கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்துகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது!! நாட்டில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020-யை நடத்துவதற்கு எதிராக ஆலோசனை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. MEA செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழக்கிழமை ஊடகங்களில் உரையாற்றினார், 2020 ஆம் ஆண்டில் IPL நடத்த விரும்புகிறீர்களா என்பதை IPL அமைப்பாளர்கள் தீர்மானிக்க வேண்டும். ஆனால், பணக்கார T-20 போட்டியுடன் முன்னேற வேண்டாம் என்பது அமைச்சின் ஆலோசனையாகும் என்றார். இருப்பினும், இறுதி முடிவை IPL அமைப்பாளர்களிடம் விட்டுவிடுவதாகவும் MEA கூறியது. “இதை முன்னெடுத்துச் செல்லலாமா வேண்டாமா என்பதை அமைப்பாளர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த நேரத்தில் அதைச் செய்யக்கூடாது என்பதே எங்கள் ஆலோசனை, ஆனால் அவர்கள் முன்னேற விரும்பினால்…
Read More“காவல்துறை உங்கள் நண்பன்” இசை வெளியீட்டு விழா !
தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்” நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார். இப்படத்தின் இசை விழா பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடந்தேறியது. நிகழ்வில் தயாரிப்பாளர் T. சிவா பேசியது … தற்போது திரையுலகம் பலமுனைகளிலும் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா டிக்கெட் மீது ஏற்கனவே அதிகப்படியான வரிவிதிப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசு மேலும் 8 சதவீத TDS வரி விதித்துள்ளது. நாங்கள் இப்போது மத்திய அரசிடம் இதனை முறையிட…
Read Moreவெளியீட்டிற்கு முன்னதாகவே ’வால்டர்’படத்தின் சாட்டிலைட் விற்றுவிட்டது!- சிபிராஜ் பெருமிதம்!
தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ் மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது அதே “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். த்ரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படம் வெளியாகும் முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் பேசியது… இந்தப்படத்தை பற்றி நிறைய பேசலாம். முன்பே இசை விழாவில் இப்படம் குறித்து பேசியுள்ளோம். படத்தில் முக்கியமான சமூக கருத்தை பற்றி கூறியிருக்கிறோம். நீங்கள் அனைவரும் மக்களுக்கு அதனை எடுத்து செல்ல வேண்டும். படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. படத் தொகுப்பாளர்…
Read Moreகர்நாடகா கலவரத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் : இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவல்!
எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். விஜயா ,பெரேரா நடித்துள்ளனர்.இப்படத்துக்கு இசை- ஆதிப், ஹமரா, சி.வி ,கு.கார்த்திக் .எடிட்டிங் பாஸ்கோ, நடனம் சாய் பாரதி. இந்த ‘டிம் டிப் ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.பாடல்களை இயக்குநர் கே .பாக்யராஜ் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது, “இங்கே .இசையமைப்பாளர்கள் கதாநாயகன் எல்லோருடைய பெற்றோர் களையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து சந்தோஷப் படுத்தினார்கள். இது எல்லோருக்குமே அமைவதில்லை. இது ஒரு நல்ல விஷயம்.எல்லாரும் பேசும் போது தயாரிப்பாளர் எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார் இயக்குநர் எவ்வளவு…
Read Moreநான் அப்செட் ; மா. செ. கூட்டத்திற்கு பின் ரஜினி பேட்டி – முழு விபரம்!
தமிழகத்தில், 2021ல், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அதற்கான முன்னேற்பாடாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். திரைமறைவில், கூட்டணி குறித்தும், துாதர்கள் வாயிலாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த ரஜினி, டில்லியில் நடந்த வன்முறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை தோல்வியும் தான் காரணம் என, காட்டமாக பேட்டி அளித்தார். மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கத் தயார் என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முஸ்லிம் அமைப்புகள், மத குருமார்களையும் அழைத்து பேசி வருகிறார். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் தேர்தல் குறித்தும், கட்சி அறிவிப்பது பற்றி விவாதித்து உள்ளனர். மன்ற…
Read Moreநிர்பயா – குற்றவாளிகளுக்கு தூக்கு ; 4வது முறையாக புதிய தேதி அறிவிப்பு!
