ஹாலிவுட்டுக்கு இணையான சண்டை காட்சிகளில், மிகவும் ரிஸ்க் எடுத்து தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஆக்‌ஷன் ஹீரோ தக்‌ஷன் விஜய்!

அசோக், தக்‌ஷன் விஜய், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். N.P.இஸ்மாயில் இயக்கி உள்ளார். A.R.ரகுமான் சகோதரி A.R.ரெஹனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு K.K.சாதிக், எடிட்டிங் ராமர், கலை கார்த்திக், சீனு, சண்டை பயிற்சி கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரிக்கிறார் C.பியூலா மகிழ். படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது! “I AM WAITING” என ரசிகர்கள் எதிர்பார்க்க, விரைவில் திரைக்கு வருகிறது!           

Read More

லிங்கேஷ் – லியா நடிப்பில் உருவாகியுள்ள `என் காதலே’ படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், தனது முதல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில்  ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி  அவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை. கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்த லிங்கேஷ்,  இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா நாயகியாக நடித்துள்ளார். இது தமிழில் இவருக்கு முதல் திரைப்படம்… இருந்தாலும் தனது ஆர்வத்தினால் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார்…

Read More

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது!

நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ் ஆபிஸில் அதிரவைக்கும் வசூலைத் தந்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் முதல் காட்சி திரையில் ஓடத் தொடங்கிய தருணத்திலிருந்தே ‘HIT: தி தேர்ட் கேஸ்’ ஒரு பிளாக்பஸ்டராக மாறியது. இப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை தகர்த்து, முதல் நாள் வசூல் சாதனைகளை முற்றிலும் புதிய முறையில் மாற்றி அமைத்துள்ளது. சாதாரணமாக திரில்லர் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் கிடைப்பது அரிது. ஆனால் சைலேஷ் கொலானு இயக்கிய இந்த படம், தொடக்க நாளில் ரூ.43 கோடிக்கு மேல் வசூலித்து, நானியின் இதுவரை…

Read More

‘தேவதாசின் தேவதை’ : காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல்!

ஆல்பங்கள், தனிப்பாடல்கள் புதுமையாக இருக்கும் போது கவனம் பெறுகின்றன. தற்காலத்தில் இவை திரை நுழைவுக்கு ஒரு படிக்கட்டாகவும் அமைகின்றன.மாஸ் ரவியின் ஒளிப்பதிவு இயக்கத்தில் ‘தேவதாசின் தேவதை’ என்றொரு தலைப்பில் காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது.ரம்யா ,கவி சுஜய், ஆனந்த் ரெய்னா இதில் நடித்துள்ளனர். தயாரிப்பு ஷீரடி ஓம் சாய்ராம்,ட்ராக் மியூசிக் இந்தியா வெளியிட்டுள்ளது. ‘தூக்கத்தை தூக்கிட்டுப் போனாளே, தூரத்தில் நின்றென்னைக் கொன்றாளே ‘ என்று தொடங்கும் இந்த ஆல்பம் பாடலை இயக்கியுள்ள மாஸ் ரவி சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’,விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர். இந்த மாஸ் ரவி ‘காத்து வாக்குல ஒரு காதல்’ படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார் அப்படம் வெளிவர உள்ளது.மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து இயக்கி வருகிறார். பாடலாசிரியர் கவி சுஜய்,…

Read More

சூரியின் ‘மாமன்’ பட டிரெய்லர் வெளியானது

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த டிரெய்லர், குடும்ப உறவுகளின் அன்பை, சிக்கல்களை, உறவுகளின் பெருமையை நெஞ்சம் இளக சொல்கிறது. இந்த அழகான டிரெய்லரில் தாய்மாமனாக சூரி, பாசத்தை, ஏக்கக்தை, வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். அவரின் நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக இப்படம் இருக்கும் என்பதை இந்த டிரெய்லர் உறுதி செய்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் டிரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தின் கதையை நடிகர் சூரி எழுதியுள்ளார். விலங்கு சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த…

