மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE). வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில், இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உடை வடிவமைப்பாளர் சப்னா கால்ரா பேசியதாவது… எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படத்தில் விஜய் சேதுபதி சாருக்கு மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் செய்துள்ளேன். மலேசியா சென்று அங்கு இருக்கும் வாழ்க்கைக்கு ஏற்ப ஸ்டைலீஷை இப்படத்தில் கொண்டு வந்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் ஜெயிக்கும்,…
Read Moreமெகாஸ்டார் சிரஞ்சீவியின் #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!
மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி, சாஹு கராபதி, சுஷ்மிதா கொனிடேலா, ஷைன் ஸ்க்ரீன்ஸ், கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !! மெகாஸ்டார் சிரஞ்சீவியின் #Mega157 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !! மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில், பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள #Mega157, பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த அற்புதமான கூட்டணியில் உருவாகும், இந்தப் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி முழு நீள நகைச்சுவை வேடத்தில் மீண்டும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் பேனரில் சாஹு கரபதி, சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், ஸ்ரீமதி அர்ச்சனா வழங்குகிறார். மிகப்பெரிய…
Read Moreடூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா !!
பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. குழந்தை நட்சத்திரம் கமலேஷ் பேசியதாவது… எல்லாருக்கும் வணக்கம். எப்படி சொல்றதுன்னு தெரியவில்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துக்கு வாய்ப்பு கொடுத்த அபி அண்ணாக்கு ரொம்ப நன்றி. அதுக்கப்புறம் ப்ரொடியூசர்ஸ் யுவராஜ் அண்ணாவிற்கு நன்றி. சசிகுமார் அங்கிள், என்னிடம் ரொம்ப பாசமா இருந்தார்,…
Read Moreடாம் குரூஸ் இந்தியாவை நேசிக்கிறார், மீண்டும் வர விரும்புகிறார்; அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு இதயப்பூர்வமான செய்தியை விட்டுச் செல்கிறார்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்
மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் மே 17 அன்று இந்தியாவில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது, டாம் குரூஸ் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் ஒரு உரிமையாளரின் காவிய முடிவை அமெரிக்கா குறிக்கும் 6 நாட்களுக்கு முன்பு, உலகளாவிய பொழுதுபோக்கை உண்மையிலேயே மறுவரையறை செய்த ஐகான், இந்தியாவுடனான தனது காலத்தால் அழியாத பிணைப்பை பிரதிபலிக்கிறது. குரூஸ் படங்களைப் பற்றி மட்டுமல்ல, வழியில் தனது பயணத்தை வடிவமைத்த மக்கள் மற்றும் இடங்களைப் பற்றியும் பேசினார். இதுவரை தனது மிகவும் தனிப்பட்ட மற்றும் உயர்ந்த பங்குகளை கொண்ட அத்தியாயமாக அமைக்கப்பட்டுள்ளதை விளம்பரப்படுத்தும் அதே வேளையில், குரூஸ் இந்தியாவுடனான தனது நீடித்த தொடர்பைப் பற்றித் தெரிவித்தார் – ஒரு நாடு தனக்கு வெறும் போற்றுதலை மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் நினைவுகளை அளித்ததாகவும், மீண்டும் வர விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்!…
Read Moreமைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்ஷன் எபிக் ‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை!
‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் இந்த ஆக்ஷன் பேக்ட் திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக, வரும் மே 20 அன்று என்.டி.ஆர். பிறந்தநாளன்று படக்குழு எந்த அப்டேட்டும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், என்.டி.ஆரின் ‘வார்2’ திரைப்படத்தின் அப்டேட் அதே நாளன்று வெளியாகிறது. இதுகுறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் எதிர்பார்த்துள்ளனர். ‘வார்2’ படத்தின் பெஸ்ட்…
Read Moreடெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் – திரை விமர்சனம்
யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர் சந்தானம். படம் பிடிக்காவிட்டால் வெளுத்து வாங்கி விடுவார். இதனாலேயே படம் ஓடாது. இந்நிலையில் ஒரு திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு சந்தானத்தை தேடி வர… அந்த அழைப்பின் பேரில் அவரது குடும்பம் புதிய படம் பார்க்கும் ஆர்வத்தில் அந்த திரையரங்கத்திற்கு செல்ல… அங்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து அவர்களை காப்பாற்ற சந்தானமும் செல்கிறார். அப்போது அவரும், அவரது குடும்பமும், அந்த திரையரங்கில் திரையிடப்படும் படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள். சைக்கோ கிரைம் திரில்லர் படமான அதில் சிக்கிக் கொண்ட தனது குடும்பத்தினர், படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை அறிந்து அதிர்ந்து போகும் சந்தானம், அந்த சிக்கலில் இருந்து தன் குடும்பத்தை எப்படி மீட்கிறார் என்பதை காமெடி பாதி, களேபரம் மீதி என சொல்லி இருக்கிறார்கள்.…
Read Moreமாமன் – திரை விமர்சனம்
அக்கா-தம்பியின் அளவு கடந்த பாசம் தம்பியின் இல்லற வாழ்க்கையையே பாதிக்க நேர்ந்தால்….அதுதான் இந்த மாமன் கதை. கிராமங்களில் தாய் மாமன் உறவு உன்னதமானது. அப்படி ஒரு மாமனை திரைக்கு தந்து இருக்கிறார்கள். 10 வருடமாக குழந்தை இல்லாமல் அவமானத்தை மட்டுமே வெகு மானமாக பெற்றுக் கொண்டிருந்த தனது அக்காவுக்கு இப்போது மகன் பிறக்கிறான். பிறக்கும் மகன் அந்த தாய் மாமனுக்கு முழு நேர சந்தோஷமாகிறான். தூங்கும்போது கூட மாமனை கட்டிப் பிடித்துக் கொண்டே தூங்கும் அந்த சிறுவன், அதே மாமனுக்கு திருமணம் ஆகும்போது மாமன் குடும்பம் பிரிய காரணமாகிறான் பிரிந்த அக்கா தம்பி குடும்பம் மீண்டும் இணைந்ததா என்பது பாசமும் நேசமுமான திரைக்கதை. சூரியின் அக்கா சுவாசிகாவுக்கு தம்பி என்றால் உயிர். அதே மாதிரி தம்பியும் அக்காவை உயிருக்கும் மேலாக நேசிக்கிறான். இந்த அக்காவுக்கு பத்து வருடத்திற்கு…
Read Moreஜோரா கைய தட்டுங்க – திரைவிமர்சனம்
யோகி பாபு படம் என்றால் காமெடிக்கு உத்தரவாதம் இருக்கும். சில படங்களில் குணச்சித்திரவேடங்களிலும் கலக்குவார். இந்த இரு வேறு நிலைகளையும் தவிர்த்து இந்த படத்தில் யோகி பாபு ஏற்று இருப்பது பழிவாங்கும் கேரக்டர் என்பது தான் படத்தின் ஸ்பெஷல். கதை இதுதான். தான் உண்டு தன் மேஜிக் உண்டு என்று வாழ்ந்து வருபவர் யோகி பாபு. மேஜிக் மேன் என்பதால் ஆங்காங்கே இருந்து வரும் சில அழைப்புகளை ஏற்று அதில் வரும் வருமானம் மூலம் ஜீவனம் நடத்துபவர். ஆனால் அவர் மீதும் போட்டி பொறாமை கொண்ட ஆட்கள் ஏதேனும் காரணம் சொல்லி அவர் நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்து வந்தார்கள். ஒருமுறை யோகி பாபுவின் மேஜிக்கால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி சீரியஸ் நிலைமைக்கு போக, நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அடித்து துவைத்தது போக, காவல் நிலையத்திலும் தொடர்ச்சியாக அடி உதை.…
Read Moreபிக்பாஸ் அர்ச்சனா : “வலுவான புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்!”
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா தற்போது சினிமா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளார். சினிமாவில் என்ன சாதிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கு மற்றும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறார். பிக்பாஸ் அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. என்னுடைய முகமூடி இல்லாத அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது”. மேலும், ” இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இது என்னுடைய…
Read Moreபவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
இந்தக் கோடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு அபூர்வமான சினிமா நிகழ்வாக, பவர்ஸ்டார் ‘பவன் கல்யாண்’, வீர மல்லுவாக—ஒரு வீரர், குற்றவாளி, கவியரசர் என்ற அவதாரத்தில் திரையில் தோன்றுகிறார். இது வரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன; இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க, பட குழு மிகக் கடுமையாக உழைத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது சிங்கிளையும், படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரையும் வெளியிட தயாராகி வருகிறது. ட்ரெய்லர் வெளிவரும் தருணத்தில், எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்கு உயரும் எனத் தெரிகிறது. மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஹரி ஹர வீர மல்லு தற்போது இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடைபெறுகின்றன. VFX, Sound Design மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. தாமதங்கள், தடைகள் பல இருந்தாலும்,…
Read More