கதை…. அப்பாவை இழந்த சரண் தன் தாய் ராதிகாவுடன் வசித்து வருகிறார்.. ஏற்கனவே குடும்பத்தில் கடன் பிரச்சினை அதிகமாக இருப்பதால் குறுக்குவழியில் அதிக பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.. இவருக்கு துணையாக இருக்கிறார் போலீஸ் இன்பார்மர் பால சரவணன்.. கடல் வழியாக இந்தியாவிற்கு வரும் ஹெராயன் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி அதன் மூலம் கோடி கணக்கில் சம்பாதிக்க திட்டமிடுகிறார் சரண்.. ஏற்கனவே இந்த தொழிலில் உலக அளவில் கொடிகட்டி பறக்கும் லால் மற்றும் ஜே.டி. சக்கரவர்த்தியிடம் இவர்களின் திட்டம் பலித்ததா.? இவர்களின் சதி திட்டத்தை அறிந்த போலீஸ் சமய முரளி அவர் ஒரு திட்டம் போடுகிறார்.. இறுதியில் என்ன ஆனது.? இந்த சதி திட்டத்தில் சிக்கியவர் யார்.? மீண்டது யார்..? என்பதெல்லாம் யூகிக்க முடியாத அதிரடியான சம்பவம்.. நடிகர்கள்… வடசென்னை படத்தில் ஐஸ்வர்யாவின் சகோதரனாக நடித்த சரண்…
Read Moreபனி விழும் இரவு விமர்சனம்… 3/5
கதை … கொடைக்கானலில் இருக்கும் தன் மனைவியின் பங்களாவுக்கு வருகிறார் நாயகன் அருண் கார்த்திக்.. அடுத்த நாளே தன் மனைவியை காணவில்லை.. சிலர் தன்னை அடித்து மனைவியை கடத்தி விட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார்.. இதனையடுத்து அந்த பங்களா செக்யூரிட்டி அக்கம் பக்கத்தினர் என அனைவரிடம் விசாரிக்கிறார் போலீஸ் சேரன் ராஜ் மற்றும் கருப்பு நம்பியார்.. ஆனால் அந்த செக்யூரிட்டி உள்ளிட்ட அனைவரும் அவர் மட்டும்தான் வந்தார்.. அப்படி ஒரு பெண்ணை நாங்கள் பார்க்கவில்லை என்கின்றனர்.. அப்படி என்றால் அவர் சொல்லும் அந்த பெண் யார்.? அவர் எங்கு சென்றார் என்பதை எல்லாம் யூகிக்க முடியாதபடி கற்பனை கலந்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.. நடிகர்கள்… ஒரு நொடி படத்தில் முக்கிய கேரக்டர் நடித்த அருண் கார்த்திக் இந்த படத்தின் கதை நாயகன்.. அலட்டிக்…
Read Moreஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்ட தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தங்கப்புள்ள’ பாடல்
நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ எனும் முதல் பாடலை (First Single) இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழத்தையும், பிரிவின் வலியையும், தந்தையின் அளவற்ற அன்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாகத் தமிழ் சினிமாவில் அப்பா – மகன் அல்லது அப்பா – மகள் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களையும், அவர்களுக்கிடையேயான பாசத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வுகளை…
Read Moreஎனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்!
தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரையுலகிலும் ’சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ஷெர்ரி அகர்வால். 1990களின் காதலில் இருந்த அப்பாவித்தனத்தையும் பழைய நினைவுகளையும் இன்றைய தலைமுறையின் உணர்வுகளோடும் ரசனைகளோடும் இணைக்கும் உணர்வுப்பூர்வமான மியூசிக்கல் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சைக்கிள் கேப்’. இசை, காதல் மற்றும் அனைவருக்கும் நெருக்கமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், இரண்டு தலைமுறைகளின் காதல் உணர்வுகளையும் ஒரே கதையில் இணைக்க முயல்கிறது. கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை மீட்டெடுக்கும் அதேவேளையில், இன்றைய தலைமுறை ரசிகர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ட்யூப்லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள இப்படத்தில், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார். ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம்…
Read Moreஅரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்!
‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்ட்டைல்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த மிதுன் மகேஸ்வரன், தற்போது மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் ‘அரிகொம்பன்’ திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டார். காட்டு யானையை மையமாகக் கொண்டு, அதே காட்டில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் எடுத்துரைக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. மேலும், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கேரளத்தைச் சேர்ந்த தேவிகா கிருஷ்ணன் நடித்துள்ளார். ‘திருடா திருடி’ படத்தின் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜய் இப்படத்தில்…
Read Moreவாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி: ‘லவ் 3. ஓ’ (Love 3. O ) புதுமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீருடன் உருக்கம்!
