உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாபர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது! உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் ’ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இதன் சீக்வல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். முதல் சிங்கிள் ஸ்டெப்பா மார் அபார வரவேற்பைப் பெற்றது. இன்று, படத்தின் இரண்டாவது சிங்கிள் மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது. காசர்லா ஷ்யாம் எழுதிய பாடல் வரிகள் ஹைதராபாத் ஸ்லாங்கைப் பின்பற்றி வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது. இந்த பார்ட்டி பாடலுக்கு மணிஷர்மாவின் பூர்வீக நாட்டுப்புற இசையமைப்பு மற்றும்…
Read MoreSIIMA 2024ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான பரிந்துரை பட்டியல் ரேஸில் முந்தும் “ஜெயிலர்”
தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) – தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும். மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்களில் விருதுக்குரியவற்றை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை சைமா 2024 – SIIMA 2024 வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சைமா ( SIIMA) தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி பேசுகையில், ” 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான சைமா (…
Read More1000 கோடி வசூலித்து சாதனை படைத்த பிரபாஸின் கல்கி 2898 AD
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது!! பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. பாகுபலி 2க்குப் பிறகு பிரபாஸ், தற்போது ரூ. 1000 கோடி கிளப்பில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். கல்கி 2898 AD உண்மையில் தென்னிந்தியத் திரைப்படங்களில் பாகுபலி 2 படத்திற்குப் பிறகு, இந்த சாதனையை படைத்துள்ளது. இப்படம் தெலுங்கு மாநிலங்களில் இன்னும் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஹிந்தி திரையுலகிலும் மற்றும் பிற மொழிகளிலும் இப்படம் பெரிய…
Read Moreமஞ்சுவாரியரின் ஃபுட்டேஜ் திரைப்படத்தை வழங்கும் இயக்குநர் அனுராக் காஷ்யப்
தனித்துவமான கதைசொல்லல் மற்றும் புதுமையான தோலைநோக்கு படைப்புகளுக்காக பெயர் பெற்ற எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் “ஃபுட்டேஜ்” படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான அனுராக் காஷ்யப் வழங்க, “ஃபுட்டேஜ்” டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “ஃபுட்டேஜ்” படத்தின் டிரெய்லர் தனித்துவமான அழகியல் மற்றும் அழுத்தமான கதைசொல்லலுடன் படம் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. அற்புதமான விஷுவல்கள் மற்றும் அழுத்தமான கதை என மிகச்சிறப்பான அனுபவம் தருகிறது. மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளர்களான ராகுல்…
Read Moreஐசரி கணேஷ், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் – 2
தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ‘சிங்கப்பூர் சலூன்’, ‘ஜோஷ்வா இமைப் போல் காக்க’, ‘பி டி சார்’ என வரிசையாக வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் அடுத்த வெற்றி படைப்பாக ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படம் தயாராகவுள்ளது. இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரின் பட தயாரிப்பு நிறுவனமான…
Read Moreதஞ்சைக்கு புதிய அடையாளமாய் துவங்கப்பட்ட “லாங்வால்” வணிக வளாகம்
தஞ்சையில் லாங்வால் வணிக வளாக துவக்க விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மிக பிரமாண்டமான முறையில் லாங்வால் என்ற வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தின் துவக்க விழா நேற்றைய தினம் (10.04.2024) நடத்தப்பட்டது. இவ்விழாவை தமிழக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி. ராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் பேசிய, “டி.ஆர்.பி. ராஜா பேசுகையில் தமிழகத்தில் முக்கிய நகரமாக தஞ்சையை மாற்றுவதில் முதல்வர் தீவிரமாக உள்ளார். தஞ்சை நகரில் தொழில் வளர்ச்சி வர வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது. விவசாய பெருங்குடி மக்கள் உள்ள இந்த பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் இந்த மால் மிகப்பிரம்மாண்டமாக 200000 சதுர அடியில் உருவாகியுள்ளது.…
Read Moreராம்சரணின் 16வது படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்
குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படமான #RC16 ல் கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார் இணைந்துள்ளார். RRR இன் உலகளாவிய வெற்றி, முன்னணி நட்சத்திரமான ராம் சரணுக்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது. உப்பேனா படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் அறிமுகமான பரபரப்பான இயக்குனர் புச்சி பாபு சனாவுடன் தனது 16வது படத்திற்காக ராம் சரண் இணைந்துள்ளார். இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்க, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் பேனரின் கீழ் உயர்தர தொழில்நுட்பத்துடன், மிகப்பெரும் பட்ஜெட்டில், பெரிய கேன்வாஸில் #RC16 படத்தினை பிரமாண்ட திரைப்படமாக…
Read Moreசிவ்ராஜ்குமாரின் மிரட்டலான “உத்தரகாண்டா” பட தோற்றம் வெளியீடு
கர்நாடக சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மிகவும் எதிர்பார்க்கப்படும் “உத்தரகாண்டா” படத்திலிருந்து அவரது தோற்றத்தை வெளிப்படுத்தும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் “மாலிகா” வேடத்தில் தோன்றும் சிவண்ணாவின் தோற்றம், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரக்டர்கள் மற்றும் படத்தின் போஸ்டர்களை அறிமுகப்படுத்த உத்தரகாண்டா படக்குழு ஒரு தனித்துவமான வழியை தேர்ந்தெடுத்துள்ளது, அந்த வகையில் இப்போது சிவண்ணாவின் முதல் தோற்றம் எங்கெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது. டாக்டர்.சிவராஜ்குமார் மாஸ் மாஸ்டராக இருப்பதால், புதுமையான வழிகளில் தனது புதிய அவதாரங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதில்லை. அவருடைய ஒவ்வொரு படமும் அவரின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்த தவறியதில்லை. அந்த வகையில், உத்தரகாண்டாவில் இரத்தக் கறை படிந்த முகத்துடன் சிவன்னாவின்…
Read Moreஅர்ஜூன் தாஸின் புதிய படத்தில் இணைந்தார் அதிதி சங்கர்
தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4 ‘ எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார். ஃபீல் குட் திரைப்படங்களை…
Read More‘பைரவா’ வாக நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” – சிவராஜ்குமார்
டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா, ‘பைரவனா கோனே பாதா’ படத்தை தயாரிக்கிறார். இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. டாக்டர் சிவராஜ் குமார் கவசம் அணிந்து நீண்ட நரை முடியுடன் காட்சியளிக்கும் முதல் தோற்றத்தை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருப்பதால்.. நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. சமீபத்தில் படக்குழுவினர் இப்படத்தின் தலைப்பை வெளியிட்ட போது தலைப்பில் உள்ள தனித்துவத்திற்காகவும், தலைப்பு முழுவதும் கன்னடத்தில் வைத்திருக்க குழு ஒன்றினை தேர்வு செய்ததற்காகவும் ஒருமனதாக பாராட்டப்பட்டது. படத்தைப் பற்றி டாக்டர் சிவ ராஜ்குமார் பேசுகையில், ” நீண்ட நாட்களாக பேசப்படும் படம் இது. அப்பா ஜி கடந்த காலங்களில் இது…
Read More