‘டீகன்ஸ்ட்ரக்ட்’, இசையமைப்பாளர் அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவிக்கிறது. இணையதளத்தின் மூலம் இயல்பாக தூண்டப்பட்ட ஒரு கதை. நவீன கால பிராண்ட் மற்றும் கூட்டணிகளின் மாறி வரும் தன்மையை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம் இசை உலகின் பிரபல ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருடன் தனது அதிகாரப்பூர்வமான கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டணி. ஒரு கூட்ட அரங்கில் இல்லாமல்… இணையத்தின் வாயிலாக தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் அனிருத் மற்றும் அவரது ஸ்டைலிஸ்ட் இடம்பெற்ற ஒரு வைரல் இன்ஸ்டாகிராம் ரீலில் இருந்து, இந்த தொடர்பு தொடங்குகிறது. அதில் கூர்மையான பார்வை கொண்ட ரசிகர்கள்… பின்னணியில் நுட்பமாக வைக்கப்பட்டிருந்த டீகன்ஸ்ட்ரக்ட் சன்ஸ்கிரீனை கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இயல்பான உரையாடல்களின் மூலமாக அலை எழுந்தது. பார்வையாளர்கள் அந்தத் தயாரிப்பை அடையாளம் கண்டு விவாதித்ததன்…
Read Moreமிஸ்டர் X’ படத்திற்காக 20 அடி ஆழமுள்ள தண்ணீருக்கடியிலான அதிரடி காட்சியில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா
இதுபற்றி படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் கூறுகையில், “தமிழ் சினிமா இதுவரை முயற்சிக்காத ஒன்றை இந்தப்படத்தில் நடிகர் ஆர்யா செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் 30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக்கொண்டு, உடலில் எந்த ஆடையும் இல்லாமல், பனிக்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் 20 அடி ஆழத்திற்கு இறங்கினார்” என்கிறார்.. . விரைவில் வெளிவரவிருக்கும் அதிரடி உளவு திரைப்படமான ‘மிஸ்டர் X’-ல், முக்கியமான தண்ணீருக்கு அடியிலான ஒரு காட்சிக்காக நடிகர் ஆர்யா எந்த அளவிற்கு கடினமான முயற்சிகளை மேற்கொண்டார் என்றால் சமீபகாலத்தில் ஒரு தமிழ் நடிகர் மேற்கொண்ட மிகவும் உடலளவிலான சவாலான சாதனைகளில் ஒன்றாக இதை சொல்லலாம். இத்திரைப்படத்தின் தொடக்க காட்சியான இது மும்பையில் உள்ள 20 அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்டது. மேவரிக் மூவிஸ் பி லிட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை,…
Read Moreதேர்தலுக்கு மறுநாளே வருகிறது “கமாண்டோவின் லவ் ஸ்டோரி “
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரித்துள்ள திரைப்படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”. வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். மும்பை அழகி ஏஞ்சல் நாயகியாக அறிமுகமாகிறார். ரோபோ சங்கர், பப்லு பிருத்திவிராஜ், பேரரசு, அரவிந்தராஜ், வாழை ஜானகி, மதுமிதா, விஜய் டிவி முல்லை, புதுப்பட்டு சக்திவேல், சிரஞ்சீவி, சூப்பர்குட் சுப்பிரமணி, பாய்ஸ் ராஜன், ஓஏகே சுந்தர், துரைபாண்டியன், ஸ்ரீதேவி, பூர்ணிமா, சுஷ்மிதா, நிஷா இவர்களுடன் ஆகாஷ் முத்து என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை வில்லியம்ஸ் செய்கிறார். படத்தொகுப்பு சி.ஆர்.புவனேஷ், நடனம் டயானா, சண்டை பயிற்சி கோல்டன் என்.கோபால், இசை பாவலர் வரதராஜனின் புதல்வர் சிவராமன். பின்னணி இசை கார்த்திக் ராஜா. மக்கள் தொடர் கோவிந்தராஜ். குழு மணாலி, கோவா, ஜவ்வாது மலை, மகாபலிபுரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு…
Read Moreநடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!
