நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன. ஒரு சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் அமைகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரசிகர்கள் பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், இந்த அறிவிப்பைப் பகிர்வதற்கு இதுவே மிகச் சிறந்த தருணமாக அமைவதுடன், மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த ஒரு அற்புதமான ஆண்டாக வரவிருக்கும் காலம் அமைய, அவருக்கு அனைவரும்…
Read Moreப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.
அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும்…
Read Moreசாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!
உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ’மாவீரன்’ மற்றும் ’3BHK’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இப்போது அந்த படத்திற்கு ’காவிய காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. நகைச்சுவையோடும் கலர்ஃபுல்லாகவும் உருவாகியுள்ள இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாரத் மற்றும் சான்வே மேக்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘காவிய காதல்’ திரைப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி இயக்கியுள்ளார். சுவாரஸ்யமான ரொமாண்டிக் எண்டர்டெயினர் திரைப்படமாக இது இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவில், முன்னணி நடிகர்களுடன் பால சரவணனும்…
Read Moreதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ஒய். ஜி. மகேந்திரா தெரிவித்துள்ள கருத்து வருமாறு:
“விஜய் எப்படி ஜெயித்தார்? எதற்காக ஜெயித்தார்? ஒரு சினிமாக்காரரா ஜெயித்தார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் இனிமேல் இடமே கிடையாது. ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் விஜய் ஜெயித்தார். மக்கள் விரும்பினார்கள், அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வளவுதான் ஆர்கியூமென்ட் க்ளோஸ்டு (Argument Closed). மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இது ஒரு மாற்றத்திற்கான முன்னெடுப்பு. தேங்கிக் கிடந்த தண்ணீரை ஒரு புது வெள்ளம் வந்து அடிக்க வேண்டும், புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அந்தப் புது வெள்ளம் விஜய் தான் என்று அவர்கள் தீர்மானித்தார்கள், அவரைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு சக நடிகராக நான் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல வருடங்களாக விஜய் குடும்பத்தை எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக இருந்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும், எல்லா மக்களுக்கும் என்று நான்…
Read Moreதளபதி விஜய் – வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்
தளபதி விஜய், நடிகராக மாபெரும் வெற்றிகள் பல கண்டு, வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கொண்டாடப்பட்டு வந்தவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு, சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் அடியெடுத்து வைத்த போது, தமிழ் சினிமாவிற்கு அது பெரிய இழப்பாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஆனால், அது தமிழ் நாட்டுக்கே வரப்பிரசாதமாக மாறி, இன்று, தனித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, தனிப்பெரும் வெற்றியை பெற்று, வரலாற்று சாதனையை புரிந்துள்ளார். புரட்சி தலைவர் எம்ஜிஆர்-க்கு பின், தமிழ் சினிமாவிலிருந்து அரசியல் சென்று நேரடியாக களம் கண்டு, வெற்றி அடைந்த மாபெரும் சாதனையாளராக இன்று தளபதி விஜய் உருவாகியிருக்கிறார். திரு.விஜய் அவர்களின் இந்த வெற்றியை இன்று உலகமே கொண்டாடுகிறது. அந்த கொண்டாட்டத்தில் தமிழ் சினிமாவை சார்ந்த அனைவரும் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். திரு.விஜய் அவர்கள், தமிழ் நாட்டின் முதலமைச்சராக…
Read Moreமே 4, 2026 சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நாள் – நடிகர் உதயா
வணக்கம், நான் நடிகர் உதயா. மே 4, 2026 சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நாள். மக்கள் தீர்ப்பில் மிகுந்த எழுச்சியை காண முடிகிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. கட்டாயம் ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்து, தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டுப் போட்டு இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். மக்கள் சக்தியை விட பெரிய சக்தி எதுவுமே இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகி உள்ளது. முழு முடிவுகள் இன்னும் வர வேண்டி இருந்தாலும், விஜய் அண்ணாவுக்கு இப்போதே வாழ்த்து சொல்வது என்னுடைய கடமை. ஒரு மனிதர் எவ்வளவோ பிரச்சனைகள், எவ்வளவோ அவமானங்கள், எவ்வளவோ எதிர்ப்பு என அத்தனையையும் நம்பிக்கையோடு எதிர்கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நடிகராக ஒரு மிகப்பெரிய இடத்தை தியாகம்…
Read Moreகேன்ஸ் விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு
*கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் திரையிடப்படும் KVN புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸின் ‘பாலன் த பாய்’* இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ் புகழ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம் புகழ்) கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பாலன் த பாய்’. இந்தப் படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகர்கிறது. புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் (Marché du Film) வருகிற மே 14-ஆம் தேதி இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நடைபெறவுள்ளது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கும் படம் இது. KVN புரொடக்ஷன்ஸ் (வெங்கட் கே. நாராயணா) மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் (சைலஜா தேசாய் ஃபென்) இணைந்து இப்படத்தை வழங்குகின்றன. அடையாளம், உயிர்வாழ்வதற்கான போராட்டம் மற்றும் தாய்-சேய்…
Read Moreபிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் வழங்கும் வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ முதல் ஆல்பம் – லோகோ & தலைப்பு வெளியீடு!
எழுத்தாளர் மற்றும் பாடகர் வாகீசன் ராசையாவுடன் இணைந்து, பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் அவரது முதல் ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ லோகோ மற்றும் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இது அவரது கலைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும். இந்த ஆல்பத்தின் லோகோ மற்றும் தலைப்பு, இன்று யூடியூப் தளத்தில் பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சிகளுடன், டிரெய்லர் வடிவில் இந்த வெளியீடு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு கதையைப் பேசும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த டிரெய்லர், ‘தமிழ் கிறுக்கன்’ ஆல்பத்திற்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்துகிறது. கிரிபாகர்ஜெய் ஜெ இயக்கத்தில், டின்சா எடிட்டிங்கில் காட்சிகள் சீரான ஓட்டத்துடன் அழகாக நகர்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதுமையான காட்சியமைப்புகள், எதிர்காலத் தோற்றங்களையும் உணர்வுப்பூர்வமான தருணங்களையும் இணைத்து,…
Read Moreஇயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு…
Read Moreதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி. கே. எம். தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்பொரு அறிக்கை !!
அறிக்கை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி. கே. எம். தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்பொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த 26.4.26 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் இனி வரும் காலங்களில் வருவாய் பகிர்வு ( Revenue Sharing) முறையில் நடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், நமது அண்டை மாநிலமான ஆந்திராவில், தயாரிப்பாளர்கள் நடிகர்களால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு திரைப்படம் தோல்வி அடையும்போது, அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் உடனடியாக தயாரிப்பாளருக்கு அடுத்த திரைப்படம் நடித்து கொடுக்க உறுதி அளிக்கிறார். அதே போல அந்த படத்தின் இயக்குநர் தயாரிப்பாளரை அணுகி அடுத்த படம் இயக்கி தர உறுதி அளிக்கிறார். தயாரிப்பாளரின் லாப நஷ்டங்களில் பங்கு கொள்கிறார்கள்.…
Read More