நல்ல கதையம்சம் சார்ந்த படங்களைத் தயாரிப்பதன் மூலம் தங்களை திரைத்துறையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்ட பல தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் களமிறங்கியுள்ளது. நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தயாரிப்பதை நோக்கமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘மெஜந்தா’ திரைப்படம். துடிப்பான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக உருவாக இருக்கும் இதை ‘இக்லூ’ புகழ் பரத் மோகன் இயக்குகிறார். இதில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் பூஜை இன்று (ஜூன் 6, 2025) காலை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள்…
Read More“படை தலைவன்” திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியிடுகிறது !!
VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ்குமார், படத்தொகுப்பு அகமத் இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளார்.. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. புதுமையான திரைக்கதையில், முழுவதும் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் ஆர் சதீஷ்குமாரின் கேமரா காடும் காடு சார்ந்த இடங்களை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளது. பெரும் பொருட் செலவில் vj…
Read Moreஜூன் 13 முதல் மலையாள திரைப்படமான ‘ஆலப்புழா ஜிம்கானா’ ஆட்டம் காட்ட வருகிறது: Sony LIV-இல் ஸ்ட்ரீமிங்!
திரையரங்குகளில் ரசிகர்களின் மனங்களை வென்ற பிறகு, விளையாட்டு, நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்து உருவாக்கப்பட்ட ஆலப்புழா ஜிம்கானா திரைப்படம், இப்போது OTT தளத்தில் களமிறங்குகிறது — ஜூன் 13 முதல் Sony LIV-இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது.சிரிப்புக்கு தயாராகுங்கள்! இந்தக் கதை, ஜோஜோ ஜான்சன் (நஸ்லன்) எனும் சோம்பேறித் தனமான கல்லூரி மாணவனைப் பற்றியது. அவன் கல்லூரியில் சேர பொய்யாக குத்துச்சண்டை ஒதுக்கீட்டின் மூலம், ஒரு வழியாக தேர்ந்தெடுக்கிறான். ஆனால் அவனும், அவனைப் போலவே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களும், கடினமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயிற்சி அளிக்கும் கோச் ஆண்டனி ஜோஷுவா (லூக்மேன் அவரன்)வை சந்திக்கிறார்கள். அவர் கடின உழைப்பும், வியர்வையும், உண்மையான சண்டையையும் வலியுறுத்துபவர். ஆரம்பத்தில் ஒரு குறுக்கு வழியாக இருந்தது, விரைவில் வியர்வை, சுயவிழிப்பு மற்றும் உயிருள்ள நட்புறவின் ஒரு போராளியின் பயணமாக மாறுகிறது. தன் பாத்திரத்தைப்…
Read Moreதக் லைப் – திரைவிமர்சனம்
வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால்… இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு அதிரடி சதிராட்டம் ஆடி இருக்கிறார்கள். டெல்லியில் பிரபல கேங்ஸ்டர் ரங்கராய சக்திவேலுக்கும்( கமல்ஹாசன்), போலீசுக்கும் இடையே நடக்கும் துப்பாக்கி சண்டையில் அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் துப்பாக்கி தோட்டாவுக்கு பலியாக… இதனால், அவரது மகன் அமரன் ( சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்க, தங்கை சந்திராவோ (ஜஸ்வர்யா லட்சுமி) காணாமல் போகிறார். இந்நிலையில், அமரனை தத்தெடுத்து மகன் போல வளர்க்கிறார் சக்திவேல். இச்சூழலில், சக்திவேலுவின் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர் ) மகள் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு, கேங்ஸ்டர் தலைமையை அமரனிடம் ஒப்படைத்து விட்டு, சிறைக்குச் செல்கிறார் சக்திவேல். இதனால் அமரன் மேல் கடுப்பாகிறார் மாணிக்கம். இந்நிலையில் சிறையில் இருந்து ரிலீஸான சக்திவேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக விசாரித்து பார்த்த…
Read Moreகமல் அவர்களின் துணிச்சலை, ஆற்றல் மிகு பேராண்மையை போற்றி! பாராட்டுகிறேன் – மன்சூர் அலிகான்.
