எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் P. சாமுவேல் அவர்கள் தயாரிப்பில், இயக்குநர் ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஒட்டாரம்’. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தில் கதையின் நாயகனாக காட்வின் ஃப்ராங்க் நடித்துள்ளார். ‘யாத்திசை’ பட நாயகி ராஜலட்சுமி, ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த டி.எஸ்.கே மற்றும் கன்னடத் திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரோபோ கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா மற்றும் மூனார் ரமேஷ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். C. சத்யா இசையமைக்க, M.S. பரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். R. சத்யநாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் பாடல்களை விவேக் மற்றும் மோகன்ராஜன் எழுதியுள்ளனர். இரண்டு பாடல்களுக்கு ஷெரிஃப் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரள…
Read Moreகாதல் எப்படி மெல்ல கட்டுப்பாடாகவும், பயமாகவும் மாறுகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள Sony LIV-ன் புதிய மலையாள Original தொடரான ‘EYES’, அக்டோபர் 9 முதல் Sony LIV-ல் வெளியாகின்றது.
‘EYES’ தொடரின் மையக் கதாபாத்திரம் காவல்துறை அதிகாரியான டினா செபாஸ்டியன், இவரது கதாபாத்திரத்தில் கனி குஸ்ருதி நடித்துள்ளார். காதல், அதீத ஈடுபாடு மற்றும் கட்டுப்பாடு எல்லை மீறும் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை டினா விசாரிக்கத் தொடங்குகின்றார்.விசாரணை நகர நகர, காதலுக்கும் ஆபத்துக்கும் இடையிலான எல்லைகள் மங்குகின்றன. பயம், பாதுகாப்பின்மை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் டினாவின் முன் வருகின்றன,ஆனால், உண்மையை நெருங்க நெருங்க, டினா கண்டுபிடிக்கும் விஷயங்கள் அவர் எதிர்பார்த்ததைவிட மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கின்றது. இந்தத் தொடர் குறித்து இயக்குநர் மனு அசோகன் கூறுகையில், “EYES என்பது நான் நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்ல விரும்பிய ஒரு கதையாகும். ஒருவரை பின்தொடர்வது என்பது வெறும் குற்றம் மட்டுமல்ல அது ஒருவரின் பாதுகாப்பு மற்றும் மனநிலையையே ஆழமாக பாதிக்கக்கூடியதாகும்.., அந்த உண்மையை சுவாரஸ்யமான த்ரில்லர் வடிவில் சொல்ல முயற்சித்திருக்கின்றோம்..இ ந்தக் கதையை…
Read Moreஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் திரைப்படத் தயாரிப்பில் புதிய முயற்சி!
தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய தயாரிப்பு நிறுவனமான ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைத் தாண்டி, புதிய தொழில்நுட்பங்களுடன் தனித்துவமான படைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 33 ஆண்டுகால அனுபவம் கொண்ட கலை இயக்குநரான டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி, தயாரிக்கும் ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் ஃபீச்சர் ஃபிலிம் (HYPER – REALISTIC DIGITAL -HYBRID FEATURE FILM), மெய்நிகர் தொழில்நுட்பத்தையும் புதுமையான காட்சியமைப்பு முறைகளையும் இணைத்து உருவாகி வருகிறது. இந்நிலையில், டி. முத்துராஜின் இந்தப் புதிய முயற்சி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, அவருடன் கடந்த…
Read Moreடோரதி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படமான ‘டோரதி’ அதன் கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசையால் ரசிகர்களின் மனதை வென்று பிரம்மாண்ட வெற்றிப் படமாக உருவாகியுள்ளது. அடையாளம், நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மனித உறவுகள் ஆகியவற்றை புதிய பார்வையுடனும் மனிதநேயத்துடன் அணுகும் வகையில் புதிய கோணத்தை ‘டோரதி’ திரைப்படம் கொடுத்துள்ளது. படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வழக்கமான கமர்ஷியல் விஷயங்களை வலிந்து திணிக்காமல் வலுவான கதையை எடுத்து சொல்லியிருப்பதே இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். படம் பெற்று வரும் வரவேற்பால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை அதிகரித்திருப்பதையும், நேர்மறையான வாய்மொழிப் பாராட்டுகள் பெருகி வருவதையும் காண முடிகிறது. முன்னணி திரையரங்க உரிமையாளரான திருப்பூர் சுப்ரமணியம், படத்தின் வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “நல்ல திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி பெறுவதைப் பார்ப்பது ஒரு…
Read Moreதனது தாத்தா அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகம் திறந்த அல்லு அர்ஜூன்!
மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘ICONZA’ என்ற தனது புதிய அலுவலகத்தை திறந்தார். எளிமையாக நடைபெற்ற தொடக்க விழா பூஜையில் அல்லு அர்ஜூன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பான நாளின் புகைப்படங்களைப் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் நிலைத்திருக்கும் கலைப் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிப்பாக இந்த புதிய அலுவலகம் செயல்படும் என்றார். இந்திய சினிமாவின் முன்னோடியாகப் போற்றப்படும் அல்லு ராமலிங்கய்யா அவர்களின் புகழ்பெற்ற திரைப்பயணம் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் உள்ளடக்கியது. தனது தாத்தாவின் பிறந்தநாளில் இந்த புதிய பயணத்தைத் தொடங்கும் அல்லு அர்ஜுன், சினிமா, படைப்பாற்றல் மற்றும் கலைநோக்கில் தனது குடும்ப பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கிறார். கிரியேட்டிவிட்டி, இணைந்து செயல்படுதல் மற்றும் புதிய யோசனைகளுக்கான இடமாக…
Read More“ ‘டோரதி’ என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்” -நடிகை கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் ‘மகாநதி’ திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில், அவர் நடித்திருக்கும் ‘டோரதி’ திரைப்படமும் இணைந்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஏற்றுள்ள கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. பார்வையாளர்களின் நேர்மறையான விமர்சனங்களின் காரணமாக, ‘டோரதி’ திரைப்படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் படத்திற்கான திரையரங்குகள் மற்றும் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. “விவாதத்திற்குரிய விஷயத்தை திரைப்படமாக்கி அதை வணிக ரீதியாகவும் வெற்றி பெற செய்வது மிகவும் கடினம். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் தனது எழுத்தின் மூலம் அதைச் சாத்தியமாக்கியுள்ளார். இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. அந்தக் கதாபாத்திரத்தில் பல அடுக்குகள் இருப்பதை என்னால் உணர முடிந்தது. சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி இயக்குநர் உணர்வுப்பூர்வமாக இந்த…
Read MoreDon’t Trouble The Trouble விமர்சனம்.. – வில்லனிடமிருந்து தப்பிக்க பேயிடம் மாட்டிக் கொண்ட ஹீரோ
கதை… நாயகன் பகத் பாசில் ஒரு கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்… அவரை மிரட்டும் வில்லன் 2 நாளில் 25 லட்சம் வேண்டும் என்கிறார்.. உயிருக்கு பயந்து பகத்தும் உடனே ஓகே சொல்கிறார். எப்படி பணத்தை ரெடி செய்வது என அவர் குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில் பகத்தை ஒரு மேஜிக் மேன் என நினைக்கும் சிறுமி சாரா.. நான் தவறுதலாக மேஜிக் செய்த போது என் பெற்றோர்களை மறைய வைத்து விட்டேன்.. அவர்களை மீட்டு தர வேண்டும் என்கிறார்.. உடனே இதை வைத்து அந்த குழந்தையை கடத்தினால் அவரின் பெற்றோர்களிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என திட்டம் போடுகிறார்… சில மணி நேரங்கள் செல்ல செல்ல தான் கடத்தியது ஒரு குழந்தை அல்ல.. அது ஒரு குட்டி பேய் என்பதை தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு என்ன…
