சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா ஆண்டி வெய்ர் வழங்கும் ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி

‘தி மார்ஷியன்’ நாவலை எழுதிய Andy Weir, 2021-இல் ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி’ என்ற அதிகம் விற்பனையான அறிவியல் புனைகதை நாவல் ஒன்றை வெளியிட்டார். Phil Lord மற்றும் Christopher Miller தயாரித்து இயக்கிய இந்த அறிவியல் புனைகதை சாகசத் திரைப்படத்திற்கு, Drew Goddard வெள்ளித்திரைக்கு ஏற்றாவாறு தழுவி திரைக்கதை எழுதியுள்ளார். லண்டனில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வெளியான இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், இன்றுவரை 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது! *கதைச்சுருக்கம்-* பூமியில் இருந்து பல ஒளியாண்டுகள் தள்ளியுள்ள தொலைதூர நடசத்திர மண்டலத்தில், ஒரு தனித்த விண்கலத்தில் கோமாவில் இருந்து விழித்தெழும் அறிவியல் மற்றும் அணுக்கூறு உயிரியலாளரான Ryland Grace (Ryan Gosling) மிகவும் அதிர்ச்சியடைகிறார். அவர் தனது நினைவை…

Read More

“கெணத்த காணோம்” — உணர்ச்சிப்பூர்வமான வெற்றி: யோகி பாபுவின் மனமார்ந்த நன்றி!

பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர்களில் வெகு சிலரே தங்களின் comfort zone ஐ விட்டு வெளியே வந்து, உள்ளடக்கத்தை(Content) மையமாகக் கொண்ட முக்கிய நடிகர்களாக தங்களை நிரூபித்துள்ளனர். தமிழ்சினிமாவின் தற்போதைய காலகட்டத்தில் அத்தகைய மாற்றத்தை உருவாக்கியவராக யோகி பாபு இருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும், வலுவான கதாநாயகன் கதாபாத்திரங்களிலும் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். அவரது சமீபத்திய படம் “கெணத்த காணோம்” விமர்சகர்கள் ரசிகர்களின் பாராட்டில், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம், தொடர்ந்து பல படங்களில் பிஸியாக இருந்தபோதிலும், இப்படத்திற்காக யோகி பாபு மேற்கொண்ட முழுமையான (360°) ப்ரோமோஷன் ஈடுபாடே ஆகும். யோகி பாபு கூறுகையில்: “இந்தத் தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் ஒரு விதமான துயரத்தையும் தருகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இந்த…

Read More

உலகம் முழுவதும் ரூபாய் 761 கோடியை தாண்டிய துரந்தர் பழிவாங்கல், இந்தியாவில் அனைத்து காலத்திற்குமான மிக பெரிய பிளாக்பஸ்டர் ஆக மாறி உள்ளது. மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புதிய மைல்கல்லை படைத்துள்ளது!

ஜியோ ஸ்டுடியோஸ் & B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. உலகளாவிய அளவில் இதுவரை காணாத பிரம்மாண்டமான ஓப்பனிங் வீக்கெண்டை வசூலித்து, அனைத்து காலத்திற்குமான மிகப்பெரிய உலகளாவிய பிளாக்பஸ்டராக உருவெடுத்துள்ளதுடன், உலகெங்கிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளது. அசாதாரணமான முன்பதிவுகள், அனைத்து திரையரங்குகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகள் மற்றும் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கான இணையற்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றின் காரணமாக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நாளுக்கு நாள் மிக அதிக வசூலை அள்ளி குவித்துள்ளது. இதன் மூலம், இந்திய மற்றும் சர்வதேச அளவில் ஒரு இந்திய படத்திற்கான மிக பெரிய ஓப்பனிங் வீக்கெண்ட் வசூல் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. உலகளாவிய மிகப்பெரிய இந்தி பிளாக்பஸ்டரான துரந்தர் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இந்த இரண்டாம்…

Read More

குட் ஸ்டஃப்( Good Stuff) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் B.DILLI -( பி. டில்லி) வழங்கும் ‘ தி டார்ம் ‘ படத்தின் தொடக்க விழா

