வெளியானது ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் ட்ரைலர்!!

இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்த முதல் தமிழ் டார்க்-ஹியூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும், 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவையில் பிரத்யேகமாக அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது,…

Read More

முதன் முதலாக ஹிந்தி பிக்பாஸ்க்கு‌ சென்ற தமிழ் நடிகை!!

நம் தமிழகத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8,கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக துவங்கியது,அதில் நம் தமிழகத்தைச் சார்ந்த பல போட்டியாளர்கள்‌ பங்கேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.அதே நாளில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் தொடங்கியது,அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக நம் தமிழகத்தைச் சார்ந்தவரும்,நடிகையுமான”ஸ்ருதிகா அர்ஜுன்” பங்கேற்றுள்ளார்.2006 ஆம்‌ ஆண்டு தொடங்கிய ஹிந்தி பிக்பாஸ் சீசன் 1 முதல் இதுவரை நடந்த எந்தவொரு சீசனிலும் தமிழகத்தைச் சார்ந்தவர்‌ பங்கேற்றது இல்லை ஆனால் அப்பிம்பத்தை உடைத்து ஒரு தமிழ் நடிகை ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.   நம்மில் ஒருவர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக சென்றது நமக்கு பெருமையே,இப்பெருமையை நமக்கு பெற்று தந்த…

Read More

சிடிஎம்ஏ ஆவணிப்பூவரங்கு 2024: அமைச்சர்களின் சிறப்புப் பங்கேற்பு!

CTMA (Confederation of Tamil Nadu Malayalee Association) சமீபத்தில் சென்னையில் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் பண்டிகை இது. வயநாடு நிலச்சரிவின் போது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை நன்கொடையாக வழங்குவதற்காக ஒரு சிறப்பு முயற்சியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எம். மதிவேந்தன் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார். இவர்களுடன் நடிகர்கள் மஹத் ராகவேந்திரா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் கலந்து கொண்டனர். திரு பி.கே. சேகர் பாபு பேசுகையில், “தேவைப்படுபவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ள இந்தக் கொண்டாட்டம்…

Read More

மாரி செல்வராஜின் “வாழை” படத்திற்கான ஸ்ட்ரீமிங் அக்டோபர் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரும் அக்டோபர் 11 ஆம் தேதி முதல், இயக்குநர் மாரி செல்வராஜின் ப்ளாக்பஸ்டர் வெற்றித்திரைப்படமான “வாழை” திரைப்படத்தை ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம், இயக்குநர் மாரி செல்வராஜின் மிகச்சிறந்த படைப்பாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இதயத்தைத் தொடும் ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது. தன் விதவை தாய் (ஜானகி) மற்றும் அவரது மூத்த சகோதரி வேம்பு (திவ்யா துரைசாமி) ஆகியோருடன் வசிக்கும் இளம் சிறுவன் சிவனைந்தனின் (பொன்வேல்) வாழ்க்கையைச் சுற்றி, இப்படத்தின் கதை சுழல்கிறது. சிவனைந்தனின் தாய் மற்றும் சகோதரி இருவரும் வாழை வயல்களில் கூலிகளாக கடுமையாக உழைக்கிறார்கள், மேலும்…

Read More

டாக்டர் ஐசரி.கே.கணேஷ் பிறந்தநாள் விழா: கோலிவுட் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்வு

டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் கலந்துக்கொண்டு டாக்டர். ஐசரி கே கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு, பா.ம.க தலைவர் திரு.அன்புமணி ராம்தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தயாரிப்பாளர் தானு, இசையமைப்பாளரும் நடிகருமான திரு விஜய் ஆண்டனி, நடிகர்கள் பார்த்திபன், தனுஷ், பிரபு தேவா, ஜெயம் ரவி, ஜீவா,விஷ்னுவிஷால், ஆர்யா, இயக்குநர்கள், கவுதம் வாசுதேவ் மேனன், சுந்தர் சி, ஆர்.கே.செல்வமணி, மாரிசெல்வராஜ், விக்னேஷ் சிவன், ஏ.எல்.விஜய், நடிகைகள் ராதிகா, மீனா, சங்கீதா மற்றும் பாடகர் கிருஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.   விழாவிற்கு…