Read Moreஅன்பில் அவன் விமர்சனம் 4. 25/5…
கதை…. பெற்றவர்களை விட்டு தன் காதலுக்காக தன்னை நம்பி வந்த மனைவி பிரீத்திக்கு அவளின் லட்சிய கனவுப்படி Home Stay வீடு வாங்க நினைக்கிறார் அசோக் செல்வன்.. அதன்படி சென்னையில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் ஒரு அழகான இடத்தைப் பிடித்து அங்கு HOME STAY ஒரு வீட்டை வாங்குகிறார்.. அங்கு சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்து கட்டணம் பெற்று அதன் மூலம் சம்பாதிக்க நினைக்கிறார்.. முதலில் அந்த வீட்டை விற்க மறுக்கும் ரேவதி ஒரு கட்டத்தில் அசோக் செல்வனின் பிடிவாதத்தால் அந்த வீட்டை விற்கிறார்.. தான் எத்தனையோ முறை முயன்றும் அந்த வீட்டை தனக்கு தரவில்லை ரேவதி என ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷனில் இருக்கிறார் அந்த ஊர் எம் எல் ஏ.. இதனால் அசோக் செல்வனுக்கு சுற்றலாத்துறை மூலமாக பல இடைஞ்சல்களை கொடுக்கிறார்.. ஆனால் அசோக்செல்வன்…
Read Moreஏழு கடல் ஏழு மலை – விமர்சனம்…
கதை… ஒரு குழந்தை தன் தாயிடம்.. தான் தூங்க வேண்டுமென்றால் கதை சொல்ல வேண்டும் என்கிறான்.. அதன்படி தாய் தன் குழந்தைக்கு கதை சொல்வதாக இந்தப் படத்தின் காட்சிகள் நீள்கிறது.. 8000 வருடங்களாக வாழ்ந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிவின் பாலி ஒரு ரயிலில் பயணிக்கிறார்.. அந்த ரயிலில் ஒரு எலி புதிதாய் பிறந்த தன் குட்டி குஞ்சுகளுடன் பயணிக்கிறது.. அதற்கு உண்டான பராமரிப்புகளை செய்து கொண்டிருக்கிறார் நீவின்பாலி.. அப்போது அந்த ரயிலில் மற்றொரு பயணியாக சூரி வந்து சேர்கிறார்.. அவர் எட்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து தன் மகனை தீபாவளி தினத்தன்று காண ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வருகிறது.. நிவினுக்கு பிடித்தமான அந்த ஏலியை சூரி துன்புறுத்த இருவருக்கும் பிரச்சனை வெடிக்கிறது.. சூரியை நிம்மதியாக பயணிக்க விடாமல்…
Read Moreடி.ராஜேந்தர் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு ‘அரிசி தானம்’ வழங்கினார்.
இவ்விழா அகில இந்திய டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக நடைபெற்றது. டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் அமைப்பாளரும், STR தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவருமான T.வாசு அவர்கள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். டி.ராஜேந்தர் தனது பிறந்தநாளை முன்னிட்டு, பாடல் எழுதி , இசையமைத்த பாடலை, அனைவரின் முன்பும் பாடினார். பாடல்… ‘ஆண்டவன் கொடுத்த ஆத்மா அன்பா வாழ்ந்து காட்டுமா இருந்தா எடுத்துக் கொடுக்குமா ஏழைத் துயரை துடைக்குமா வானம் தான் பரந்தது தானம் தான் சிறந்தது இரக்க குணத்தில் இறைவன் இருக்கின்றான் கருணை வடிவில் கடவுள் வாழ்கிறான் அன்பே தெய்வம் அறங்கள் செய்வோம் ஆத்மனை நினைப்போம் ஆதரவு அளிப்போம்’
Read More