தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன்- பார்ட் 2’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ்…
Read Moreஅகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், “அகத்தியா” படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் “என் இனிய பொன் நிலாவே.” பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்த கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளரும் தொலைநோக்கு பார்வையாளருமான…
Read Moreகேம் சேஞ்சர் – திரை விமர்சனம்
மாநில முதல்வருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் இடையே ‘நீயா… நானா’ போட்டி வந்தால் அதுதான் இந்த கேம் சேஞ்சர். ஆந்திர முதல்வர் ஸ்ரீ காந்த்துக்கு ஜெயராம், எஸ் ஜே சூர்யா என இரு மகன்கள். மகன்கள் இருவருக்குமே அப்பாவின் முதல்வர் நாற்காலி மீது ஒரு கண். இதற்கிடையே விசாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பதவி ஏற்கும் ராம் சரண் தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் முதலமைச்சர் கனவில் இருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறார்.இதில் உச்சக்கட்டமாக முதல்வர் பங்கேற்கும் விழா ஒன்றின் பாதுகாப்பு பணிக்கு ராம்சரண் மீது கை நீட்டி விடுகிறார் எஸ். ஜே.சூர்யா. பதிலுக்கு ராம் சரணும் கை நீட்ட, தொடர்ந்து முதல்வர் உத்தரவின் பேரில் கலெக்டர் சஸ்பெண்ட் ஆகிறார்.எஸ்.ஜே. சூர்யாவுக்கு மந்திரி பதவி பறி போகிறது. தந்தையே தன்னை பதவி நீக்கம் செய்ததை தாங்க முடியாத எஸ்…
Read Moreவணங்கான் – திரை விமர்சனம்
பேசும் திறனும் கேட்கும் திறனுமற்ற கோட்டிக்கு தனது தங்கை தான் உலகம். கன்னியாகுமரியில் கிடைத்த வேலையை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் கோட்டி தன் பார்வையில் முறைகேடாக எது நடந்தாலும் அதை தட்டிக் கேட்பவன். கை கால்களை உடைக்கவும் தயங்க மாட்டான். அவனது இந்த முரட்டுத்தனம் மாற நிரந்தரமாக ஒரு வேலை இருந்தால் நல்லது என்று முடிவு செய்யும் அவனது நலம் விரும்பிகள் மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில் செக்யூரிட்டி வேலை வாங்கி கொடுக்கிறார்கள். அங்கே நடக்கும் ஒரு விபரீத சம்பவம் அவன் காதுக்கு வரும்போது அவன் எடுக்கும் விஸ்வரூபமே மீதிக்கதை. கோட்டியாக அருண் விஜய் அந்த கதாபாத்திரத்தில் வருத்தி தன்னை நிறுத்தி இருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அந்தக் கோட்டி கேரக்டரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீஸ் நிலையத்தில் இருக்கும் அண்ணனிடம் என்ன…
Read More“காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா!!
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது…. காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 ரிலீஸாகிறது. ஜெயம் ரவி சார் நீண்ட காலம் கழித்து திரையில் ரொமான்ஸ் செய்துள்ளார். பார்க்க மிக நன்றாக உள்ளது. நித்யா மேனன் ரொம்ப செலக்டிவாக தான் கதாப்பாத்திரங்கள் செய்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு, இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடி உங்களைக் கவர்வார்கள். வினய் மிக வித்தியாசமான…
Read Moreகோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’ – விவசாயத்துறையில் சேவைமனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம்.
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது. இதில் • சிறந்த பெண் வேளான் தொழில் முனைவோர் விருது திருமதி. சுகந்திக்கும் • நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது திருமதி. சியாமளாவுக்கும் • மாபெரும் வேளான் பங்களிப்புக்கான விருது – கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கும் • கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான விருது கால்நடை மருத்துவர் திருமிகு.…
Read Moreதனுஷ் வெளியிட்ட அதர்வா முரளியின் ‘டி என் ஏ’ பட டீசர்
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ ஃபர்ஹானா ‘ போன்ற வெற்றி படைப்புகளை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர் , சேத்தன், ரித்விகா , கே பி , சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், ‘பசங்க ‘ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் –…
Read Moreஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு
இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் உரையாடல்களை தீவிக் எழுத, ஷான் லொகேஷன் படத் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கவனிக்க, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார்.…
Read Moreஇசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’.
இதில் ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், சாந்தினி தமிழரசன், குமார் நடராஜன், சரத், நவ்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். அறிமுக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் எடிட்டர் ஸ்ரீகாந்த் நடன இயக்குனர் தினேஷ் குமார் மற்றும் சிந்தியா லூர்டே தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிக விரைவில் குடும்பங்கள் கொண்டாட திரைக்கு வர உள்ளது Creative head சிந்தியா லூர்டே மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் இயக்குனர் தினேஷ் தீனா கதைக் களம் பற்றி கூறியதாவது. அன்பான தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் கூடிய அழகான குடும்பம். இந்தக் குடும்பத்தில், நம் நாயகன் சக்தி ஒரு புயல் போன்றவர். அமெரிக்காவிலிருந்து தமிழ் கலாச்சாரத்தை நேசிக்க வந்த அமைதியான மற்றும் மென்மையான தென்றல் நம் நாயகி ஷிவானி. நாயகனின்…
Read More“காதலில் எத்தனை வகை உண்டு தெரியுமா”: ‘காத்துவாக்குல ஒரு காதல்’ பட விழாவில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா MP ருசிகர தகவல்!
நிகழ்வில் மத்திய முன்னாள் அமைச்சர் திரு ஆ . ராசா MP பேசியதாவது : “இந்த விழாவிற்கு என்னையும் அழைத்து பெருமை சேர்த்திருக்கும் தயாரிப்பாளர் எழில் இனியன் அவர்களே, இயக்குனர் மாஸ் ரவி அவர்களே இத்திரைப்படத்தின் கலைஞர்கள் மஞ்சுளா அவர்களே, ஜி. கே.வி அவர்களே, சூப்பர் சுப்பராயன் அவர்களே, சுபாஷ் மணியன் அவர்களே, ராஜ்குமார் அவர்களே, இவர்களோடு இணைந்து பணியாற்றிய ஏனைய கலைஞர்களே… பத்திரிக்கையாளர்களே, ஊடகவியல் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் . நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் கலை இலக்கியம் – திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் அரசியலுக்கு வந்த 90-களில் இருந்தே, அதிகமான நேரத்தை சினிமாவிற்கு என்னால் ஒதுக்க இயலாமல் போய்விட்டது. திரைப்பட நிகழ்வுகள் சிலவற்றில் தலைவர் கலைஞர் அவர்களுடன் பங்கேற்றது உண்டு. அவ்வளவுதான். நாங்கள்…
Read More
