என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியைக் கொண்ட சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் 9-வது திரைப்படம் ‘நவோரியா’. டி பி சி ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் திருக்குமரன் கதிர்வேல் இப்படத்தைத் தயாரிக்கிறார். சிம்புதேவன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படமும் காமெடி, ஆக்ஷன் மற்றும் ஃபேண்டஸி ஆகிய மூன்று அம்சங்களும் இணைந்த ஒரு முழுநீளப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். இவர்களுடன் ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், மன்சூர் அலிகான், கஸ்தூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 நாட்களுக்கும் மேலாகத் திருநெல்வேலி, கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மேலும்,…
Read Moreகீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் நடிப்பில் உருவாகும் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒரு வழக்கை மையமாகக் கொண்டு, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடனும் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டு, திரைப்படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில்… Drumsticks Productions நிர்வாக இயக்குநர் விவேக் பேசியதாவது, இன்றைய நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் Drumsticks Productions மற்றும் Zee Studios சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில்…
Read Moreகாதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!
திரையரங்குகளில் பார்த்து ரசித்த ஒரு சில திரைப்படங்களின் கதை முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கும். அத்தகைய திரைப்படமான ‘ஹைக்கூ’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 20 அன்று வெளியாகிறது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஹைக்கூ’, இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட காதல் திரைப்படங்களில் ஒன்று. இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது. யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள இப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. படம் குறித்து நடிகர் ஏகன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹைக்கூ’ திரைப்படத்துக்கு…
Read Moreமார்வெலின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்திற்கான முன்பதிவு தொடங்கிய வேகத்திலேயே டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்கின்றன!
உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்திற்கான முன்பதிவு இந்தியாவில் நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கியது. இதையடுத்து, படத்தைக் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #OpenDoomsdayBookings என்ற ஹேஷ்டேக் மூலம் வைத்த கோரிக்கையின் எதிரொலியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நாடு முழுவதும் இதற்கான கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிகாலை 12.01 மணி முதல் இரவு 11.55 மணி வரையில் பல்வேறு காட்சிகள் திரையிடப்பட உள்ளன. மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதுடன், சில காட்சிகள் ஏற்கெனவே முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளன. முன்பதிவு…
Read Moreபக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!
Zee 5, பல்வேறு வகைகளில் தரமான பிராந்தியக் கதைகளை வழங்கி, ஒரிஜினல் வெப் சீரிஸ் பிரிவில் தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அந்த வகையில், தனது கதை சொல்லும் முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ஆக்டோபஸ்’ (Octopus) தொடரின் டிரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளது. மர்மம், எதிர்பாராத திருப்பங்கள், நகைச்சுவை மற்றும் குடும்பம் போன்ற நெருக்கமான குடியிருப்புப் பகுதியின் சுவாரஸ்யமான உறவுகளை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ளது. பாராட்டப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி இந்தத் தொடரின் டிரெய்லரை வெளியிட்டார். அர்ச்சனா ரவிச்சந்திரன், அஷ்வின் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட தொடர், நவம்பர் 27, 2026 அன்று Zee 5 தளத்தில் பிரத்யேகமாக…
Read Moreசென்னையில் நடைபெற்ற துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் பத்திரிகையாளர் சந்திப்பு!
துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் பவன் சதினேனி ( Pavan Sadineni) இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT). கீதா ஆர்ட்ஸ் ( Geetha Arts) மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema) நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா ( Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் (Sandeep Gunnam) மற்றும் ரம்யா குன்னம் ( Ramya Gunnam) தயாரித்துள்ளனர். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஸ்ருதி ஹாசன் மற்றும் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) படத்தின் விளம்பரப் பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் இன்று (நவம்பர் 17) நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு செய்தியாளர்களைச்…
Read Moreநவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம்!
பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘’சிட்டுக்குறிஞ்சி’. ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில், இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஹங்கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவினரும் பங்களித்துள்ளனர். கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம், தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த், நடிகர்கள் ரஜித் சிஆர், ஆதவன், ஜி.எம். குமார், நக்ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக், வெங்கடேஷ், வி.ஜே. பப்பு உள்ளிட்ட…
Read Moreஎஸ்.ஆர். பிரபாகரன், மணிகண்டன் இணைந்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்!
Watch the trailer now: https://youtu.be/wL3v1rvh1z4 ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில், இனிகோ பிரபாகர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தில் இனிகோ பிரபாகர், அஞ்சு கிருஷ்ணா அசோக், ‘பிக் பாஸ்’ சத்யா, சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி, ராஜன், உதயராஜ், ‘அருவி’ பாலா, யாசர், பிரதிக்ஷா, பசுபதி ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரணவ் சூரஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை எஸ்.என். ஃபாசில் கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்…
Read More‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது
Watch the trailer now: https://youtu.be/wL3v1rvh1z4 நாகர்கோவிலில் பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை முன்னணி விளம்பரப் பட இயக்குநரான சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் பேனரில் குகன் சண்முகம் ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை வரும் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியிட உள்ள நிலையில், படத்தின் டிரைலர் சென்னையில் இன்று (நவம்பர் 16) வெளியிடப்பட்டது. இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ படத்தில் அஞ்சு கிருஷ்ணா அஷோக் நாயகியாக நடிக்க சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சிவபிரபு செல்வராஜ்,…
Read Moreஎல் கே சுதீஷ் எம் பி இல்லத் திருமண விழா..
தேமுதிகவின் பொருளாளரும் , திரைப்படத் தயாரிப்பாளரும்,ராஜ்யசபா எம்பியுமான எல் கே சுதீஷ் எம் பி மற்றும் பூர்ண ஜோதி சுதீஷ் அவர்களின் மூத்த மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ எம் பி பி எஸ் அவர்களுக்கு ஓசூரைச் சார்ந்த அகில் குமார் என்பவரோடு திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் வரும் நவம்பர் 22 ஆம் தேதி காலை 8:30 மணி முதல் 10 மணி வரை திருமணம் நடைபெற உள்ளது.. வரவேற்பு நிகழ்ச்சியும் அதே ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் நவம்பர் 21ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் நடைபெற உள்ளது.. இந்த திருமண நிகழ்ச்சியை கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்குப் பிறகு அந்த குடும்பத்தில் நடக்கும் முதல் திருமண விழாவாக அனைவரும் கருதுவதால். தேமுதிகவின்…
Read More