Q டிரெய்லர் வெளியீட்டு…

Read More