‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு!!

பிரைம் வீடியோ – அதன் அசல் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் நகைச்சுவை இணைய தொடரின் வசீகரமான முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள்ளார்ந்த கிராமத்தின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த இணைய தொடர் எளிமையானதாகவும், அதே தருணத்தில் பிடிவாதமான கதையம்சத்தின் மூலம் மனதைக் கவரும் வகையிலும் நகைச்சுவையுடன் தயாராகி இருக்கிறது.‌ இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இந்த தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக…

Read More

நடிகை சாந்தி பாலச்சந்திரன் திரைக்கதை எழுதுவதிலும் தடம் பதிக்கிறார்!

நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸின் அடுத்த படத்திற்கான கூடுதல் திரைக்கதையை நடிகை சாந்தி எழுதியுள்ளார். எழுத்தாளரும் இயக்குநருமான டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. சாந்தி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் பல விருதுகளை வென்றுள்ளன. ‘சூரரைப் போற்று’ படத்தின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்ற ஷாலினி உஷாதேவி இயக்கிய மலையாளத் திரைப்படம் ‘என்னென்னும்’-ல் சாந்தி நடித்திருந்தார். இந்தப் படம் கேரள மாநில விருதுகள் 2024 இல் சிறப்பு நடுவர் விருதை வென்றது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நியூசெட்டல் இன்டர்நேஷனல் ஃபென்டாஸ்டிக் ஃபிலிம் பெஸ்டிவலில் இத்திரைப்படம் சர்வதேச விமர்சகர் விருதையும் வென்றது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சாந்தியின் முதல் இந்தி படமான ‘குல்மோஹர்’ சிறந்த இந்தி படத்திற்கான விருது வென்றது. அமேசான்…

Read More

ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட்டின் அடுத்த ஒரிஜினல் படைப்பு ‘கடலோர கவிதை’ வெளியாகிறது!

ஒரு ஊரிலேயொரு ஃபிலிம் ஹவுஸுடன் இணைந்து ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் தங்களின் அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. தமிழில் ‘கடலோரக் கவிதை’ மற்றும் மலையாளத்தில் ‘ஈ தீரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படைப்பை ப்ரீத்தி ஸ்ரீவிஜயன் தயாரித்துள்ளார். ஸ்வாதினி இயக்கத்தில், தர்ஷன் மற்றும் நிஹாரிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த மியூசிக்கல் டிராமா நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும். இதற்கு விஷால் சுரேஷ் இசையமைத்துள்ளார். கான்செப்ட் மற்றும் ஒளிப்பதிவை இலை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் கவனித்துள்ளார். அருண் பிரபா எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு தமிழில் அபிஜித் ஞரோலி மற்றும் ஸ்வேதா சுகதனும் மலையாளப் பதிப்பிற்கு அபிஜித் ஞரோலியும் குரல் கொடுத்துள்ளனர். ‘கடலோரக் கவிதை’யின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற அடுத்தடுத்த உற்சாக அறிவிப்புகளைத் தெரிந்து கொள்ள ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட்டை…

Read More

நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … ஒளிப்பதிவாளர் சரண் பேசியதாவது… முதலில் இந்த திரைப்படத்தில் பணிபுரிய அழைத்த, நண்பர், இயக்குநர் சரவணன் அவர்களுக்கு, நன்றி. இதற்கு முன் ‘கிடாயின் கருணை மனு’, ‘விழித்திரு’ திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள். நடிகர் சசிகுமார் எனக்கு மிகவும்…

Read More

ஏஆர்எம் (அஜயண்டே ரண்டாம் மோஷனம்) விமர்சனம் 4/5

அஜயனின் ரெண்டாம் மோஷனம்’ (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்பதன் மலையாள சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’. கதை… வான்வெளியில் இருந்து விழும் எரிகட்களைக் கொண்டு, சியோதி என்ற அதிசய விளக்கு செய்யப்படுகிறது. அது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா மகன் பேரன் ஆகியோர் கைகளில் சிக்கியது எப்படி அதனால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டது எப்படி என்பதை சுவையாக சொல்லி இருக்கும் படம். ஏஆர்எம் (அஜயண்டே ரண்டாம் மோஷனம்). கேரளாவில் ஒரு கிராமத்தில் வசிக்கும், அஜயன் களரியில் செம கில்லாடி.. மேலும் வாழ்வாதாரத்திற்காக எலக்ட்ரீசியன் பிளம்பர் பணிகளையும் செய்து வருகிறார்.. இவரது தாத்தா அந்த ஊரில் இருக்கும் பழம்பெரும் விலைமதிப்பில்லாத சியோதி விளக்கைத் திருடிச் சென்றதாக குற்றம் சாட்டுகின்றனர்.. இதனால் இவரது குடும்பம் மீது அந்த திருட்டுப்பழி தொடர்ந்து வருகிறது.. தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் இந்தக் குற்றச்சாட்டை அஜயன்…

Read More

சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் இன்று மதியம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். ‘டான்’ படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றார்.

Read More

‘மையல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை சம்ரித்தி தாரா!

  மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ‘மையல்’ படத்தில் வலுவான கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் டிராமாவாக உருவாகி இருக்கும் தனது முதல் படத்திலேயே இதுபோன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி என்கிறார் சம்ரித்தி. எந்த சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரித்தி சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ‘ மையல் ’ படத்தில் தனது பணி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சம்ரித்தி, “இந்தப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே புகழ்பெற்றவர் நடிகை சம்ரித்தி. மாத்ருபூமி மிஸ் க்ரிஹலக்ஷ்மி ஃபேஸ் கேரளா 2019 மற்றும் ஸ்டார் மிஸ் ஃபேஸ் ஆஃப் இந்தியா 2021 ஆகிய…

Read More

நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை வெளியீட்டு விழா

விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி, இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.‌ தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் ஃபேக்டரி சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்…

Read More

ராஜூ முருகன் வசனத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக்!

  இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் நமக்கு கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ மற்றும் ‘ஆகஸ்ட் 16, 1947’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. தற்போது கௌதம் கார்த்திக் ‘கிரிமினல்’ மற்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இப்புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். எளிய மக்களின் வாழ்வியலையும் அதிகாரத்திற்கு எதிரான அரசியலையும் அழுத்தமாக பதிவு செய்யும் இயக்குநர் ராஜு முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தினா ராகவன்…

Read More

பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில், ரெட் ஃபிளவர் திரைப்படம் !!

  ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் K மாணிக்கம் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் “ரெட் ஃபிளவர்” திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்காலத்தை தத்ரூபமாக காட்டும் வகையில் இதன் VFX பணிகள் தற்போது உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் நடந்து வருகிறது இந்நிலையில், தற்போது ஹங்கேரிய இசைக்குழுவுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் ராம் இப்படத்திற்காக பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் துவக்கியுள்ளார். தமிழ் இசைத்துறையில் நம்பிக்கைக்குரிய புதிய திறமையான சந்தோஷ் ராம், மறக்கமுடியாத மற்றும் புதுமையான ஒலிப்பதிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திரைப்படத்தில் தனது முழுப் படைப்பாற்றலை செலுத்தி வருகிறார். இது குறித்து சந்தோஷ் ராம் கூறுகையில்.. “இது எனது முதல் படம் என்பதால், இசையை தனித்து நிற்கச் செய்ய வேண்டி, என் முழு உழைப்பையும் தந்து வருகிறேன். ரெட்…

Read More