ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது ‘மெல்லிசை’- அன்பு மட்டும் அண்டம் தேடும்!

ஆழமான உணர்வு மற்றும் கவிதைத்துவமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் அப்பா- மகள் இடையிலான அன்பைக் காட்டும் படமாக உருவாகி வருகிறது ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸின் ‘மெல்லிசை’. இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய விருது பெற்ற ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படத்தை இயக்கிய திரவ் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இரண்டு காலக்கட்டங்களில் மனிதர்களின் ஆழமான உணர்வுகள் பற்றி பேசுகிறது. காதல், லட்சியம், தோல்வி, வெற்றி மற்றும் வாழ்க்கை சுழற்சி, மனித உறவுகளுக்கு இடையேயான புரிதல் என அனைத்தையும் கவிதையாக பேசுகிறது ‘மெல்லிசை’. ‘வடசென்னை’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்புக்குப் பெயர் பெற்ற நடிகர் கிஷோர் குமார் ‘மெல்லிசை’ படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’, ‘ஜெய்பீம்’ மற்றும் ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த சுபத்ரா…

Read More

புளூஸ்டார் திரைப்படத்திற்கு விருது. சிறந்த நடிகருக்கான விருதை சாந்தனு பாக்யராஜ் பெற்றார்.

கனடா இண்டர்நேஷனல் தமிழ்  பிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படமாக புளூ ஸ்டார் திரைப்படம் விருது பெற்றுள்ளது.  மேலும், சிறந்த நடிகராக இப்படத்தில் நடித்த சாந்தனு பாக்யராஜ்   விருதை பெற்றுள்ளார். எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ்,  லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 2024 ம் ஆண்டு ஜனவரியில் தமிழில் வெளியானபோதே  மக்களின் வரவேற்பையும் விமர்சகர்களின் நன்மதிப்பையும்  பெற்ற இத்திரைப்படம், அண்மையில்  நடைபெற்ற கனடா இண்டர்நேஷனல் தமிழ் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது.

Read More

‘படையாண்ட மாவீரா’ வசனத்திற்கு பாராட்டு — எழுத்தாளரின் நெஞ்சார்ந்த நன்றி!!

மக்களையும் திரைப்பட ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்கிற *படையாண்ட மாவீரா* திரைப்படத்தின் விமர்சனங்கள் திறனாய்வுகள் அனைத்திலும் எனது வசனத்தை குறிப்பிட்டு பாராட்டுகிற உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி திரையரங்குகளில் எல்லாம் மக்கள் பேராதரவை தந்து கொண்டிருக்கிறார்கள்.. பல இடங்களில் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்று வாழ்த்துகிறார்கள். தமிழர்கள்,மற்றும் திரைக்கலை ரசிகர்கள் அனைவருக்குமான இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மகத்தான பணியை செய்யும் உங்கள் அனைவருக்கும் *படையாண்ட மாவீரா* வசனகர்த்தா ஆகிய எனது சார்பிலும் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றி. அன்புடன் பாலமுரளி வர்மன்

Read More

ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் ! !

இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர், இது 2025-இல் திரைத்துறையின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும். ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1, இந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இது ஒரு பான்-இந்தியா திரைப்படமாக பரவலாக பேசப்படுகின்றது, இப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள்…

Read More

அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, பரபரப்பு என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது ‘அனகோண்டா’!

பால் ரூட் மற்றும் ஜாக் பிளாக் நடித்த இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ‘அனகோண்டா’வின் முதல் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவையுடனும் பல திருப்பங்களுடனும் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் அனகோண்டாவை மீண்டும் ரசிகர்களுக்கு க காட்டுகிறது. ஜாக் பிளாக் மற்றும் பால் ரூட் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும். டாம் கோர்மிகன் இயக்கி இருக்கும் இந்தப் படம், டக் (ஜாக் பிளாக்) மற்றும் கிரிஃப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நீண்ட கால நண்பர்களான இருவரும் நடுத்தர வயதின் நெருக்கடியில் இருக்கிறார்கள். தங்களுக்குப்…

Read More

பிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி, எஸ்.ஜே.சூர்யா, ரிவாஸ் ரமேஷ் டுக்கால், ஆர்கேடி ஸ்டுடியோஸ், PVCU வின் ‘அதீரா’ படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது !!

