பெரிதும் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் ‘பயாஸ்கோப்’. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் வெளியிட்டனர். சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும், இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பயாஸ்கோப்’ குறித்து பேசிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், “ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து நான் ‘வெங்காயம்’ திரைப்படத்தை எப்படி…
Read Moreஅமெரிக்கா டல்லாஸில் நடைபெற்ற “கேம் சேஞ்சர்” முன் வெளியீட்டு நிகழ்வு !!
குளோபல் ஸ்டார் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸ் நகரின் கர்டிஸ் கல்வெல் மையத்தில் நடைபெற்றது. இந்திய திரை வரலாற்றில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியத் திரைப்படத்தின் முதல் முன் வெளியீட்டு நிகழ்வு இதுவாகும். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள, மாபெரும் கொண்டாட்டமாக இந்நிகழ்வு நிகழ்ந்தேறியது. குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சிரிஷ், இசையமைப்பாளர் தமன், நடிகை அஞ்சலி உள்ளிட்ட படத்தின் முக்கிய குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ள இயக்குநர் சுகுமார் மற்றும் புச்சி பாபு சானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த அற்புதமான நிகழ்வை ராஜேஷ் கல்லேபள்ளி ஏற்பாடு செய்திருந்தார். டல்லாஸ்…
Read Moreதி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளையை திறந்து வைத்த நடிகர் ஆர்யா
சென்னையின் பாரம்பரியமிக்க பிரியாணி கடையான தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளை, சென்னை அண்ணாநகரில், கோலாகலமாக துவக்கப்பட்டது. பிரபல நடிகர் ஆர்யா இக்கடையை துவக்கி வைத்து வாழ்த்துத் தெரிவித்தார். 2009 ல் ராம்குமார், சுந்தர், காந்தினி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட சென்னை துரைப்பாக்கத்தில், துவங்கப்பட்ட தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடை, காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையில், தனித்துவமான பிரியாணியை வழங்கி, மக்களின் மனதில் இடம்பிடித்தது. இந்த 15 வருடங்களில் இக்கடை, துரைப்பாக்கம், தரமணி, ஆழ்வார்பேட்டை , வேளச்சேரி மற்றும் காட்டுப்பாக்கம் என 6 இடங்களில் கடை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கடையின் 6 வது கிளை அண்ணாநகரில் நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா தெரிவித்ததாவது… எனக்கு தி ஓல்ட் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அண்ணாநகர் பிரியாணிக்கு பெயர் பெற்ற இடம்,…
Read More“இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை வித்தியாசமாக எடுத்துள்ளனர்” — ‘தி ஸ்மைல் மேன்’ பட விழாவில் நடிகர் சரத்குமார் புகழாரம்
மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் பேசியதாவது…. இது தயாரிப்பில் என் முதல் தமிழ்ப்படம், முழுமையான ஒத்துழைப்பு தந்த என் குழுவினருக்கு நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி. திரைக்கதை எழுத்தாளர் கமலா ஆல்கெமிஸ் பேசியதாவது… எங்க செட்லயே உற்சாகமான நபர் சரத்குமார் சார் தான். பவுண்ட் ஸ்க்ரிப்ட் வாங்கி வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டு, எப்பொழுதும் தயாராக இருப்பார். அவரின் 150 பட திரை அனுபவம், அறிவு எங்களை திகைக்க…
Read More‘மெண்டல் மனதில்’ படத்தின் படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த ‘இசை அசுரன் ‘ ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த படைப்பாளியான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்’ மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஆர். கே. விஜய் முருகன் கவனிக்க, பட தொகுப்பு பணிகளை பாலாஜி மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். …
Read Moreமுஃபாஸா தி லயன் கிங் – திரை விமர்சனம்