மூன்று தலைமுறையிலும் அந்தந்தத் தலைமுறையினர் காதலை எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் கூறுகிற இப்படம், காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா கதை ,திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கதாநாயகியாகவும் நடித்து இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியமான வேடம் ஏற்று நடித்துள்ளார். நாயகி ஆர்னிகாவுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோயம்புத்தூர் மாப்ள, கே என் ஸ்மைலி எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். அரவிந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளராக பிரசன்ன குமார் பங்கேற்றுள்ளார் . மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார்…
Read More“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!
நெட்ஃபிளிக்ஸின் ‘அக்கா’ தொடரில் பவானியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். விசுவாசத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசாட்சி. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்படும் ஒரு பாரம்பரியம். இவை அனைத்தையும் தலைகீழாக மாற்ற அச்சுறுத்தும் ஒரு போட்டியை பெர்னூருவில் எதிர்கொள்கிறாள் பவானி. தனது அதிகாரத்தை நிலைநாட்டவும் இதுவரை இல்லாத அளவுக்குச் சோதனைகளை எதிர்கொள்பவள்தான் பவானி. ‘மகாநதி’, ‘சாணி காயிதம்’, ‘தசரா’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பிற்க்காக பாராட்டுகளைப் பெற்ற கீர்த்தி சுரேஷ், இதுவரை முயற்சி செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’அக்கா’ தொடரில் நடிப்பதற்கு முன்பு தன்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என தான் நம்பவில்லை என்கிறார் கீர்த்தி சுரேஷ். தலைமுறை தலைமுறையாகப் பெண்களே ஆட்சி செய்து, தங்களுக்குச் சொந்தமானவற்றைப் பாதுகாத்து வரும் ஒரு அரசாட்சியின் பின்னணியில் ‘அக்கா’ தொடர் உருவாகியுள்ளது. அதிகாரம் என்பது பாரம்பரியமாகக் கைமாறும், விசுவாசம் என்பது…
Read More‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு’. அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்…, ‘தயாரிப்பாளர் சதா முருகன் பேசியதாவது.., “பனிவிழும் இரவு என்பது மாறுபட்ட, கவித்துவமான தலைப்பு. நான் ஒரு பாடலாசிரியரும் கூட. சமீபகாலமாக வெளியாகும் பல தமிழ்ப் படங்களுக்குத் தமிழின் அழகையும் பெருமையையும் தாங்கும் தலைப்புகள் அமைவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதனால், அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம். ஆண்டுதோறும் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்கள்…
Read MoreJioHotstar Unveils Trailer of Tamil Fantasy-Comedy Love Always, Featuring an AI-Recreated Voice of Legendary Crazy Mohan
_Directed by Madhumitha, the eight-episode limited series blends age-reversal fantasy with witty humour and eccentric characters, premiering October 30 exclusively on JioHotstar_ Link: https://youtu.be/VcwSOA7URHU?si=yGJP52hqwgCp5RtI Chennai, October 21, 2026: JioHotstar has unveiled the trailer of Love Always, an upcoming Tamil fantasy-comedy series directed by Madhumitha, set to premiere on October 30. Bringing together magic, humour and the complexities of relationships, the eight-episode limited series promises a quirky take on age reversal, driven by unexpected situations and entertaining character dynamics. Adding a special touch to the trailer is the AI-recreated voice of…
Read Moreஆஸ்கார் தகுதிப் பட்டியலில் இடம் பிடித்த ‘கெவி’ திரைப்படம்: 400 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக வெள்ளகெவி கிராமத்திற்கு ரேஷன் கடை வந்ததை கொண்டாடும் படக்குழு!
சென்னை — 98-வது ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் (Oscar Consideration Ballot) நுழைந்து உலக அரங்கில் கவனம் ஈர்த்துள்ள ‘கெவி’ (Gevi) திரைப்படத்தின் படக்குழு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிஜ உலக வெற்றியைத் தங்களது ‘மலை கீதத்தின்’ (Hill Anthem) மூலம் கொண்டாடியுள்ளது. ஆர்டப் ட்ரையாங்கிள்ஸ் (Artuptriangles Film Kampany) தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தின் மிக முக்கியமான இப்பாடலுக்கு, இசை ஜாம்பவான் ‘தேனிசைத் தென்றல்’ தேவா தனது கணீரென்ற குரலால் உயிர் கொடுத்துள்ளார். இப்பாடலின் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். பாடலைத் தொடர்ந்து, தேவா சார் பாடியுள்ள இப்பாடல் ஒரு மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டாடுகிறது. கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகெவி கிராமத்தின் 400 ஆண்டுக்கால வரலாற்றில், முதல்முறையாக ஒரு அரசு ரேஷன் கடை கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் உள்ள எளிய மக்களின்…
Read More