குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு, மைசூரில் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!!

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் என அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த அவர் தனது முழு ஆற்றலையும் தந்து உழைத்து வருகிறார். மிகுந்த பெருமையுடன், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க, விருத்தி சினிமாஸ், மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் கிளிம்ப்ஸே, ராம் சரண் மேக் ஓவர் புகைப்படங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும்…

Read More

குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை சேஷ்விதா கனிமொழி!

புகழ்பெற்ற லெஜெண்ட்ரி நடிகைகள் ரேகா, நந்திதா தாஸ், அர்ச்சனா போன்ற நடிகைகள் தங்கள் அழகு மற்றும் நடிப்பு திறனுக்காக பெயர் பெற்றவர்கள். பல தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் இதயங்களை வென்றவர்கள். அந்த வரிசையில் தற்போது பக்கத்து வீட்டுப் பெண் போலவும் அதே சமயம் நம் வீட்டில் ஒருவராகவும் இருக்கும் திறமை வாய்ந்த நடிகைகளை தங்கள் படத்தில் நடிக்க வைப்பதில் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் நடிகை சேஷ்விதா கனிமொழியும் ஒருவர். தமிழ் சினிமாவில் அழுத்தமான எண்ட்ரி கொடுத்திருக்கும் இவர் மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து ஹிட் படங்களில் சவாலான கதாபாத்திரங்கள் நடித்து இயக்குநர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்திருக்கிறார். நடிகைகளுக்கு நடிப்புத் துறையில் ஆரம்ப காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதை சேஷ்விதா மிகவும் தன்னம்பிக்கையுடன் கடந்து வந்திருக்கிறார். நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’…

Read More

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது

ஆச்சர்யங்களை அள்ளித்தெளிக்கும் அசத்தலான LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்பட டீசர் !! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படத்தின் டீசர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது.‌ அனிருத் குரலில், 2040 ஆம் ஆண்டில் கண்கவரும் உலகத்தில் ஆரம்பிக்கும் டீசர், பல ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. காதல் அரிதான பொருளாகிவிட்ட காலத்தில், காதலுக்கே இன்ஸூரன்ஸ் கம்பெனி இருக்கும் ஒரு காலகட்டத்தில், ஒருவன் தன் காதலை காப்பாற்ற என்ன செய்யப் போகிறான் என விரியும் டீசரின் ஒவ்வொரு ஃப்ரேமும், வேறொரு…

Read More

அம்மா என்பது உறவல்ல; உணர்வு! – நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சி

நான் கடினமான சூழலில் இருந்து வந்தவள்; ரவி சிறப்பான சூழ்நிலையில் இருந்து வந்தவர்! ரவி மோகன் ஸ்டுடியோஸ்-இன் வெற்றி தான் எங்களுடைய கனவு!! – பாடகி கெனிஷா என்னையும் ரவியையும் போல அனைத்து நடிகர்களும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினால் பல நல்ல விஷயங்கள் வெளியாகும் – நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வளவு திறமைகளை வைத்துக் கொண்டா என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாய் – ராஜா மோகன் பெருமிதம் ரவி மோகனுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் – கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ் நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை என்று பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன்…

Read More

ஆஃப் ரோடிங்கில் கிங் – சென்னையில் சம்பவம் செய்த டாடா ஹரியர் EV கார்

டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹரியர் EV. சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வாங்க பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள லக்ஷ்மி டாடா டீலர்ஷிப்பில் இதன் வெளியீடு இன்று நடைபெற்றது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் ஆஃப்-ரோடு அகாடமியில் முற்றிலும் புதிய ஹரியர் EV-இன் செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்கான நிகழ்வில் லக்ஷ்மி டாடா சார்பில் வல்லுநர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வந்தவர்கள் டாடா ஹரியர் EV கரடு முரடான பாதையில் செய்த சம்பவங்களை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். முற்றிலும் புதிய ஹரியர் EV இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 504 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்…

Read More

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் காரைக்குடியில் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படத்தை ஆரம்பித்த வேகத்தில் 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளது படக்குழு. மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக…

Read More

குழந்தைகளை கவரும் விதமாக யானையை மையப்படுத்தி உருவாகும் ‘அழகர் யானை’

SV புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவசங்கர் தயாரிப்பில் உருவாகும் படம் ‘அழகர் யானை’. மரகதக்காடு படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் இரண்டாவதாக இயக்கும் படம் இது. விஜய் டிவி புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா, கோகுல் நடிக்கின்றனர்.. இவர்கள் தவிர 80 அடி உயர யானை ஒன்று இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. படம் குறித்து இயக்குனர் மங்களேஷ்வரன் கூறும்போது, “இன்றைய சூழலில் வாழ்வின் மீதான நம்பிக்கை என்பது வாழ்க்கையில் பலருக்கும் குறைந்து வருகிறது. ஒருவருக்கு பணமோ மருத்துவ உதவியோ கொடுத்து உதவுவதை விட அவர்களுக்கு மனோரீதியாக நாம் தரும் நம்பிக்கை என்பதே மிக அவசியமாக இருக்கிறது. அப்படி ஒரு நம்பிக்கையை தரும் படமாக இந்த ‘அழகர் யானை’ உருவாகிறது.. எல்லோருக்குமான மழையையும்…

Read More

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ‘அக்யூஸ்ட்’ படக்குழு மரியாதை செலுத்தினர்

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.   தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ திரையரங்குகளில் கடந்த 25 நாட்களாக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி நடை போட்டு வருகிறது. வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினரால் கொண்டாடப்பட்டது. திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்களின் உற்சாக பாராட்டுகளோடு படக்குழுவினர் கேக் வெட்டி ‘அக்யூஸ்ட்’ வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றிருந்த நிலையில்…

Read More

மீண்டும் இணையும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா – ‘வைகைப்புயல்’ வடிவேலு!!

KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”,  படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues) எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன்,   நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு கூட்டணியாகும். இவர்கள் ஒன்றிணைந்தாலே திரையரங்கில் சிரிப்பு மழை பொழியும். வயிறு குலுங்க…

Read More

இப்ப அண்ணன்னு சொல்ற விஜய், இவ்வளவு நாளா எங்க போயிருந்தார்?

நடிகர் தக்‌ஷன் விஜய், விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கேப்டன் கோவிலில் அவருக்கு மரியாதையை செலுத்தி விட்டு, பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு, அளித்த பேட்டியில் விஜய் மற்றும் சீமான் இருவரும் தங்களது அரசியலுக்காக விஜயகாந்தை இப்பொழுது புதிதாக கொண்டாடுகிறார்கள் என்றார்! நடிகர் விஜய் தக்‌ஷன் விஜய் ‘கபளிஹரம்’ ‘ஐ அம் வெயிட்டிங்’ மற்றும் புதிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், டிராபிக் ராமசாமி தொடங்கிய மகாத்மா மகாத்மா காந்தி மக்கள் கட்சியை தலைமை தாங்கி நடத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது! @GovindarajPro

Read More