தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை…
Read More“விடுதலை2’ படத்தில் வெற்றிமாறனின் பயணம் வேறுமாதிரியானது”
எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’. இந்த படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஒளிப்பதிவாளர் நடிகர் ராஜீவ் மேனன் பேசுகையில், “’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர் விஜய்சேதுபதி இரண்டாம் பாகத்தில் வெளியே வந்து நிறைய பேசுகிறார், காதல் செய்கிறார், ஆக்ஷனும் உண்டு. ராஜா சாரின் இசைக்கு நான் இயக்கம் செய்ய ஆசைப்படுகிறேன். அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். நாம் அனைவரும் மறந்து போன ஒரு தலைவர் வெற்றிமாறன் மனதில் திரையிட்டு இப்போது நம் எல்லோருடனும் உரையாட வருகிறார். விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ எல்லோரும் சிறப்பாக…
Read Moreதிரை விமர்சனம் – எமக்குத் தொழில் ரொமான்ஸ்
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அசோக் செல்வன் அவரது நடிப்பில் எமக்கு தொழில் ரொமான்ஸ். மற்றும் நடிகை அவந்திகா , ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அசோக் செல்வனின் நடிப்பும், அவந்திகா மிஷ்ராவுடனான கெமிஸ்ட்ரியும் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக செயல்படுகின்றன. ஆனால், பொதுவாக கதை சிக்கல்களையும், திருப்புமுனைகளையும் சரியாக அமைத்திருந்தால், படம் இன்னும் ரசிக்கப்பட வாய்ப்பு மேலும் உள்ளது. அசோக் செல்வன் ஒரு ஜாலியான ரொமான்டிக் பையனாக மனதைக் கவருகிறார். அவந்திகா மிஷ்ராவுடனான காதல் காட்சிகள் ரொமான்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. ஊர்வசி, அழகு பெருமாள் , எம்.எஸ் பாஸ்கர் போன்றவர்கள் சிறந்த குணசித்திரங்களை கொடுத்து இருக்கின்றனர். அனைவரின் நடிப்பும் சிறப்பு. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை மற்றும் பின்னணி இசை நன்றாக…
Read Moreசிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான் –சைலன்ட் பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி
SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது… ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக்கும் நன்றி. சைலண்ட் படம் மிக மிக அழகான படம். சமயமுரளி சாரை வெகு காலமாகத் தெரியும். மிக மிக நேர்மையான மனிதர். அவர் நிறையப் பேருக்கு உதவி செய்து வருகிறார். கணேஷ் சார் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. திரு நங்கைகள் பற்றி நிறைய சர்ச்சைகள் இருக்கிறது அதைத் தெளிவாக்குவது…
Read More.A.P. ஷர்வின் இயக்கத்தில் டிட்டோ நடிக்கும் ‘மறைமுகம்’ விரைவில் திரைக்கு!
ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா தனுஜா இருவரும் கதாநாயகிகளாகவும் இணைந்து நடித்திருக்கிறார்கள் காமெடி நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெருமாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி கண்ணன் அறிமுகம் ஜீவகன் உமேரா பேகம் குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள்ளார் A P ஷர்வின் ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார் டைரக்டர் ஒளிப்பதிவு விஜய் திருமூலம் இசையமைப்பாளர் வசந்த் இந்த படத்தை வி ஜீவகன் A P…
Read More“தமிழ் படத்தில் நடிக்க ஆசைப் பட்டேன்…அது இந்த படம் மூலம் நிறைவேறியது” –ஜீப்ரா திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் சத்யதேவ் மகிழ்ச்சி
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட பிரபலம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தயாரிப்பாளர் தினேஷ் பேசியதாவது… பத்திரிகை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த்தேன். நான் முதன்முதலில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் வேலை பார்த்தேன், அடுத்தடுத்து வேலை பார்த்து, இந்தப்படம் செய்துள்ளேன். இந்தப்படத்திற்காக ஐந்து படமெடுக்குமளவு திரைக்கதையைத் தந்தார் ஈஸ்வர். அவ்வளவு ஸ்டஃப் இருக்கிறது…
Read Moreசென்னையில் நடந்த ‘புஷ்பா 2’ நிகழ்ச்சியில் தமிழை போற்றிய பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
பாட்னாவில் நடந்த ‘புஷ்பா 2: தி ரூல்’ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர். இந்த நிகழ்வு ‘புஷ்பா’ திரைப்படம் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தனது நடிப்பால் மட்டுமல்லாது திறமையான நடனம் மூலமும் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலமும் உலகம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜூன். படத்திற்கான புரோமோஷன்களின் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 24 அன்று ‘புஷ்பா2’ படக்குழு சென்னை வந்தடைந்தது. தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற இந்த ப்ரீ ரிலீ ஈவண்ட்தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. படத்தை விநியோகிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வு நடக்கும் ஏரியா முழுவதும் ‘புஷ்பா2’ தீம்…
Read Moreதிருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் ‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு கலாச்சாரப் பாலத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. கணேசனின் முயற்சிகள் சர்வதேச அரங்கில் இந்திய திறமைகளை தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. பிரபல தமிழ் நடிகர் நெப்போலியனை ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய அவர், புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரையும் ஹாலிவுட்டிற்கு தனது திரைப்படங்கள் மூலம் அழைத்து சென்றார். அவரது அடுத்த படைப்பான ‘டிராப்…
Read Moreநடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு போனாலும் நான் என்றுமே விஜய் சாரின் ரசிகன் தான்! – ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ உரிமையாளர் நெகிழ்ச்சி
வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே லட்சியமாக கொண்டு ஒருவர் பயணித்திருக்கிறார். ஆம், தனிமனித எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் இவ்வுலகில், மற்றவர்களைப் பற்றி சிந்தித்ததோடு, சாதனையாளர்களை அங்கீகரித்து கெளரவிக்க வேண்டும் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்தவர் தான் திரு.ஜான் அமலன். திரைத்துறை மட்டும் இன்றி தொழில், விளையாட்டு, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும், என்பதை கனவாக கொண்டிருந்தவர், ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள் ‘ (INDIAN AWARDS) என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி…
Read Moreரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் வழங்கிய குளோபல் ஐகான் விருது – டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணனுக்கு சிறப்பான அங்கீகாரம்
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணனின் வெற்றிப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் அவருக்கு மதிப்புமிக்க குளோபல் ஐகான் விருதை வழங்கி கௌரவித்தது. நவம்பர் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற டான்ஸ் ஆஃப் டிஸ்ட்ரிக்ட் சீசன் 12 நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி சங்க தலைவர் ஷபீர் நசீர், செயலர் மேரி அமுதா, டிஓடி தலைவர் ஜோசப் ராஜா, வொகேஷனல் இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிராந்திய ஒத்துழைப்பை வளர்த்தல், ஒற்றுமையை ஊக்குவித்தல், எல்லைகளை தாண்டி ஆதரவற்றோரை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் டாக்டர் சரவணனின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காகவும், அரசியல், ஆன்மிகம் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் பன்முக ஆளுமைக்காகவும் இந்த…
Read More
