பெற்றோர்களுக்கு உறுதுணையாக இல்லாதவர்கள் பிள்ளைகளே இல்லை – ’டிரம்ப் கார்டு’, ‘சேரநாட்டு யானைதந்தம்’ பட அறிமுக விழாவில் இயக்குநர் பேரரசு ஆதங்கம்

லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’. வெளிநாட்டில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வெளிநாட்டுக்கு படிக்க செல்ல விரும்புகிறவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விசயங்களையும் மையமாக வைத்து உருவாகும் ‘டிரம்ப் கார்டு’ படத்தை ஜியோ ராஜகோபால் இயக்குகிறார். காதல் கதையாக உருவாகும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தை பூலோகம் ரவி இயக்குகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் குமார்.டி படத்தொகுப்பு செய்கிறார். ‘டிரம்ப் கார்டு’ படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பிலாக் பாண்டி நடிக்கிறார். இவருடன் ஜி.எம்.குமார், இ.வி.கணேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படங்களின் அறிமுக விழா நவம்பர் 15 ஆம் தேதி,…

Read More

டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்

சென்னை, நவம்பர் 14, 2025 — சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி, நவீன டெர்மடாலஜி மற்றும் காஸ்மெடாலஜி நிபுணத்துவத்தால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை ஸ்கின் கேர் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் டெர்மிபியூரின் பார்வையை வெளிப்படுத்தியது. அறிவியல் புதுமைகள், தனிப்பயன் சிகிச்சைகள் மற்றும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட ஸ்கின் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு, இந்த கிளினிக் அழகு, நம்பிக்கை மற்றும் மருத்துவத் தரத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் நோக்கம் கொண்டுள்ளது. நடிகை பிரியா ஆனந்த் கூறியதாவது: “டாக்டர் சௌம்யா எனக்கு மிக நெருங்கிய தோழி. நான் முதல் முறையாக அவருடைய…

Read More

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ்,…

Read More

‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’, காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த ஆங்கிலப் படத்தின் டீசர் வெளியீடு, திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகிறது

5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் (லண்டன், யுகே) நிறுவனம் தயாரித்து அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்ய காதல் கதையான ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா. தக்ஷ் மற்றும் மாடில்டா பாஜர் முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று இது வரை 1.7 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா, ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்திற்கு தனது காலத்தால் அழியாத திறமையின் மூலம் சிம்பொனி இசையை வழங்கியுள்ளார். மாஸ்கோ போ டை ஆர்கெஸ்ட்ராவுடன் பதிவு செய்யப்பட்ட இந்த இசை, படத்திற்கு ஆழத்தையும் வலுவையும் சேர்த்துள்ளது. இப்படத்தின் மூலம் லண்டனைச் சேர்ந்த திறமை…

Read More

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் #NBK111 படத்தில் நடிகை  நயன்தாரா இணைந்துள்ளார் !!

அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட  வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில்  மீண்டும் ஒரு புதிய படமான,  #NBK111 வரலாற்றுச் பின்னணியில் மாபெரும் படைப்பாக  உருவாகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இப்போது படம் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — மகத்தான, வலிமையான ராணியின் அத்தியாயம் துவங்கியுள்ளது. அழகும், கம்பீரமும் கலந்த நயன்தாரா, இந்த மாபெரும் வரலாற்றுப் படத்தில் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக, கதாநாயகியாக இணைந்துள்ளார். படத்தின் கதையில் முக்கியத்துவமிக்க, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ஸ்ரீ…

Read More

ஆட்டோகிராப் – திரை விமர்சனம்

மழை பெய்ததும் குபீ ரென வெளிப்படுமே ஒருவித மண் வாசனை… அந்த வாசனை நாசி வரை போய் மனதை நிறைக்குமே… அப்படி ஒரு சுகானுபவம் தான் இந்த ஆட்டோகிராப். தோல்வி என்று தெரியாமலே தோற்றுப் போன பள்ளிக் காதல்… காதல் கைகூடி வந்தநேரத்தில் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு அவமானத்தில் முடிந்த கல்லூரிக் காதல்… இந்த சோகத்துக்கு நடுவே ஒரு சுகராகமாக வந்து சேர்கிறாள் ஒரு சினேகிதி. காதல் வலியில் திணறிக் கொண்டிருந்த அவனுக்குள் தனது நட்பால் புது வெளிச்சம் பாய்ச்சு கிறாள் இந்த சினேகிதி. இப்போது சினேகிதி அவனுக்கு ஒரு நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்து அவன் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகிறாள். இப்போது நாயகனுக்கு திருமணம். பெண் பார்த்ததே இந்த சினேகிதி தான். திருமணத்துக்கு தன் முன்னாள் காதலிகளை அழைக்க விரும்புகிறான் நாயகன். அவர்கள் இப்போது எங்கே எப்படி…

Read More

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் ‘கொம்புசீவி’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புசீவி’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர். கவிஞர் பா விஜய் வரிகளில் உருவான “அம்மா என் தங்ககனி, நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்” என்ற உணர்வுபூர்வமான பாடலை இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்பாடல் ‘கொம்புசீவி’ படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம்,…

Read More

சக்திவேல் நாகப்பன் (எ) சிவசக்தி பிரபு எழுதி இயக்கி நடிக்கும் ” ரா ட் ட ” திரைப்படம் வருகிறது!

இந்த படத்தில் அரசியல் பேசல.. ஆன்மீகம் பேசல … ஜாதி மதம் பேசல … வன்முறை பேசல… மது போதை பீடி சிகரெட் கலாச்சார சீர் கேட்ட பேசல… சண்டை சச்சரவை பேசல… டிஜிட்டல் பேசல… கைப்பேசி காட்டல… போலீஸ் அடிதடி பேசல.. துப்பாக்கி கத்தி இதுபோன்று ஆயுதம் பேசல… ரத்தம் தெறிக்கல… கொலை கொள்ளை கற்பழிப்பு பேசல…. ஆனால்… வாழ்வியலை நயம்பட பேசி தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான திரைக்கதையில் காட்டும் திரைப்படம்தான் * “ராட்ட ” இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் சக்திவேல் நாகப்பன் கூறும் பொழுது நான் பேசல… எங்களின் படம் பேசும்… என்றும் மேல் கண்ட எந்தவித தவறான பழக்கவழக்கங்களை காட்டாத இத் திரைப்படத்தை மக்கள் ஆதரவு தர வேண்டும். திரை ரசிகர்களும் மக்களும் ரசித்து கைதட்டி ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை…

Read More

வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் படம் சாவு வீடு  நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது !!

ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம்  சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் சாவுப்புகைப்படங்கள் நிறைந்திருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது. இப்படத்தினை பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன்  அஜித் கூறுகையில்.., ஒரு சாவு வீடு, அங்கு  எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம்,  அதைத்தொடர்ந்து நடக்கும்  சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.   கதையை எழுதுவதற்கு முன்பே தலைப்பை எழுதிவிட்டேன்.கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு…

Read More

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன்  திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. இப்படம்  வரும் நவம்பர் 21  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை,  ஊடக  மற்றும் பண்பலை நண்பர்களை சந்தித்து, படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் *தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசியதாவது..,* மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இறைவனை வேண்டிக்கொண்டிருந்தேன், இந்த விழா எப்படி நடக்கும் என நினைத்தேன், எல்லாம் ஒன்றாக இணைந்து இன்று விழா நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்கு ஒப்புதல் தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பூ வித்து வளர்ந்தவன், நான் அர்ஜுன் சாரின் ஜெண்டில்மேன்…

Read More