“இது என்னடா இசைக்கு வந்த சோதனை என்கிற விதமாக விஷாலை பாட வைத்தோம்” ; மதகஜராஜா இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கலாட்டா

கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பல நல்லவர்களின் கூட்டு முயற்சியால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி இருவரும் நடித்துள்ளனர். அப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிவண்ணன் மற்றும் மனோபாலா போன்ற மறைந்த…

Read More

மெட்ராஸ் காரன்- திரை விமர்சனம்

விடிந்தால் கல்யாணம். ஆனால் முந்தின இரவு மாப்பிள்ளை ஒரு கொலை குற்றத்தில் மாட்டிக்கொண்டால்… சென்னையில் நல்ல உத்தியோகத்தில் இருக்கும் நாயகன் தனது காதல் திருமணத்தை புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடத்த விரும்புகிறான் அதற்கான வேலைகள் நடந்து விடிந்தால் கல்யாணம் என்கிற சூழலில், ஹோட்டலில் தங்கி இருக்கும் தனது நாளைய மனைவி அழைப்பின் பேரில் அங்கே காரில் போகிறான். போகும் வழியில் நாயகனின் கார் ஒரு கர்ப்பிணி பெண்ணின் மீது மோத, அதனால் அந்த ஊர் மக்களின் ஆவேசம், போலீசில் புகார் என்று அந்த ராத்திரி நாயகனின் வாழ்வை ரணகளமாக்க… திருமணம் நடந்ததா அல்லது அந்த பிரச்சனை நாயகனை ஜெயிலுக்கு அனுப்பியதா? என்பது விறுவிறுப்பான அதே நேரம் எதிர்பார்ப்புக்குரிய திரைக்களம். மலையாளத் திரை உலகில் புகழ் பெற்ற நாயகனாக வழங்கும் ஷேன் நிகம்…

Read More

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகிறது !!

ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது…. எங்கள் படத்தை வாழ்த்த இங்கு வந்துள்ள பிரபலங்களுக்கு நன்றி. ஒரு நல்ல படம் தந்துள்ளோம். நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் முழு ஆதரவைத் தர வேண்டும், நன்றி எடிட்டர் அருள் E சித்தார்த் பேசியதாவது…. தேஜாவு தான் என் முதல்ப்படம். அந்தப் படத்தில் தான் அரவிந்த் அறிமுகம். இந்தப்படத்துக்கும் நீங்கள் தான் எடிட்டர் என்றார். தேஜாவு படத்தில் பாட்டு, ஃபைட் இல்லை…

Read More

TTF வாசனின் IPL-ல் திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன்

மும்பையில் நடந்த பாடல் பதிவின் பொழுது சங்கர் மகாதேவன் பாடலை கேட்டு, தனித்துவமான இசையாக இருப்பதாகவும், இந்த பாடல் எனக்கு கிடைத்திருந்தால் நானும் நன்றாக பாடியிருப்பேன் என்று கூறி இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தியை பாராட்டியுள்ளார். புகழ்பெற்ற பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் மகனும், பிரபல இந்தி திரைப்பட பாடகருமான சிவம் மகாதேவன், அறிமுக இயக்குனர் கருணாகரன் IPL திரைப்படத்தில் டூயட் பாடலை பாடியுள்ளார். TTF வாசன், குஷிதா இருவரும் நடிக்கும் இந்த பாடலை அந்தமான், கேரளா, பாண்டிச்சேரி போன்ற எழில்மிகு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் கிஷோர், அபிராமி, சிங்கம்புலி, ஹரீஷ் பேரடி, ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், திலீபன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். G.R. மதன் கிருஷ்ணன் தயாரிப்பில், விரைவில் வெளியாகவிருக்கும் IPL திரைப்படத்தின் பிண்ணனி இசை சேர்ப்பு…

Read More

”‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது” – யுவன் ஷங்கர் ராஜா!

இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா காம்பினேஷனில் நிறைய மறக்க முடியாத பாடல்கள் வந்திருக்கிறது. இந்த ஹிட் காம்பினேஷன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘நேசிப்பயா’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இசைக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தில் பணிபுரிந்தது பற்றிய மகிழ்வான அனுபவத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்து கொள்கிறார். யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது, “எனது நண்பர் விஷ்ணுவர்தனுடன் பணிபுரிவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் இணைந்து பணிபுரிந்த படங்களை கொண்டாட ரசிகர்கள் ஒருபோதும் தவறியதில்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு நாங்கள் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கியபோது, இசை ஆர்வலர்கள் கொண்டாடும்படியான இசையைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடி பாடல்கள் ரசிகர்கள்…

Read More

“’வணங்கான்’ படத்தில் நடிக்க ஆரம்பித்த பின் தான் என்மீதே வெளிச்சம் விழுந்தது” ; நடிகை ரோகினி பிரகாஷ்

