தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர்…
Read Moreபயாஸ்கோப் – திரை விமர்சனம்
கதைக்குள் கதை என்பார்களே அப்படி ஒரு கதை இது. கிராமத்து இளைஞர் ஒருவர் தங்கள் ஊர் மக்கள் உதவியோடு அவர்களையும் நடிக்க வைத்து படம் எடுத்த இந்த கதையில் போதிய அனுபவம் இன்றி படம் எடுக்க வருபவர்களுக்கு பாடமும் நடத்தி இருக்கிறார்கள் 2011 ஆம் ஆண்டு சங்ககிரி ராச்குமார் இயக்கத்தில் வெளியான வெங்காயம் திரைப்படம் பத்திரிகையாளர்கள், திரை உலக பிரபலங்கள், அரசியல் விற்பன்னர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தாலும் வர்த்தகரீதியில் படம் கல்லா கட்டவில்லை. தனது குடும்பத்தில் உள்ளவர்கள், ஊர் மக்களை வைத்துக் கொண்டு முழு படத்தையும் எடுத்த சங்ககிரி ராச்குமாரை பாராட்டாத பத்திரிகை இல்லை எனலாம். அதில் ஒரு பத்திரிகை இவர் படம் எடுத்த கதையை கூட ஒரு படமாக எடுக்கலாம் என்று குறிப்பிட்டு படக் குழுவினருக்கு பெருமை சேர்த்தது. இந்தப் பாராட்டு இயக்குனர்…
Read Moreஎக்ஸ்ட்ரீம் – திரை விமர்சனம்
கட்டுமான பணி நடக்கும் கட்டிடம் ஒன்றில் இளம் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கிடைக்கிறது. போலீஸ் விசாரணையில் அது இளம்பெண் அபி நட்சத்திரா என்பதும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதும் பரிசோதனையில் தெரிய வர… கொலைக்கான பின்னணி என்ன? மலையாளி ஒருவரா, பலரா? என்பதை தொடக்கம் முதல் முடிவு வரை திரில்லர் பின்னணியில் தந்து இருக்கிறார்கள். இந்த கிரைம் கதைக்குள் ஒரு மகிழ்ச்சியான குடும்ப பின்னணியை இணைத்து இருப்பது படத்தை ரசிகனோடு இணைத்துக் கொள்கிறது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக ரக்ஷிதா மகாலட்சுமி தோற்றத்திலும் கம்பீரம். நடிப்பிலும் கம்பீரம். கொலை வழக்கை விசாரிக்கும் இடங்களிலும் நிஜ போலீசாகவே அவரை உணர முடிகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ராஜ்குமார் நாகராஜ் தனக்கு நேர்ந்த கடும் இழப்பிலும் கொலையாளிகளை விசாரிக்க நேரும் இடங்களில் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். இவருக்கும் மனைவிக்குமான…
Read More”நல்ல கருத்து…, சிறப்பான மேக்கிங்…!” – ‘சீசா’ படத்தை பாராட்டிய பத்திரிகையாளர்கள்
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.கே.செந்தில் வேலன் தயாரித்து கதை எழுதியிருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குந்=அர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதையின் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி குமார் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, மாஸ்டர் ராஜநாயகம், தயாரிப்பாளர் டாக்டர்.செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்வு வெளியீட்டு முன்னதாக ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில், பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக, “படத்தில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருப்பதோடு, மேக்கிங்கும் சிறப்பாக உள்ளது” என்று அனைத்து பத்திரிகையாளர்களும் இயக்குநரை பாராட்டினார்கள். பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசிய இயக்குநர்…
Read More’சீசா’ -திரை விமர்சனம்
இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மvனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விட… அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார் ட்டிஸ்க்கும் மாயமாகி விட… கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது. அதை வைத்து விசாரணையில் அவர் முன்னோக்கி செல்லும் போது மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் மீண்டும் தனது வீட்டுக்கு வருகிறார். அவருடன் இருந்த அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்து போலீஸ் அவரிடம்…
Read Moreபிரபலங்கள் வெளியிட்ட “உசுரே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
“உசுரே” ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷனில் அறிமுக இயக்குனர் நவீன டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு bilingual-களாக மற்றும் எதார்த்தமான களத்தையும் திரைக்கதையையும் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து “உசுரே” திரைப்படத்தின் First Look-க்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதி ஹாசன், இயக்குனர் நித்திலன் சாமிநாதன் மற்றும் நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் போன்ற பிரபலங்களால் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் முன்னணி நடிகர்களான டீஜய் அருணாசலம், ஜனனி, ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்திகுமாரி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் நடித்துள்ளனர் மற்றும் ஆதித்யா கதிர் தங்கதுரை நகைச்சுவையில் அசத்தியுள்ளனர். இந்த கதை உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு-ஆந்திர எல்லையான சித்தூரில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Read Moreபார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘கருடன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21 இல் தமிழகமெங்கும் வெளியிடுகிறது பைவ்-ஸ்டார் நிறுவனம்.
