தமிழ் சினிமா ரசிகர்கள் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களை எப்போதும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். அந்த வகையில், மொழிகளைக் கடந்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிப்பதில் நடிகை சம்ரிதி தாரா ஆர்வமாக உள்ளார். மே 23 அன்று உலகம் முழவதும் வெளியாக இருக்கும் ‘மையல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சம்ரிதி தாரா. மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘பரனு பரனு பரனு செல்லன்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது ‘மையல்’ படம் மூலம் நடந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் A.P.G. ஏழுமலை கதை பற்றி சொன்னபோது என் கதாபாத்திரத்தின் ஆழம் புரிந்து கொண்டேன். தமிழ் சினிமாவில் இப்படியான கதாபாத்திரத்தில் அறிமுகமாவது அரிய வாய்ப்பு. அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாளர்களுடன் பணிபுரிந்தது…
Read More’தில் ராஜு ட்ரீம்ஸ்:’ ஆர்வமுள்ள சினிமா திறமையாளர்களுக்கான புதிய தளம் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது!
தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக பல பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களைத் தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனர் மூலம் கொடுத்தவர் தயாரிப்பாளர் தில் ராஜூ. பல புதிய திறமையாளர்களையும் கண்டெடுத்து சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். அடுத்த தலைமுறை சினிமா திறமைகளைக் கண்டறிந்து ஆதரிப்பதற்காக ‘தில் ராஜு ட்ரீம்ஸ்’ என்ற பிரத்யேக தளத்தை தற்போது அறிமுகப்படுத்துகிறார். இந்த ஜூன் மாதம் தொடங்கப்படும் தில் ராஜு ட்ரீம்ஸில் ஆர்வமுள்ள இயக்குநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம். நீங்கள் 24 கலைகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலோ அல்லது சினிமாவுக்கு புதியவராக இருந்தாலும் இந்த தளம் உங்கள் திறமைக்கான வாய்ப்பு வழங்குகிறது. தடைகளை நீக்கி, பரிந்துரை இல்லாத உண்மையான திறமையாளர்கள் பிரகாசிக்கக்கூடிய நியாயமான தளமாக…
Read Moreசிறப்பு வீடியோ கிளிம்பஸ் மூலம் மோகன்லால் பிறந்தநளை கொண்டாடும் ‘கண்ணப்பா’ படக்குழு!
தொடர்ந்து 200 கோடி ரூபாய் வசூல் செய்து உச்சத்தில் இருக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், அடுத்து டைனமிக் ஸ்டார் விஷ்ணு மஞ்சு இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்திய காவியமான ‘கண்ணப்பா’-வில் நடிக்கிறார். மோகன்லால் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார், கொண்டாட்டங்களுக்கு கூடுதலாக, ஜூன் 27 ஆம் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாக உள்ள கண்ணப்பா படத்தின் சிறப்பு வீடியோ கிளிம்பஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், கண்ணப்பா படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன்லால் ஒரு சக்திவாய்ந்த மற்றும் தீவிரமான அவதாரத்தில் இடம்பெறும் ஒரு மின்னூட்டக் காட்சியை வெளியிட்டனர். அவர் கடுமையான உறுதியுடன் நடப்பதை, கவனத்தை ஈர்க்கும் ஒரு காந்தத் திரை இருப்பை வெளிப்படுத்துவதை இந்த குறுகிய வீடியோ காட்டுகிறது. ஒரு அற்புதமான பின்னணி இசையால் மெருகேற்றப்பட்ட இந்த காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. தெய்வீக…
Read More10 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘திருப்பூர் குருவி’!- மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
வி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர் தயாரிப்பில், ஜெயகாந்தன் ரெங்கசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருப்பூர் குருவி’. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர்கள் கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்ஷா நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக பிரியராஜா நடிக்க, முக்கியமான வேடத்தில் ‘அருவா சண்ட’ பட நாயகன் இசக்கி ராஜா நடித்திருக்கிறார். ஜெ.கதிர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரக்கோணம் யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிக்றார். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். பிரியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.கே.செல்வமணி தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறார். வரும் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘திருப்பூர் குருவி’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
Read Moreலியோ ஹம்சவிர்தன் என தனது பெயரை மாற்றிக் கொண்டார் நடிகர் ஹம்சவிர்தன்
‘புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார். லியோ ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை சமீபத்தில் புதுச்சேரியில் மணந்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் மே மாதம் 18ம் தேதி திருமண வரவேற்பு விமரிசையாக நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியோடும் வாழ்த்துகளோடும் இந்த காதல் திருமணம் நடந்தேறியது. நடிகர் லியோ ஹம்சவிர்தன் உடனான திருமணத்தை தொடர்ந்து நிமிஷா இனி நிமிஷா லியோ ஹம்சவிர்தன் என்று அழைக்கப்படுவார். இரண்டு புது படங்களில் நடிக்க லியோ ஹம்சவிர்தன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படங்களின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஹம்சவிர்தனின் முதல்…
Read More”காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது” இயக்குநர் APG ஏழுமலை!
மண் சார்ந்த வலுவான கதைகள் அற்புதமான சினிமா அனுபவத்தைத் தரும்போது பார்வையாளர்கள் மற்றும் சினிமா விமர்சர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுகிறது. இந்த விஷயத்தை இயக்குநர் APG ஏழுமலையின் ‘மையல்’ படத்தின் பாடல்கள், டிரைய்லர் மற்றும் விஷூவல் புரோமோக்களில் பார்க்க முடிகிறது. ‘மையல்’ மே 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்து இயக்குநர் APG ஏழுமலை பகிர்ந்து கொள்கிறார். அவர் பகிர்ந்து கொண்டதாவது, “காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது. பார்வையாளர்களும் தங்களுடன் நிச்சயம் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். இதுபோன்ற தாக்கம் ஏற்படுத்தும் வலுவான கதையைக் கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. அவருடைய ஸ்ட்ராங் ரைட்டிங் மற்றும் தெளிவான கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள்தான் எனக்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுக்க உதவியது. நடிகர்கள் சேது, சம்ரிதி தாரா…
Read Moreவிஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் “லாயர்” !!
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ”லாயர்” திரைப்படத்தை “ஜென்டில்வுமன்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், தத்ரூபமாகத் திரையில் பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும். விஜய் ஆண்டனியுடன் இப்படத்தில் அவருக்கு இணையான எதிர் கதாப்பாத்திரத்தில், இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகையும் இப்படத்தில் இணையவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Read Moreயோகி பாபு நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் – காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘போர் ‘ எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இயக்குநர் ஜெய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 2’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கான ஃபேமிலி…
Read Moreயோகி பாபு – ரூக்ஸ் மீடியா கூட்டணியில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் – காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘போர் ‘ எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இயக்குநர் ஜெய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 2’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கான ஃபேமிலி…
Read Moreஅனல் மழை பட இசை வெளியீட்டு விழா !!
சாய் பொன்னியம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் அ அய்யனாரப்பன் இயக்கத்தில், ஒரு அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அனல் மழை”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இயக்குனர் அய்யனாரப்பன் பேசியதாவது, இந்த நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்த மேடை ஏற எனக்கு 40 வருடங்கள் ஆகியது, பல படங்களில் பணி புரிந்திருக்கிறேன் , இப்போது முதன் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளேன் அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மோகனுக்கு மிகவும் நன்றி, எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, படத்தின் டிரெய்லர் பார்த்து படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியாது, படம் பார்த்து படத்தை பற்றி சொல்லுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், சாதிக்க முயற்சிக்கும் அனைவருக்கும் வாய்ப்பளியுங்கள்,…
Read More