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். பொங்கல் பண்டிகை ரிலீஸாக வரும் ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.. பொதுவாகவே இயக்குநர் பாலாவின் படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் அதன்பிறகு எந்த அளவிற்கு திரையுலகப் பயணத்தில் உச்சத்தை நோக்கிச் செல்வார்களோ, அதே போல கதாநாயகிகளும் மிகப்பெரிய அளவில் கவனம் பெறவே செய்கிறார்கள். அபிதா, லைலா, பூஜா, ஜனனி ஐயர், வரலட்சுமி என இதற்கு முந்தைய பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே பரபரப்பு வளையத்திற்குள் வந்துவிட்டார் நடிகை ரோஷினி பிரகாஷ். 2016ல் இருந்து தெலுங்கு, கன்னடம், தமிழ் என…

Read More

“மெட்ராஸ்காரன்” திரைப்படம், பொங்கல் பண்டிகை வெளியீடாக, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது!!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம். இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் சிங்கிள் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று டிரெய்லரை வெளியிட்டனர். பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் B.ஜெகதீஷ் பேசியதாவது.. ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது பத்திரிக்கையாளர்கள் தான், உங்களுக்கு நன்றி. டீசரை வெளியிட்டுத் தந்த எஸ் டி ஆருக்கும், டிரெய்லரை வெளியிட்டுத் தந்த விஜய்…

Read More

ஐடென்டிட்டி – திரை விமர்சனம்

ஒரு கொலையில் தொடங்கி முடிவு வரை விறுவிறுப்பாக பயணிக்கும் திரைக்கதை இந்த படத்தின் முதல் பலம். ஜவுளிக் கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து பணம் பார்க்கும் ஒருவன் கொல்லப்படுகிறான். அப்படியே உடம்பை எரித்தும் விடுகிறான் இந்தக் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சி திரிஷா. அவர் மூலம் கொலையாளியை கண்டு பிடிக்க முடிவு செய்யும் போலீஸ் அதிகாரி வினய், குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து அப்படியே வரையும் ஆற்றல் பெற்ற டொமினோ தாமசின் உதவியை நாடுகிறார். திரிஷா சொல்லும் அடையாளங்களை வைத்து முகத்தோற்றத்தை வரையும் டொவினோ தாமஸ் வரைந்திருப்பது அவர் படத்தையே. இந்தக் கொலையை நேரில் பார்த்த சில நாட்களுக்கு முன்பு தான் வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு காப்பாற்றப்படுகிறார் திரிஷா. இதன் பிறகு அவரது ஊகித்தறியும் ஆற்றல் சற்று தாமதப்படுகிறது. இந்த…

Read More

அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !!

தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின், முதல் சிங்கிள் பாடல், “காற்றின் விரல்” இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை, அதிர வைக்கும் விஷுவல்களுடன், திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது இப்பாடல். இப்பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக “அகத்தியா” இருக்கும் என்று உறுதியளிக்கிறது. ஃபேண்டஸி வகையில், திகில் மர்மம் நிறைந்த ஒரு புத்தம் புது உலகிற்கு அழைத்துச் செல்லும் இப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. படத்திற்கு மேடை அமைத்துத் தரும் பாடல் காற்றின் விரல் ஒரு மெல்லிசை டூயட் பாடலாகும், இது அகத்தியா படத்தின் களத்தையும் அதன் மாயாஜால உணர்வுகளையும்,…

Read More

  100 கோடி பட்ஜெட்டில் உருவாகும், “நாகபந்தம்”  5 மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது!!

பிரபல திரைப்படைப்பாளி அபிஷேக் நாமா, தொடர்ந்து, தனது தனித்துவமான திரைப்படங்கள் மூலம், ரசிகர்களை அசத்தி வருகிறார். தற்போது “நாகபந்தம்” எனும் பிரம்மாண்டமான சாகசத் திரைப்படத்தை, உருவாக்கி வருகிறார். தி சீக்ரெட் ட்ரெஷர் எனும் டேக் லைன், ரகசிய புதையலைக் குறிக்கிறது. புதையலைத் தேடும் வித்தியாசமான களத்தில், புத்தம் புதிய தனித்துவமான சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக, இப்படம் இருக்கும். அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் மூலம் கிஷோர் அன்னபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், ஆக்‌ஷன் பெத்த கபுவின் மூலம் அறிமுகமான விராட் கர்ணா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படத்தை, லட்சுமி ஐரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோருடன் தாரக் சினிமாஸ் இணைந்து வழங்குகிறது. இன்று, தயாரிப்பாளர்கள் இப்படத்தின் ஒரு ப்ரீ-லுக் போஸ்டரை வெளியிட்டனர், அதில் கதாநாயகன் ஒரு பழமையான கோவிலின்…

Read More