காலத்தால் அழியாத கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘அமர்க்களம்’. நடிகர் அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கும் சினிமா பிரியர்களுக்கும் கொண்டாட்ட தருணமாக மாறியுள்ளது. இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ‘அமர்க்களம்’ வெளியானது. இதற்கு முன்பு மென்மையான காதல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த அஜித், இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த ஆக்ஷன் அவதாரம்தான் இன்று அவரின் மாஸ் ஐகான் இமேஜூக்கு அடித்தளம் அமைத்தது. இந்த படத்தில்தான் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். பின்னர் அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நேசிக்கப்படும் தம்பதிகளாக மாறினர். இதனால், ‘அமர்க்களம்’ திரைப்படம்…
Read Moreமனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்…
கதை… கதை நாயகன் செல்வராகவன்.. இவரது அக்கா கௌசல்யா.. சாலை வசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார் செல்வராகவன்.. ஒரு கட்டத்தில் குஷியை திருமணம் செய்து கொண்டு ஹோட்டல் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.. கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் திடீரென மனைவி குஷி ரவி தற்கொலை செய்து கொள்கிறார்.. மனைவியின் மரணத்தால் மாறும் செல்வராகவன் திடீரென சமூகப் பொறுப்போடு பல சம்பவங்கள் செய்கிறார்.. அடுத்தது நடந்தது என்ன.? மனைவியின் தற்கொலைக்கு காரணம் என்ன.? இவரது மனதில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சாந்தமான எதார்த்த மனிதராக நடிப்பில் ரசிகர்களின் மனதை அள்ளிக் கொள்கிறார் செல்வராகவன்.. மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ளும் கணவராகவும் ஒரு கட்டத்தில் சமூகப் பொறுப்பாளராக இவர் மாறும் காட்சிகள் எதிர்பாராத திருப்பம்… நீண்ட…
Read Moreகாக்கி சர்க்கஸ் – வெப் சீரிஸ் விமர்சனம்
கதை… தமிழகம் – கேரளா எல்லைப் பகுதியில் ஒரு ஜெயில் இருக்கிறது… இதில் ஜெயில் அதிகாரி முனீஸ்காந்த்.. சிறைக்கு வரும் கைதிகளை துன்புறுத்தாமல் அவர்களுக்கு தான் கைப்பட எழுதிய புத்தகங்களை கொடுத்து படித்து திருந்தி வாழ சொல்கிறார்.. இவரின் கீழ் வேலை பார்க்கும் மற்றொரு போலீஸ் நாயகன் சுபாஷ் செல்வம்.. இந்த சிறைச்சாலையில் ஒரு கேரளா அம்மன் கோயிலை சார்ந்த உண்டியல் வைக்கப்படுகிறது.. இந்த உண்டியலில் கைதிகளும் பணம் போட்டு வேண்டிக் கொண்டால் விடுதலை ஆகலாம் என்ற நம்பிக்கையை வளர்க்கின்றனர்.. இப்படியான சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் அந்த ஜெயிலில் உள்ள உண்டியல் திருடப்படுகிறது.. சிறைச்சாலைக்குள் புகுந்து ஒரு திருட்டு நடந்தது என்றால் தங்களுக்கு அவமானம் என்று கருதும் போலீசார் அதை வெளியே தெரியாமல் அந்த திருடனை தேடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த விஷயம் வெளியே கசிந்து…
Read MoreTN 2026 – விமர்சனம் – அரசியல் காமெடி அலப்பறை[ 4/5…]
கதை… வட இந்தியாவைச் சேர்ந்த நட்டி தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வருகிறார்.. ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிகர் ஆகிறார்.. இவரது படங்கள் சூப்பர் ஹிட் ஆக தமிழக மக்களின் அன்பைப் பெற்று உச்ச நடிகராக மாறுகிறார்.. இவர் அடுத்த எம்ஜிஆர் என்று நினைக்கும் தம்பி ராமையா இவருக்கு பக்கபலமாக இருந்து அரசியல் தந்திரங்களை சொல்லிக் கொடுத்து நட்டியை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர வைக்கிறார்.. நடிகராக வளர்ந்து அரசியலில் குதிக்கும் நட்டியின் வாழ்க்கை என்ன ஆனது.? தமிழக நடிகர்கள் அரசியலில் களம் கண்டதையும் அவர்களின் வாழ்க்கை வளர்ச்சி எப்படி எல்லாம் மாறியது என்பதை எம்ஜிஆர் ரஜினி விஜய் ஆகியோரின் கலந்த தொகுப்பாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார் உமாபதி ராமையா.. நடிகர்கள்… சதுரங்க வேட்டை படத்திலேயே ஒரு முழு நடிகராக மக்களின் அன்பைப் பெற்றவர் நட்டி.. இந்த…
Read Moreலவ் இன்சூரன்ஸ் கம்பெனி – விமர்சனம்
கதை… காதலித்து திருமணம் செய்தவர் எஸ் ஜே சூர்யா.. ஒரு கட்டத்தில் இவரும் தனிமையில் இருக்க 2040 ஆம் ஆண்டு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற LIK செயலியை உருவாக்குகிறார்.. இதன் மூலம் காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்.. தங்களின் காதல் உண்மைதானா என்று தெரிந்து கொள்ள இந்த செயலி உதவுகிறது.. இந்த செயலியின் ஒரு வாடிக்கையாளர் நாயகி கீர்த்தி செட்டி. இது ஒரு புறம் இருக்க தொழில்நுட்ப வசதி இல்லாமல் பசுமை உலகம் என்ற கிராமத்தில் இருக்கிறார் சீமான்.. இவரது மகன் பிரதீப் ரங்கநாதன்.. தன் மகனையும் செல்போன் இல்லாத பசுமை உலகத்தில் வாழவைத்துக் கொண்டிருக்கிறார் சீமான்.. இந்த சூழ்நிலையில் நாயகி கீர்த்தி மீது காதல் கொள்கிறார் பிரதீப்.. ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு தெரியாமல் செல்போனை வாங்கி அந்த LIK செயலியை டவுன்லோட் செய்து…
Read Moreசரிகமா லைவ் Saregama Live & Mercuri மெர்குரி இணைந்து, இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு !!
சரிகமா Saregama Live மற்றும் மெர்குரி Mercuri இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன. இந்த ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது. “Music for Healing – Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Saregama Live மற்றும் Catch the Rhythms இணைந்து, Mercuri நிறுவனத்துடன் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்த கச்சேரிகள், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Dolby…
Read Moreஇயக்குநர் Ar. காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!
கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது. சினிமா ரசிகர்களிடையே இன்றும் தனி இடம் பிடித்துள்ள ‘செல்லமே’ மற்றும் ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதை சொல்லலுக்காகப் புகழ்பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா, ’பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்த ரொமாண்டிக் கதையில் பிக்பாஸ் புகழ் ராணவ் மற்றும் ரோஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்தப் படத்தின் டீசரை நடிகை ரீமா சென் வெளியிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, வெளியான இந்த டீசரில்…
Read More