தனது தனித்துவமான இயக்கத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா, மீண்டும் ஆர்கேடி ஸ்டுடியோஸுடன் இணைந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹீரோ பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளார். டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர் ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, இப்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இதில், கல்யாண் தாசரி ஹீரோவாக தனது பிரம்மாண்ட அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு, முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ரிவாஸ் ரமேஷ் டுக்கால் தலைமையிலான ஆர்கேடி ஸ்டுடியோஸ், இந்த பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த புதிய திரைப்படத்தை ஷரண் கோப்பிசெட்டி இயக்குகிறார். இந்திய இதிகாசங்களின் சாரத்தை கொண்டும், நவீன திரைத்திறனுடன் இணைந்தும் உருவாகும் அதீரா,…

Read More

உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா!

KYN வழங்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ‘The U1niverse Tour’ இசை நிகழ்ச்சி டிசம்பர் 13 முதல் தொடங்க இருக்கிறது. முதலாவதாக, சென்னை YMCA மைதானத்தில் தொடங்க இருக்கிறது. டிக்கெட் பதிவு செய்யும் முதல் ஆயிரம் பேருக்கு யுவனின் கையொப்பமிட்ட டி-ஷர்ட் இலவசமாக வழங்கப்படும். இதுமட்டுமல்லாது, 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு யுவனுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைக்கும். உங்களுக்கான டிக்கெட்டை KYN செயலியில் பதிவு செய்யுங்கள். யுவன் இசையை கொண்டாடும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Read More

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) சீசனில் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் உன்னி முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்!

நடிகரும் கிரிக்கெட் ஆர்வலருமான உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அணியின் இணை உரிமையாளர் ராஜ்குமார் சேதுபதி வெளியிட்டார். கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடனான நீண்ட கால உறவின் அடிப்படையில் உன்னி முகுந்தன் இந்த தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர் என்கிறார் ராஜ்குமார் சேதுபதி. மலையாள சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக மட்டுமல்லாது, உன்னி முகுந்தனின் அனுபவமும் கிரிக்கெட் பற்றிய புரிதலும் நிச்சயம் அணியினருக்கு புது உற்சாகம் கொடுக்கும் என்கிறார். உன்னி முகுந்தனின் பிறந்தநாளான செப்டம்பர் 22 அன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான கேப்டன், அனுபவம் பெற்ற மற்றும் புதிய விளையாட்டு வீரர்கள் என ரசிகர்களுக்கு உற்சாகமான சீசனாக இது அமையப் போகிறது என உறுதியளிக்கிறது கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி. அக்டோபர் மாதத்தின் மத்தியில் இருந்து…

Read More

விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் “மருதம்” அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது !!

Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் திரைக்குவரவுள்ளது. தற்காலத்திய சமூகத்தில் இன்னொருவனை ஏமாற்றித்தான் நாம் முன்னுக்கு வரவேண்டும், அது தவறில்லை என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் மேலோங்கிவிட்டது. இப்படிப்பட்ட சமூகத்தில் ஏமாற்றத்திற்குள்ளாகி பாதிகப்படும் ஒரு விவசாயி, அந்த பாதிப்பிலிருந்து மீள்கிறானா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மையம். பரபரப்பான சம்பவங்களுடன், அழுத்தமான திரைக்கதையில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர்கள் சரவண சுப்பையா, மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும், அடையாறு திரைப்பட கல்லூரியில் பயின்றவரும், தற்பொது SRM கல்லூரியில் உதவி பேராசியராக…

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மனிதன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது!

ஏவிஎம் நிறுவனம் தயாரித்து 1987 ஆம் ஆண்டு வெளிவந்து 25 வாரங்கள் திரை அரங்குகளில் ஓடி வெற்றி வாகை சூடி வசூல் சாதனை புரிந்த படம்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ” மனிதன் ” திரைப்படம். மனிதன் திரைப்படம் டிஜிட்டல் முறையில் தயார் படுத்தப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சோ, வினு சக்கரவர்த்தி, ரூபிணி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில், மனிதன் …. மனிதன்.. வானத்த பாத்தேன் … தீபங்களே நீங்கள் … காளை… காளை… ஏதோ நடக்கிறது …. முத்து .. முத்து.. பெண்ணே… ஆகிய வைரமுத்துவின் முத்தான பாடல்கள் சந்திர போஸ் இசையில் சூப்பர் ஹிட்டாக ரசிகர்கள் கொண்டாடிய பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் சந்திர போஸ் இசையில் வைரமுத்து வரிகளில் பாடல்கள்…

Read More