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று முறை தேதி குறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை பிறப்பிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீது பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராண இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. *எனினும் தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் நோக்கத்தில், குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி வந்தனர். இதனால்,…
Read Moreநந்திதா ஸ்வேதாவின் அதிரடிப் படமான IPC 376 படப்பிடிப்பு நிறைவு!
அதிரடி ஆக்ஷன் படங்களில் கதாநாயகிகள் கெத்து காட்டுவது இப்போது ட்ரெண்ட். மேலும் பெண் களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளி யாகி வெற்றிபெற்றும் வருகின்றன. இது தமிழ்சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படத்தில் நடித்துள்ளார். அட்டக்கத்தி படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்களிடையே பிடித்துள்ள நந்திதா ஸ்வேதா இதில் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம். நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகவல். சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு…
Read Moreமீடியா கொண்டாடியதற்கு நன்றிகள் – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றி விழாவில் ஹீரோ பேச்சு!
துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்திருந்த காதல், ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியிருந்தார். பிப்ரவரி 28 அன்று வெளியான இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மக்கள் என அனைவரிடத்திலும் பாராட்டு பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாட படக்குழு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. இந்நிகழ்வில் வீடியோ வழியே Viacom 18 நிர்வாக அதிகாரி அஜித் அந்தேரி பேசியது… Viacom 18 மூலம் தனித்தன்மை மிக்க படங்கள் உருவாக்கவே நாங்கள் விரும்புகிறேம். எங்கள் நிறுவனம் மூலம் வித்தியாசமான படங்கள் செய்யவே விரும்புகிறோம் அந்த வகையில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. துல்கர்…
Read Moreபெரிய குடும்பப் படம் இந்த ‘ராஜவம்சம்’!
செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரித்துள்ள படம் ராஜவம்சம். சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு எழுதி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் ராஜா பேசியது : “இயக்குநர் கதை சொன்னதும் படம் பண்ண ஹீரோவிடம் டேட் கேட்டோம். அவரும் உடனே டேட் கொடுத்தார். அடுத்து இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி படம் எடுப்பது என்று யோசித்தேன். ஆனால் இயக்குநர் “சார் எடுத்துவிடலாம் சார்” என்று நம்பிக்கையாகச் சொன்னார். இந்தப்படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் மற்ற அனைத்து நடிகர்களும் யோசிக்காமல் டேட் கொடுத்தார்கள். இப்படத்தில் ஒத்துழைத்து கொடுத்து நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கு என் நன்றி” என்றார் நடிகர் விஜயகுமார் பேசியதாவது, “ராஜ வம்சம்..இந்தப்படம் ஒரு ராஜவம்சம். சசிகுமார் சிறந்த நடிகர் சிறந்த பண்பாளர்,…
Read Moreஇறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” !
வேகத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் கடும் உழைப்பின் வழியே, புதிய இலக்கணம் வகுத்திருக்கிறது “சினம்” படக்குழு. அருண் விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்க சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட “சினம்” படம் தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டு திரையுலகமே ஆச்சயப்படும் வேகத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில், ஆக்ரோஷமான சண்டைக்காட்சியை எடுத்து முடித்துள்ளது படக்குழு. தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகளை துவக்கவுள்ளது “சினம்” படக்குழு. இது குறித்து இயக்குநர் GNR குமரவேலன் கூறியதாவது… நடிகர் அருண் விஜய்யின் ஒத்துழைப்பு இல்லையெனில் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவர் தற்போது தொடர் வெற்றிகளுடன், ஒரே கட்டமாக பல படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்து வெளியீடான “மாஃபியா” படத்தின் வெளியீட்டு பணிகளுக்கும் அவர் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஆனால் இத்தனை இடையராத பணிகளுக்கு மத்தியிலும் இப்படத்திற்கு…
Read More