Read More

ரெட்ரோ – திரை விமர்சனம்

1960-களில் தூத்துக்குடி நகரில் தாதாவாக வலம் வந்த ஜோஜு ஜார்ஜ், கடத்தல் தொழிலிலும் தன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியவர். இவரது வேலைக்காரர் ஒருவர் எதிரிகளால் கொல்லப்பட, தப்பிப் பிழைக்கும் அவரது மூன்று வயது மகனை ( சூர்யா ) தாதாவின் மனைவி வளர்க்கப் பிரியப்படுகிறார். அரைகுறை மனதுடன் அதற்கு சம்மதம் தருகிறார் தாதா. இப்படி வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்படும் சூர்யா, வளர்ப்பு தந்தையின் கடத்தல் தொழிலையும் கற்றுக் கொள்கிறார்.இதற்கிடையே சிறு வயது முதலே அவ்வப்போது தன்னுடன் நட்பு பாராட்டி வந்த பூஜா ஹெக்டே மீது சூர்யாவுக்கு காதல் வருகிறது. ஆனால் காதலி யோ , பழைய வாழ்க்கையை அடியோடு தலை முழுகி விட்டு வந்தால் மட்டுமே திருமணம் என்கிறார். சூர்யா அதற்கு சம்மதம் சொல்ல, இப்போது அந்த காதல் மணமேடை வரை வந்திருக்கிறது. இதற்கிடையே இப்படி எல்லாம்…

Read More

டூரிஸ்ட் பேமிலி – திரை விமர்சனம்

இலங்கை வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ஏற்கனவே அங்கே கடன் சுமை, அதோடு உச்சபட்ச விலைவாசி இரண்டும் அந்தக் குடும்பத்தை வாட்டி எடுத்த நிலையில் தமிழகத்துக்கு பிழைக்க வருகிறது அந்த குடும்பம். அவர்கள் வந்த தினத்தில் ராமேஸ்வரத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ… இலங்கையில் இருந்து வந்த தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகிறது காவல் துறை. அதனால் அவர்களை தீவிரமாக தேடத் தொடங்க… அந்த இலங்கை குடும்பம் காவல்துறை கண்ணில் சிக்கியதா? தப்பியதா? என்பது படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ். இலங்கை குடும்பத்தின் தந்தையாக சசிகுமார், தாயாக சிம்ரன், மகன்களாக மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ். இந்தப் பொருத்தமான பாத்திரத் தேர்வே தொடக்கம் முதலே படத்துக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது. அப்பா கேரக்டரில் ரொம்பவே அடக்கி வாசித்துள்ளார் சசிகுமார். அவருக்கும் மூத்த மகன் மிதுனுக்குமான…

Read More

சார்மிங் ஸ்டார் ஷர்வா நடிக்கும் #Sharwa38 “போகி” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. பிரபல நட்சத்திர நடிகர் ஷர்வா மற்றும் ஹிட் இயக்குநர் சம்பத் நந்தி இருவரும், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் KK ராதாமோகன் தயாரிக்க, லக்ஷ்மி ராதாமோகன் வழங்கும், மிக முக்கியமான பான் இந்தியா திரைப்படமான, “போகி” — #Sharwa38இல் முதல் முறையாக இணைந்துள்ளனர். 1960 களின் பரபரப்பான பின்னணியில் அதிரடி ஆக்சனுடன், விறுவிறுப்பும் உணர்ச்சியும் நிரம்பிய ஓர் புதிய அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. ஃபர்ஸ்ட் ஸ்பார்க் எனப் பெயரிட்டப்பட்ட அசத்தல் அறிமுக வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஃபர்ஸ்ட் ஸ்பார்க்…

Read More

திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ‘லெவன்’ டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ‘லெவன்’ முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு…

Read More

கலகலப்பான ரோம் காம் திரைப்படம்  “மைனர்” கோலாகலமாக துவங்கியது!!

Arabi production  &  Viyan ventures மற்றும் MayDay Productions சார்பில் இணைந்து தயாரிக்க, ஃபைண்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ரோம்காம் திரைப்படம் “மைனர்”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது. இன்றைய இளைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பது தான் இப்படத்தின் மையம். பள்ளி பருவத்தில் பிரிந்த காதலைத் தேடி ஒரு இளைஞன் பயணமாகிறான். அந்த காதல் மீண்டும் சேர்ந்ததா? இருவரும் இணைந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை. இப்படத்தில் இலங்கை ராப் பாடகர் வாகீசன் நாயகனாக நடிக்க, பிக்பாஸ் புகழ் ஜனனி நாயகியாக நடிக்கிறார். சார்லி, செண்ட்ராயன், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு…

Read More