இந்த விடுமுறைகளில் கமல் மற்றும் சிம்பு, மற்றும், திரிஷா பிராட்டியார் நடித்த தக் லைஃப் பார்த்து சினிமாவை வாழ வைக்கும் வெகுஜன மக்களுக்கு! மிக்க, மிக்க நன்றிகள்! மேலும் திருமிகு கமல்ஹாசன் மிகுந்த நாகரிக வரலாற்று பாங்குடன் பொதுவாக தாய் தமிழில் இருந்து தோன்றிய சகோதரத்துவ மொழி கன்னடம் என்று வாஞ்சையுடன்! தாய்மை உள்ளத்தோடு குறிப்பிட்டதை தவறாக கன்னட சொந்தங்கள் நமது திராவிட உறவுகள் அரசியல் செய்வது வேதனையானது. அதுவும். ஒரு நீதிபதி அவர்களே! மன்னிப்புகள் என்பது! தான் தோன்றித்தனம். சகோதரர் சிவராஜ்குமார் கன்னட திரைச்செல்வம். இந்த சர்ச்சை முடிவு பெற வேண்டும் கமல் அவர்களின் துணிச்சலை, ஆற்றல் மிகு பேராண்மையை போற்றி! பாராட்டுகிறேன்! திரைப்பட கூலித் தொழிலாளி … மன்சூர் அலிகான்.
Read Moreசன் பிக்சர்ஸ் – அல்லு அர்ஜுன் -அட்லீயின் #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோன்
சன் பிக்சர்ஸ் – ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நூறு கோடி… இருநூறு கோடி… ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான் வேர்ல்ட் திரைப்படமாக இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக பயணிக்கத் தொடங்கி, ‘ ஜவான்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத்யேக முத்திரையை பதித்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் #AA22xA6 படத்தில், இந்திய சினிமாவின் உலகளாவிய வசூலில் புதிய சரித்திர சாதனையை படைத்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன்…
Read Moreதமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. தொல்.திருமாவளவன் விளக்கம்
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலஙகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருக்குறள் படத்தின் இயக்குனர் A.J பாலகிருஷ்ணன் பேசியதாவது.. அனைவருக்கும் வணக்கம், குரோசோவா சொல்லுவார் ஒரு மோசமான திரைக்கதையை கொண்டு போயிட்டு நல்ல படத்தை எடுக்க முடியாதுன்னு சொல்வார். இந்தப்படத்தின் திரைக்கதையை செம்பூர் ஜெயராஜ் தான் எழுதினார் அவர் தான் காமராஜ் படத்திற்கும் எழுதினார். அவர் ஒரு திராவிட…
Read Moreமொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது படைப்பாக மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை தயாரித்துள்ளது!
‘மோ’, ‘மாயோன்’ மூலம் திரைப்படங்களை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் வெற்றிகரமாக தயாரிப்பதில் முத்திரை பதித்த ஜி. ஏ. ஹரிகிருஷ்ணன் தலைமையிலான மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது படைப்பாக மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தை தயாரித்துள்ளது. கார்த்திகேயன் மணி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உலகமெங்கும் இன்று வெளியாகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் அதன் நேர்த்தியான தயாரிப்புக்காக அனைத்து தரப்பு பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் தனது நான்காவது படைப்பை அறிவித்துள்ளது. செல்வராகவன், யோகி பாபு, ஜெ டி சக்கரவர்த்தி, ஷைன் டோம் சாக்கோ, சுனில் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தை மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்து வருகிறது. ராதாரவி, சரஸ்வதி மேனன் மற்றும்…
Read Moreதக்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “துண்டு பீடி”.
தமிழில் கபளீகரம், ஐ அம் வெயிட்டிங் மற்றும் மலையாளத்தில் இத்திகார கொம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்! மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில் சி.பியூலா மகிழ் தயாரித்துள்ள படம் ‘துண்டு பீடி’ . தக்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். தலைவாசல் விஜய், சாய் தீனா, வனிதா விஜயகுமார், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். போதை பொருட்களை விற்க்கும் ஒருவனால் பாதிக்கப்பட்ட இருவர், அவருக்கு எதிராக போராடி ஜெயித்தார்களா? இல்லையா? என்று படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளது!
Read Moreலட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங்கியது.
தமிழக மக்களின் இதயங்களை தனது நகைச்சுவையால் கொள்ளை கொண்ட “புகழ்” கதாநாயகனாக நடிக்க எதிர் நாயகனாக முரட்டு நகைச்சுவை மன்னன் ரவி மரியா நடிக்கிறார். அறிமுக நாயகி பிரக்யா நயன், வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார் கையாள, இசையை சுபாஷ் முனிரத்தினம் அமைக்க, கலையை மு. து. பிரபாகரன் கவனிக்க, படத்தொகுப்பை ஃபாசில் தொகுக்க, கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார் புதுமுக இயக்குனர் சஜோ சுந்தர். தயாரிப்பு மேற்பார்வை ச. அருணாச்சலம். காமெடி திரில்லர் ஜானரில் உருவாகும் இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பை பிரபல தயாரிப்பாளர் எச். முரளி, ஒளிப்பதிவாளர் சிவா இணைந்து கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, சித்ரா லட்சுமணன் கிளாப் அடித்து இனிதே துவக்கி வைத்தனர். எம். ஸ்ரீ வத்சன்,…
Read More