ஐகான் ஸ்டார்’அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா

‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள புதிய படத்தைப் பற்றிய ‘#AA22xA6’ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை தந்து, இந்தி சினிமாவில் ‘ஜவான்’ படத்தின் மூலம் 1100 கோடி வசூலை சாதித்துக் காட்டி, சர்வதேச திரையுலகினரின் கவனத்தைக் கவர்ந்த இயக்குநராக உயர்ந்திருக்கும் அட்லி இயக்கத்தில், அவரது ஆறாவது படைப்பாக, ‘புஷ்பா’ படத்தின் மூலம் இந்திய சினிமாவின் வசூலில் புதிய சரித்திர சாதனையை படைத்திருக்கும் ‘ஐகான்…

Read More

நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க  வேண்டும் – நடிகர் சௌந்தரராஜா கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு நடிகரும், தவெக தலைவர் விஜய் -யின் ஆதரவாளரான சௌந்தரராஜாவின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நம்மாழ்வாரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு நம்மாழ்வார் விருதும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கி ஊக்கபடுத்தினார்., முன்னதாக உசிலம்பட்டி கண்மாய் கரையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தான் விதைத்த பனைவிதைகளில் எத்தனை பனை மரங்களாக வளர்ந்துள்ளன என மீட்டெடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்., தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சௌந்தரராஜா., நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள 11 விவசாயிகளை முதற்கட்டமாக கண்டுபிடித்து விருதும், ரொக்க பணமும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கொடுத்து எனது நன்றியை தெரிவித்துள்ளேன். அதை நான் பிறந்த பிறப்பிற்கு கிடைத்த மிக பெரிய அர்த்தமாக உணர்கிறேன்.,…

Read More

டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்

அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி. நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் ‘தமிழ்’ மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது, அனைவரும் அறிந்ததே. பட்டி தொட்டி எங்கும், திரை அரங்கில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, சாதனை படைத்தது. அதன் பின் இயக்குனர் ஹரி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்ததோடு, தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே இயக்கி, தான் ஒரு வெற்றி இயக்குனர் என தனி முத்திரை பதித்தார். தமிழ்…

Read More

கும்பகோணம் கல்லூரி பின்னணியில் நடைபெறும் கதையில் கெளஷிக் ராம், பிரதிபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். துர்கா தேவி பாண்டியன் இதன் இணைத் தயாரிப்பாளர் ஆவார். கும்பகோணம் கல்லூரி பின்னணியில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ கெளஷிக் ராம் நாயகனாக நடிக்க, ‘கொண்டல்’ மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் இதயங்களோடு இணைந்த பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார். சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், டி எஸ் ஆர், ஆருள் டி. ஷங்கர், சிலுமிஷம் சிவா, ரவி விஜே, கனா காணும் காலங்கள் புவனேஸ்வரி, சஞ்சய்வர்மன், ஆதித்யா டிவி விக்கி, சத்யா, மைக்கேல் உள்ளிட்டோர் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில்…

Read More

24 ஆண்டுக்குப் பிறகு இணைந்த ஹரி – பிரசாந்த் கூட்டணி!

அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி. நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் ‘தமிழ்’ மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது, அனைவரும் அறிந்ததே. பட்டி தொட்டி எங்கும், திரை அரங்கில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, சாதனை படைத்தது. அதன் பின் இயக்குனர் ஹரி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்ததோடு, தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே இயக்கி, தான் ஒரு வெற்றி இயக்குனர் என தனி முத்திரை பதித்தார். தமிழ்…

Read More

E.M I மாத தவணை – திரை விமர்சனம்

மொத்தமாக விலை கொடுத்து வாங்க முடியாத பொருட்களை தவணை முறையில் வாங்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்த போது மக்களால் விரும்பிய பொருட்களை வாங்க முடிந்தது. இதுவே காலப்போக்கில் மாதத் தவணையில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற முடிவுக்கு மக்களை கொண்டும் வந்தது. இந்த மாத தவணை இன்று பல குடும்பங்களில் மாதாந்திர வேதனையாகவும் உருமாறி இருக்கிறது. இந்த கதை களத்தை கருவாக எடுத்துக் கொண்டு கொஞ்சம் ஜாலியாகவும் கொஞ்சம் சீரியஸாக வும் சொல்கிற திரைக்கதை படத்தின் முழு முதல் பலம். நாயகன் சதாசிவம் நாயகி சாய் தன்யா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். காதலாகிறார்கள். காதலியை குஷிப்படுத்த மாத தவணையில் ஒரு பைக் வாங்குகிறார் நாயகன். இந்த காதல் திருமணத்தில் முடிந்த போது இப்போது காதல் மனைவியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்த மாத தவணையில் ஒரு…

Read More

டெஸ்ட்- திரை விமர்சனம்

மூன்று கேரக்டர் களை வைத்து ஒரு முத்தான கதை. அதை விறுவிறுப்பு குறையாமல் தந்திருக்கிற அறிமுக இயக்குனர் சஷி காந்துக்கு ஒரு சபாஷ். நட்சத்திர கிரிக்கெட் வீரராக கொண்டாடப்பட்ட சித்தார்த் கடைசி இரண்டு போட்டிகளில் சரியாக சோபிக்காததை காரணம் காட்டி அணியில் இருந்து விலகச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது கிரிக்கெட் வாரியம். சித்தார்த்தோ தோல்வியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர விரும் பாமல், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்த பிறகே மற்ற காரியம் என்கிறார். தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு வாகனங்களை இயக்கும் முறையை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி மாதவன், தனது கண்டுபிடிப்பிற்கு உரிய அங்கீகாரம் பெறுவதற்கு கடும் முயற்சி மேற்கொள்கிறார். ஆசிரியராக பணியாற்றும் அவரது மனைவி நயன்தாரா, கணவரின் லட்சியத்திற்கு உறுதுணையாக…

Read More

கேம் சேஞ்சருக்கு பிறகு ராம் சரண் நடிக்கும் புதிய படம்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படமான, “பெத்தி” ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற பான்-இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸுடன் இணைந்து வழங்கும், “பெத்தி” இந்திய திரைப்படத் துறையில் ஒரு புதிய திருப்புமுனை படமாக இருக்கும். தொலைநோக்கு மிக்க படைப்பாளி வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். ஸ்ரீ ராம நவமியின் புனிதமான சந்தர்ப்பத்தில், தயாரிப்பாளர்கள் முதல் ஷாட் வீடியோவை வெளியிட்டனர், மேலும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். படத்தின் முதல் ஷாட் ஒரு அற்புதமான சூழ்நிலையுடன் தொடங்குகிறது, மிகப்பெரிய கூட்டம்…

Read More

மே மாதம் வெளியாகும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள’ மெட்ராஸ் மேட்னி’ எனும் திரைப்படத்தில் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சார்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக திரையில் தோன்றுகிறார். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலஸ்ரங்கன் இசையமைத்திருக்கிறார். ஜாக்கி கலை…

Read More

52 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போடும் ‘ வீர தீர சூரன் !!

சீயான் விக்ரம் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது இப்படம். ரிலீஸ் நாளில் பல தடைகள் ஏற்பட்ட நிலையில், அனைத்தையும் கடந்து, ரசிகர்கள்…

Read More