லக்கி பாஸ்கர் – திரை விமர்சனம்

தீபாவளிக்கு பான் இந்தியா திரைப்படமாக வந்திருக்கிறார் இந்த லக்கி பாஸ்கர். கதை 1990 இல் தொடங்குகிறது. அதிகாலை வாக்கிங் முடித்து பால் பாக்கெட் வாங்க வரும் துல்கர் சல்மானை சுத்தி வளைக்கும் சிபிஐ. அப்படியே அவரை வங்கிக்கு அள்ளிக் கொண்டு போகிறது. அவரது வங்கிக் கணக்கை சோதனையிடும் சிபிஐ அதிகாரிகள் அதிர்ந்து போகிறார்கள். வங்கி கணக்கு இருப்பு மட்டும் 100 கோடிக்கு மேல் இருந்தால் அதிர்ச்சி சகஜம் தானே. ஒரு வங்கி உதவி பொது மேலாளர் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி என்ற வினாக் குறியுடன் தொடங்கி வியப்புக் குறியுடன் முடிகிறது படம். மும்பையில் பல பல வங்கியில் மாதம் ரூ. 6000 சம்பளத்தில் கேசியராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு கடனாக இருப்பதோ ரூ 16,000. அடுத்து வரவிருக்கும் உதவி மேலாளர் பிரமோஷனில் சம்பளம் டபுள் ஆகும்.…

Read More

பிளடி பெக்கர் – திரை விமர்சனம

தமிழ்த் திரைக்கு எப்போதாவது இம்மாதிரியான கதைக்களம் சிறப்பு சேர்க்கும். அப்படியொரு படம் இது. பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்ட நாயகனுடன் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவனும் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் கோடீஸ்வரர் ஒருவரின் நினைவு நாளையொட்டி 25 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடாகிறது. இந்த 25 பேரில் ஒருவனாக நமது நாயகனும் அழைக்கப்பட, போகிறான். அங்கே வயிறார சாப்பிட்டு முடித்த நேரத்தில் நாயகனுக்கு ஒரு ஆசை. இந்த பங்களாவுக்குள் ஒரு முறையாவது போய் வந்து விட வேண்டும் என்பதே அந்த ஆசை. பல கட்டுப்பாடுகளை தாண்டி அந்த பங்களாவுக்குள் நுழைகிறான் நாயகன். அங்கே ஒரு நிஜ பேயையும் சொத்துக்கு அடித்துக் கொள்ளும் சில பணப்பேய் களையும் சந்திக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகும் நாயகன் அங்கிருந்து உயிரோடு திரும்பி வர முடிந்ததா என்பது திகு…

Read More

மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன்…

Read More

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர்‌. பி என்டர்டெய்ன்மென்ட் – ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும், ‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர் வெளியீடு !!

ரத்தம் தெறிக்க தெறிக்க, காதலைச் சொல்லும் “ஹேப்பி எண்டிங்” ரொமாண்டிக் காமெடி திரைப்பட, டைட்டில் டீசர் வெளியீடு !! ‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி நடிப்பில், கலக்கலான ரொமாண்டிக் காமெடியாக உருவாகும், ‘ஹேப்பி எண்டிங்’ படத்தின் அசத்தலான டைட்டில் டீசர், தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா, இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் வாழ்வியலைச் சொல்லும் வகையில், மிக புதுமையான திரைக்கதையில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார். நடிகர் ஆர். ஜே. பாலாஜி இதுவரை ஏற்றிராத புதுமையான வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.…

Read More

தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில்ரிலீசுக்கு தயாராகும் புதிய திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”

தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” இப்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது.. சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் ரங்கா. இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், ‘பொன்னியின் செல்வன்’ நாடக புகழ் இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என…

Read More

ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் உருவாகி இருக்கும் மெஸன்ஜர்

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சார் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார் , ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஶ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலைக்கு…

Read More

தீபாவளி விழாவில் மூத்த செய்தியாளர்களை கவுரவித்த அமைச்சர்!

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி திருவிழா(2024) நேற்று மாலை ,மிகப் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.மதிவேந்தன் அவர்கள் மற்றும் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி பெற்ற லப்பர் பந்து பட ஹீரோ ஹரிஷ் கல்யாண் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வில், மூத்த பத்திகையாளர்கள் , கங்காதரன், தேவி மணி, திரை நீதி செல்வம் ஆகியோருக்கு பாராட்டும் பரிசும் வழங்க பட்டது . நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு முதன்மையாக வரவேற்பு உரை செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் தலைவர் கவிதா உரையுடன் விழா இனிதே துவங்கப்பட்டது. பத்திரிகை துறையின் மூத்த நிருபரான திரு கங்காதரன் அவர்களுக்கு சங்கம் சார்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நினைவு…

Read More

‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ் . பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி,  விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஆசிஷ் ஜோசப் கையாள , கலை இயக்கத்தை ஆர் .கிஷோர்…

Read More

“கப்பேலா” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவாகியிருக்கும் “முரா” படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் இளைஞர் குழு, கேங்ஸ்டர், போலீஸ் என பரபரக்கும் சம்பவங்களை சொல்லும் இப்படம், திருவனந்தபுரத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையாக வைத்து, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சரமூடு, கனி குஸ்ருதி மற்றும் மாலா பார்வதி உள்ளிட்ட புதிய இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் மையத்தையும் கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் இந்த டிரெய்லர், கேங்ஸ்டர் ஜானரில் ஒரு புதுமையான திரை அனுபவத்தை தரும் என்பதை உறுதி செய்கிறது. கேன்ஸ் விருது பெற்ற “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”, அமேசான் வெப் சீரிஸ் “க்ராஷ் கோர்ஸ்”, ஹிந்தி திரைப்படம் “மும்பைகார்” மற்றும் தமிழ் திரைப்படமான தக்ஸ் திரைப்படங்களில் நடித்த ஆகியவற்றில் நடித்ததற்காக அறியப்பட்ட ஹிருது ஹாரூன் இப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார். “ஜன கண மன” மற்றும்…

Read More

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது, “’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை உருவாக்குவதில் சிவா மிகப்பெரிய வெற்றியை இந்தப் படத்தில் பெற்றுள்ளார். அவரது இன்னொரு முகத்தை பார்த்தேன். சூர்யா சார் தனது நடிப்பின் உச்சத்தை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். காலத்திற்கு ஏற்ப புதிய மனிதனாக இந்தப் படத்தில் தன்னை மாற்றியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையில் படம் நெருப்பாக வந்திருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்.   பாடலாசிரியர்…

Read More