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன’சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்தவர், திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றவர். ‘அஸ்திரம்’ படத்தில் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் DSM உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதன் கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். இந்த படம் விறுவிறுப்பான துப்பறியும் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை பைவ்-ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளார். இவரது நிறுவனம் கடந்த…
Read Moreகே.வி.என். புரொடக்ஷன்ஸ் & தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் & ஆவேஷம் ஜித்து மாதவன்
திரு. வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திருமதி. சைலஜா தேசாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் உடன் கூட்டணி அமைப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து மலையாள திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் புதிய படத்தை உருவாக்க இருக்கின்றன. இந்தப் படத்தை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க, ஆவேஷம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதுகிறார். இந்தப் படத்தில் திரைத்துறையில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள்: ஷைஜூ காலெத் ஒளிப்பதிவு, சுஷின் ஷியாம் இசை மற்றும் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கின்றனர். படம் குறித்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திரு. வெங்கட் கே நாராயணா பேசும் போது, “எங்கள் குறிக்கோள் எப்போதும், பல மொழிகளில் திரைப்பட அனுபவத்தை புதுப்பிப்பதாகவே இருந்துள்ளது. அந்த வகையில் இந்தப் படம்…
Read Moreமீண்டும் கம் பேக் கொடுக்கும் ‘ஆரண்ய காண்டம் ‘ புகழ் யாஸ்மின் பொன்னப்பா!!
ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகுக்கு திரும்ப உள்ளார். மனோதத்துவத்தில் மேற்படிப்பை முடித்து திரும்பி இருக்கிறார். நடிகராகவும் தன்னை மேம்படுத்த பல பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு தற்போது திரைத்துறையில் மீண்டும் தன்னை பிசியாக மாற்றிக்கொள்ள இருக்கிறார். கேமரா முன் நின்று நடித்த அந்த மேஜிக் தருணங்களை நான் மிகவும் மிஸ் செய்தேன். வித்தியாசமான கதைக்கலங்களுக்குள்ளும் மற்றும் ஏராளமான கதாபாத்திரங்களிலும் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு நடிப்பில் இன்னும் பண்பட்ட நிலையை அடைய விரும்புகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமா இன்னும் ஆச்சரியமான கலங்களில் பயணிக்க துவங்கியிருக்கிறது. இதில் என் பங்களிப்பையும் இணைத்துக் கொண்டு என்னையும் மெருகேற்ற விரும்புகிறேன். பல அற்புதமான படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன்” என்கிறார் கண்களில் கனவுகள் மின்ன. தன்னுடைய…
Read More7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!
தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’ . செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்து இப்போது வரை இப்படத்தில் பாடல்களும் படமும் நீங்கா இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று இருக்கிறது. இப்படம் வெளியாகி 20 வருடங்களை கடந்து வட்ட நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வருகிறார். தன் தனித்துவமான சினிமாவியல் மற்றும் உணர்ச்சி நிறைந்த கதைசொல்லலால் ரசிகர்களை மீண்டும் கவர இருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் மற்றும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா, இப்படத்திலும் தனது மைல்கல்லான கதாபாத்திரத்தில் மீண்டும் நடுக்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அவருக்கு ஜோடியாக அன்னஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்…
Read More