2019 ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான தி லயன் கிங் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த வெற்றியை குறிவைத்து வெளியாகி இருக்கும் படம், ‘முபாசா தி லயன் கிங்.’ பபூன் குரங்கான ரபீக் சிம்பாவின் மகளிடம் சொல்லும் பிளாஷ்பேக்குடன் படம் தொடங்குகிறது. சிறுவயதில் தங்கள் பூர்வீக இடத்தை விட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒபாசா வேறொரு சிங்கஆளுகை இருக்கும் காட்டுக்குள் வந்து சேர்கிறது. ஆனால் அந்த சிங்கக் கூட்டத்தின் தலைவனான முபாசி, இடம் பெயர்ந்து வந்த இந்த குட்டி சிங்கத்தை ஏற்க மறுக்கிறது. இதற்குள் முபாசியின் மகன் டாக்காவின் அன்பை பெற்று விட்ட படியால் பெண் சிங்கங்கள் கூட்டத்தில் தங்கிக் கொள்ள அனுமதி கிடைக்கிறது. இந்நிலையில் எதிர்பாராமல் நடந்த ஒரு சண்டையில் வெள்ளை நிற சிங்கக் கூட்டத்தை சேர்ந்த ஒரு குட்டி சிங்கத்தை முபாசா கொன்று…
Read MoreUI (உய்) – திரை விமர்சனம்
உலகளாவிய நுண்ணறிவு என்ற பொருள் படும் யுனிவர்சல் இன்டெலிஜென்ஸ் என்பதன் சுருக்கமே இந்த ui. கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் உபேந்திரா எழுதி இயக்கியதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். அதுவும் இரட்டை வேடத்தில். படத்திலும் அவர் இயக்குனராகவே வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை பார்க்கும் ரசிகர்களில் பலர் பித்து பிடித்தது போல் ஆகிறார்கள். அதுவரை கோழையாக இருந்த சிலர் தைரியமான முடிவுகள் எடுக்கிறார்கள். இதனால் இந்த படத்தை ஒரு தரப்பு கொண்டாடி தீர்க்க, மற்றொரு தரப்போ படத்தை தடை செய்தாக வேண்டும் என்று போராடுகிறது. பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் மூன்று முறை அந்த படத்தை பார்த்த பிறகும் எப்படி விமர்சனம் எழுதுவது என்று தடுமாறுகிறார். அதனால் அவர் அந்தப் படத்தை இயக்கிய உபேந்திராவையே சந்திக்க புறப்படுகிறார். அந்த சந்திப்பில் அவரு க்கு கிடைத்த…
Read Moreவிடுதலை 2 – திரை விமர்சனம்
முதல் பாகத்தின் இறுதியில் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு மலை கிராமத்தில் கனிம சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் வாத்தியார் தலைமறைவாக இருக்கும் இடம் தெரிந்து அவரை துணிச்சலாக கைது செய்கிறார் குமரேசன். சித்திரவதை சகிதம் போலீசார் பெருமாள் வாத்தியாரைவிசாரிப்பது போல முதல் பாகம் நிறைவடைகிறது. இரண்டாம் பாகத்திலோ பெருமாள் வாத்தியாரின் முன் கதை சொல்லப்படுகிறது. போலீஸ் காவலில் இருக்கும் அவரது வாக்குமூலமும் அதைத் தொடர்ந்து காவல்துறையின் ரியாக்சனும் தான் இந்த இரண்டாம் பாகம். இந்த இரண்டாம் பாகத்தில் பண்ணை அடிமை முறை, fஉழைக்கும் வர்க்க மக்களை தங்களது உடைமையாக கருதும் பண்ணைகளின் வக்ரம், கூலி உயர்வு கேட்டதால் நிகழ்த்தப்பட்ட கட்டாய மரணங்கள்என அங்குள்ள மக்களின் வலி வேதனைகளை…
Read Moreபாலா-25 & வணங்கான் இசை வெளியீடு ; கோலாகலமாக நடந்த இருபெரும் விழா
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார், கே. எஸ். அதியமான், வினோத் (கொட்டுக்காளி), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z. துரை, சிங்கம் புலி, சரண், அரவிந்த் ராஜ், எழில், கோபிநாத் (ஜீவி),…
Read Moreமோட்டார் விளையாட்டு துறையில் சாதனை படைத்த முதல் இந்தியருக்கு தமிழக அரசு வழங்கிய ரூ. 5 லட்சம்
சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும், 2024 அக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்ற FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். இளம் சாதனையாளரான ரிவான் தமிழ்நாடு மாநில மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள காசோலையை துணை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார். தமிழக அரசின் புதிய முன்னோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் கீழ், மோட்டார் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்…
Read More