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நட்சத்திர நடிகரான முனீஸ்காந்த் கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தி டார்ம் ‘ திரைப்படத்தின் தொடக்க விழா பாரம்பரிய முறையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முனீஸ்காந்த் ,ஷாலினி, காசி தங்கம், சபரீஷ் ,சாம் ஜான், அருண் கார்த்திக் ,நிகில் நாயர் ,வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து ,பெரோஜ் மற்றும் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் விஷால் இசையமைக்கிறார். அனில் கிருஷ்ணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள விமல் ராஜ் கலை இயக்கத்தை கவனிக்கிறார். ரசிகர்களுக்கு திரையரங்குகளில் மறக்க இயலாத அனுபவமாக வழங்கவுள்ள இந்த திரைப்படத்தை குட் ஸ்டஃப் ( GOOD STUFF) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. டில்லி ( B. DILLI) தயாரிக்கிறார். அனைத்து…

Read More

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் ஜீவா, இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஹாசினி பவித்ரா மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை ஆஷிஷ் ஜோசப் கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மலேசியா புகழ் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்… இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இதனைத்…

Read More

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !

வடசென்னையின் துள்ளலான முகத்தை இசையில் கொண்டுவந்த ‘பெரம்பூர் கானா’ – வைரலாகும் ‘அன்பே டயானா’ முதல் பாடல்! பெரம்பூரின் மனிதர்கள், மகிழ்ச்சி, மாஸ் லோக்கல் உணர்வுகளை கொண்டாடும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வெளியீடு! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சத்யா கரிகாலன்,  யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட…

Read More

ஜி.வி. பிரகாஷின் கதாநாயகி உள்ளிட்ட இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் ‘லவ் 3.0’

சினிமா மீதுள்ள ஆர்வத்தால் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் சிவக்குமார், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தவர், இன்ஸ்டாகிராம் மூலம் மக்களிடம் பிரபலமாக இருக்கும் பிரபலங்களைக் கொண்டு படம் தயாரிக்க முடிவு செய்தார் .அந்த வகையில் தனது மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம்தான் ‘லவ் 3.0’ . இப்டத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ் விகே. வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வைகுந்த் சீனிவாசன் இசையமைத்துள்ளார்.அரவிந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் ஜேபி. இந்தப் படத்தில் சக்தி மிக்க சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் உலகில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலங்களாக இருப்பவர்கள் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்து உள்ளனர். இன்ஸ்டாகிராமில் மில்லியன் தொடர்பாளர்களைத் தாண்டி பிரபலமாக இருப்பவர் அரனிகா .இவரை அனைவரும் செல்லமாக ரீல்ஸ் அக்கா என்று அழைப்பார்கள். ரீல்ஸ்…

Read More

காளிதாஸ் 2′ திரைப்பட இசை வெளியீட்டு விழா !

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்.., தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது.., இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில்…

Read More

சந்தீப் கிஷன் நடிப்பில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!

தெலுங்கு மொழியில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற ‘சம்பாலா’ படத்தினைத் தொடர்ந்து, அந்தப் படத்தை தயாரித்த Shining Pictures நிறுவனம் மீண்டும் இயக்குநர் உகந்தர் முனியுடன் கைகோர்த்து, மற்றுமொரு பிரம்மாண்டமான புதிய திரைப்படத்தைத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு ஆகியோர் முன்னதாக ஆதி சாய்குமார் நடித்த “சம்பாலா”படத்தின் மூலம் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தனர். இந்த புதிய பட அறிவிப்பை முன்னிட்டு, படக்குழு ஒரு கண்கவர் கான்செப்ட் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், சிங்கம் மற்றும் ஓநாய் நேருக்கு நேர் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது அதிகாரம், விதி, மற்றும் உள்ளார்ந்த வலிமையின் மாபெரும் மோதலை சுட்டிக்காட்டுகிறது. இவ்விரண்டுக்கும் நடுவே, மர்மமான போர்க்களப் பின்னணியில் ஒளிரும் ஒரு பழமையான வாள் காட்சியளிக்கிறது. மேலும், “சில போர்கள் ஒருபோதும் முடிவதில்லை……

Read More

நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘நீளிரா ‘ திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை…

Read More