லோகா அத்தியாயம் 1 சந்திரா – திரை விமர்சனம்

சூப்பர்மேன் டைப் திரைப்படங்கள் எப்போதாவது வந்து திரையை பரபரப்பாக்கும்.அப்படி ஒரு சூப்பர் மேன் கதை இது. சின்ன திருத்தம் சூப்பர் உமன் கதை. நாயகி சந்திராவின் சிறுவயது பாதிப்பு, அதன் மூலம் அவர் அதீத சக்தி படைத்த பெண்ணாக உருவெடுப்பது என தொடக்கம் முதலே வேகமெடுத்து விடுகிறது கதைக்களம். பெங்களூர் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தங்கி இருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருப்பவர் தான் நாயகன் நஸ்லென். அடுத்தடுத்த தொடர் சந்திப்புகள் கல்யாணி மீது நஸ்லெனுக்குள் காதலை கொண்டு வருகிறது. கல்யாணியோ நஸ்லெனின் காதலை ஏற்கவும் இல்லை. மறுக் க்கவுமில்லை. கண்டும் காணாதது போல் இருக்கிறார். இப்படி அவர் பின் தொடரும் ஒரு நாளில் ஒரு சட்ட விரோத கும்பலால் கல்யாணி கடத்தப்படுகிறார். நஸ்லென் அவரை காப்பாற்ற விரைகிறார். ஆனால்…

Read More

வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’ தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கார்மேனி செல்வம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக ‘கார் மேனி செல்வம்’ உருவாகிறது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராம் சக்ரி, “அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக ‘கார் மேனி செல்வம்’ உருவாகி வருகிறது. அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவை ததும்ப அமைத்துள்ளோம்,” என்றார். ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ்…

Read More

நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத  அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ்  – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்”  படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது !!

நேச்சுரல் ஸ்டார் நானி, தனது மிகப்பெரிய கனவு முயற்சியான “தி பாரடைஸ்” படத்திற்காக முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார். தசரா புகழ் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, சுதாகர் சேருகூரி தயாரிப்பில், எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் இந்த ஆக்சன் டிராமாவை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இரண்டு அதிரடியான பர்ஸ்ட்-லுக் போஸ்டர்கள், அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் என்கிற பட உருவாக்க காட்சிகள், படத்துக்கான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு வெளியான முதல் கிளிம்ப்ஸே காட்சியிலேயே, தி பாரடைஸ் படக்குழு இப்படம்  உலகளாவிய  ரசிகர்களுக்கானது என்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியீடு செய்வது முதல், துணிச்சலான புரமோஷன் வரை – ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த படம் இந்தியாவுக்கு மட்டும் அல்ல, உலகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வலியுறுத்துகிறது. அந்த முயற்சியை மேலும் ஒரு…

Read More

உண்ணாவிரதம் இருக்கும் சசிகாந்த் செந்தில் எம்.பி’க்கு, மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான தக்‌ஷன் விஜய் ஆதரவு!

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசை எதிர்த்து 3வது நாளாக தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் இருக்கும் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை எடுத்து வருவதால், விரைவில் நலம் பெறவும் வேண்டுகிறேன்! இப்படிக்கு, நடிகர் தக்‌ஷன் விஜய், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவர்.

Read More

குற்றம் புதிது – திரை விமர்சனம்

உயர் போலீஸ் அதிகாரியின் மகள் அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு கிளம்புகிறாள் ஆனால் அவள் வீடு வந்து சேரவில்லை. கடத்தப்பட்டாளா அல்லது கடத்திக் கொல்லப்பட்டாளா என்பதை கண்டுபிடிக்க காவல்துறை சீறிப் பாய்கிறது. அதேநேரம் ஒரு இளம்பெண் உள்பட மூன்று பேரை கொலை செய்ததாகச் சொல்லி உணவு டெலிவரி இளைஞன் ஒருவன் போலீசில் சரணடைகிறான். அதைப் பற்றி விசாரித்தால் அவன் கொலை செய்ததாகச் சொன்ன மூவரில் இருவர் உயிருடன் இருக்கிறார்கள்.அப்படியானால் அந்த இளைஞன் ஏன் பொய் சொல்ல வேண்டும்? அந்தப் பெண் உயிருடன் இருக்கிறாளா, இல்லையா? கேள்விக்கான விடையே குற்றம் புதிது. கதாநாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய், நடிப்புக்காக தன்னை முழுதாக தயார்படுத்தி இருக்கிறார். நீதிபதியையும் போலீஸ் அதிகாரியையும் அங்கிள் என்று சொல்லி கலகலப்பு ஏற்றுகிறார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்பாக நின்று கொண்டு அந்த வழியாக வரும்…