Read More

”அறிவுள்ள ஒரு அறிவியல் தெரிந்த இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துவிட்டார்” ; ‘பிளாக்’ பட இயக்குநரை புகழ்ந்த நடிகர் விவேக் பிரசன்னா

ஒவ்வொரு படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்துக் கொண்டாலும் நல்ல தரமான, கருத்தாழம் மிக்க அதேசமயம் ரசிகர்களுக்கு பிடித்தவகையில் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட படங்களை மட்டுமே தர வேண்டும் என்கிற நோக்கில் படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘பிளாக்’.   அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். வரும் அக்டோபர் 11ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ‘பிளாக்’ படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.…

Read More

படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் !!

தயாரிப்பாளர், நடிகர் K C பிரபாத், யாமம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். படக்குழு அவரை உடனடியாக மருத்துவமைனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் உடல்நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார்.   K C பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த்துறையில் தயாரிப்பாளராக கால்பதித்தார். அப்படத்தில் வில்லன் பாத்திரத்திலும் நடிகராக கலக்கியிருந்தார். தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரகன் போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கருப்பு பெட்டி எனும் திரைப்படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். நடிகர் K C பிரபாத் “யாமம்” எனும் திரைப்படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் இரவுபடப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, திடீரென இதயத்தில் வலி ஏற்பட, அவரை படக்குழு சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யபட்டு, உடல்நலம் தேறி, சிசிச்சை பெற்று வருகிறார்.…

Read More

சென்னை டிடிகே சாலையில் ‘துளசி மெட்ராஸ் ஸ்டோர்’ Grand Opening!.

  சென்னை டிடிகே சாலையில் உள்ள துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்வில் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரமுகர்களான திருமதி. செல்வி செல்வம், திருமதி. துர்கா ஸ்டாலின், திருமதி. ஜெயந்தி தங்கபாலு, டாக்டர். எழிலரசி ஜோதிமணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களோடு நிகழ்வில் டாக்டர். மரியா ஜீனா ஜான்சன், நீனா ரெட்டி, உஷா வணங்காமுடி, தேவி கோயல், ப்ரீதா ஹரி மற்றும் அனிதா விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ‘துளசி மெட்ராஸ்’ என்ற பிராண்ட் ரஸ்வரிதி, சந்தீப் பரேக் மற்றும் பிரார்த்தனா பரேக் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்திய நெசவு மற்றும் கைவினை கலைஞர்களை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன், அவர்கள் இந்த பிராண்டை ஆன்லைனில் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களின் தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில்,…

Read More

ஆலன்: இசை வெளியீட்டு விழா கொண்டாட்டம்

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார். ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்…

Read More

“அந்தமானில் அஜித்தின் ஹார்லி சாகசம்: உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற ‘வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours'”

  நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலருமான அஜித்குமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தொழில்முறை ரேஸிங் டீமை அறிமுகப்படுத்தினார். ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது சுற்றுலா நிறுவனமான வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைட் ஏற்பாடு செய்ததற்காக மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐலேண்ட் ரம்பிள் என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வில், ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் தீவுகளில் பயணித்தது அனைவரையும் ஈர்த்தது. இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல், வியட்நாம், தாய்லாந்து, அரேபியன் ஒடிஸி (யுஏஇ, ஓமன்), பெஸ்ட் ஆஃப் ஆல்ப்ஸ் (ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி) போன்ற சிலிர்ப்பான நாடு கடந்த பயணங்களையும் அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours வழி நடத்தியுள்ளது. ஒவ்வொரு பயணமும் கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தில் ரைடர்ஸ்…

Read More