Read More

“கமல் சாருடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள்” ; நூல் வெளியீட்டு விழாவில் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்த இயக்குநர் லிங்குசாமி

தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநர்களில மிக முக்கியமானவர் இயக்குநர் லிங்குசாமி. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி, தன் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். இவருக்கு இயக்குநர் என்பதையும் தாண்டி கவிஞர் என்கிற இன்னொரு முகமும் உண்டு. சொல்லப்போனால் அவருக்குள் இருந்த கவிஞர்தான் அவரை சினிமாவுக்காக சென்னைக்கு அழைத்து வந்ததே என்று சொல்லலாம். அப்படி தனக்குள் இருந்த கவிதைக்கு ஹைக்கூ வடிவம் கொடுத்து ஏற்கனவே இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. தற்போது அவரது ஹைக்கூ கவிதைகளின் மூன்றாவது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள்’ என்கிற பெயரில் லிங்கூ-3 புத்தகத்தை தொகுத்து எழுதியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. இந்த கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், இயக்குநர் கௌதம்…

Read More

சொட்ட சொட்ட நனையுது – திரை விமர்சனம்

காரைக்குடியைச் சேர்ந்த வசதி படைத்த ராஜாவிற்கு ஒரே பிரச்சனை, வழுக்கை. பணக்கார குடும்பம் என்று விரும்பும் பெண் வீட்டார் கூட மாப்பிள்ளையின் சொட்டைத்தலை பார்த்ததும் ரிவர்ஸ் அடித்து விடுகிறார்கள். இதனால் நாயகனின் திருமணம் கிட்டத்தட்ட கேள்விக்குறி நிலையில் இருக்க… ஒரு கட்டத்தில் பெண் பார்க்கப் போகும் படலத்துக்கே முற்றுப்புள்ளி வைக்கிறான். இந்நிலையில் திடீர் திருப்பமாக வெளியூரிலிருந்து பாட்டி வீட்டுக்கு வரும் பிரியா, நாயகனின் வழுக்கை பற்றி கவலைப்படாமல் ராஜாவை மணக்க சம்மதிக்கிறாள். இது போதாதா? ராஜாவின் பெற்றோர் தடபுடலாக திருமண தேதி குறிக்க, விடிந்தால் திருமணம். ஆனால் ராஜா முந்தின இரவு திருமணத்தை நிறுத்தி விடுகிறான். கல்யாணத்தை ராஜா ஏன் நிறுத்தினான்? அதன் பின் வேறு எந்த பெண்ணாவது அவனை மணமகனாக ஏற்றுக் கொண்டாளா என்பது கிளைமாக்ஸ். கோடீஸ்வர ராஜாவாக நிஷாந்த் ரூசோ அந்த மொட்டை கேரக்டரில்…

Read More

கடுக்கா – திரை விமர்சனம்

கிராமங்களில் ‘கடுக்கா’ கொடுத்து விட்டான் என்ற சொலவடை பிரபலம். சிலர் நம்ப வைத்து ஏமாற்றுவார்கள். அப்போது ஏமாந்தவர் விரக்தியாக, :அட கடுக்கா குடுத்துட்டு போய்ட்டான்பா’ என்பார்கள். நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் என்ற பெயரில் உடலுக்கு நல்லது செய்கிற ஒரு மருந்தும் உண்டு. இந்த படம் ஏமாற்றுகிற கடுக்காயா? அல்லது உடலுக்கு நலம் சேர்க்கும் நாட்டு மருந்துகளில் ஒன்றா? வாருங்கள் பார்க்கலாம். படத்தின் நாயகன் வேலை வெட்டி எதற்கும் போகாமல் ஊர் சுற்றி திரிபவன். ஊரின் பிரதான பஸ் ஸ்டாப்பில் நின்றபடி பஸ்ஸில் பயணிக்கிற இளம் பெண்களை சைட் அடிக்கும் வேலையை செவ்வனே செய்வான். மீதமிருக்கும் நேரங்களில் கிராமச் சாவடிகளில் ஊர் பெரிசுகளோடு தாயக்கட்டை ஆடுவது உண்டு. இதனால் சொந்த ஊரிலேயே உதவாக்கரை என்று பெயர் எடுத்த நமது நாயகன் அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ‘தானுண்டு…

Read More

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது… எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது – இந்தப்படம் அனைத்து தரப்பினருக்குமானது என்பது தான்.ஒரு குறிப்பிட்ட தரப்பே பார்க்க வேண்டிய படம் அல்ல; அனைவரும்…

Read More

யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் பேசியவர்கள் தயாரிப்பாளர் மகேஷ்: எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும்…

Read More