சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா கூறுகையில் இப்படம் விறுவிறுப்பான திரில்லர் கலந்த வினோதமான திரைக்கதை அம்சம் கொண்ட படமாக இருக்கும் என கூறினார்கள்… ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தம்பதியினர் இப்படத்தை எழுதி நாயகனாக நடித்து இயக்கித் தயாரித்திருக்கிறார் சதா நாடார்.அவரது மனைவி மோனிகா செலேனா நாயகியாக நடித்துள்ளார். இப்படிக் கணவன் மனைவியே அறிமுக நாயகன் நாயகியாக நடித்து அவர்களே இயக்கித் தயாரித்திருப்பது தமிழ் சினிமாவிற்கு அனேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும் எனலாம். படம் பற்றி இயக்குநர் சதா நாடார் பேசும் போது, எனக்குச் சிறுவயதில் இருந்து அரசியல் போல சினிமாவில் ஆர்வம் உண்டு. திரைப்படங்கள் மூலம் நமது சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அதற்கு முன்பு ஒரு முன்னோட்டம் போல ஒரு திரைப்படம் எடுப்பது என்று முடிவு செய்தோம். அதுதான் ‘ல்…
Read More“ரெட் பிளவர்” படத்தின் ஹீரோ விக்னேஷ் மற்றும் இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியன் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தனர்
நடிகர் விஜய் சேதுபதி, வரவிருக்கும் ‘ரெட் பிளவர்’ படத்தின் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் அதன் அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியனை சந்தித்தார். “ரெட் பிளவர்” படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதற்கு விஜய் சேதுபதிக்கு நன்றிதெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது, இது ரசிகர்கள் மற்றும் பட குழுவினர் மத்தியில் குறிப்பிடத்தக்க சந்தோசத்தை உருவாக்கியுள்ளது. தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட ‘ரெட் பிளவர்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் மிகுந்த வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு படத்துக்கு கிடைத்துள்ளது. இவர்களது சந்திப்பின் போது, ‘ரெட் பிளவர்’ படத்தின் ட்ரைலரை விஜய் சேதுபதி கண்டுக்களித்தார். ட்ரைலர் பார்த்து வியப்படைந்த அவர், பட குழுவினரின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்காகப் பாராட்டினார். “படம் மிகவும் பிரமாண்டத்துடன் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இது மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்,…
Read More‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தில் இருந்து ’பிக் புல்’ பாடல் வெளியாகியுள்ளது!
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும், காவ்யா தாபர் நாயகியாகவும் நடித்துள்ளனர். இன்று, படத்தில் இருந்து பிக் புல் என்ற சிறப்பு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வில்லனுக்கும் வலுவான கதாபாத்திரம் கொடுப்பதில் பெயர் பெற்றவர். இப்போது, ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் ஒருபடி மேலே போய், சஞ்சய் தத்தின் வில்லன் கதாபாத்திரத்திரமான பிக் புல்-க்கு பாடலையும் கொடுத்திருக்கிறார். ’பிக் புல்’ பாடலில் மணி ஷர்மாவின் இசை வைப் & எனர்ஜிட்டிக்காக உள்ளது. இதன் காட்சிகளும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஹை எனர்ஜியில் கொண்டாட்டமான சூழ்நிலையில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல்…
Read Moreவெயிட்டான கதை – பிரஷாந்த் பெருமிதம்
நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன் ஒரு ஆண் மகனுக்கே உண்டான அழகுடன் வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக . ’ஆணழகன்’ என்ற தலைப்புக்கு உண்மையிலேயே பொருத்தமானவர் பிரசாந்த் என்றால் மிகையல்ல . இவர் மீசை தாடியுடன் இருந்தாலும் அழகு, முழுக்க முழுக்க க்ளீன் ஷேவ் லுக்குடன் தோன்றினாலும் அழகு என்று சொல்லத்தக்க வகையில் இருப்பவர் இவர் மட்டுமே . பிரசாந்தை நகர்ப்புற சாக்லேட் பாய் இளைஞன் என்ற கதாபாத்திரங்களில் மட்டும் சுருக்கிவிட முடியாது. கிராமத்துப் படம், காதல் படம், ஆக்ஷன் படம், கதையம்சமுள்ள படங்கள் என பல வகையான படங்களில்…
Read Moreவீராயி மக்கள் பட விமர்சனம் 4/5.. கூட்டு குடும்ப வலிமை..
கதை… வீராயி (பாண்டி அக்கா). இவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள்.. (வேலராமமூர்த்தி மாரிமுத்து தீபா ஷங்கர்).. கணவனை இழந்த வீராயி பிள்ளைகளை நன்றாக வளர்த்து வருகிறார்.. 3வது மகன் சென்னையில் சென்று காதலித்த பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் குடும்பத்திற்குள் முதல் பிளவு வருகிறது. ஒரு கட்டத்தில் விவசாயம் நஷ்டம் அடைய பஞ்சம் பிழைக்க திருப்பூருக்கு செல்கிறார் தன் மனைவி மகனுடன் வேலைக்கு செல்கிறார் வேல ராமமூர்த்தி.. அப்போது மாரிமுத்துவின் மனைவிக்கும் மாமியார் வீராயிக்கும் மாமியார் மருமகள் சண்டை தொடங்குகிறது.. இதனால் குடும்பத்தில் சொத்தை பிரிக்க வேண்டும் என்கின்றனர்.. ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் இதற்கு வேலராம மூர்த்தியும் சம்மதிக்க குடும்பம் பிரிகிறது.. இதனையடுத்து குடும்பம் பிரிந்த சோகத்தில் வீராயி மரணம் அடைகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது? குடும்பம்…
Read Moreஅதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட முதல் திரைப்படம் மாயன் – செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியீடு
திரைப்பட துறையில் யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய படங்கள் பெரும்பாலும் நம்பிக்கை என்ற ஒற்றை அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்பு தான் அதை வெற்றி படமாக மாற்றும். இந்த வரிசையில் “மாயன்” திரைப்படம் நிச்சயம் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக “மாயன்” இருக்கிறது. இந்த…
Read Moreஇசையமைப்பாளராக கலக்கிய கதீஜா ரஹ்மான்!..’மின்மினி’ படத்தின் இசைக்கு நல்ல வரவேற்பு..!!
இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் அறிமுகப்படமான ‘மின்மினி’யில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்!!றிருக்கிறார்! மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். அது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தில் நடந்துள்ளது. இசையமைப்பாளர் ரஹ்மானின் இசையில் ‘எந்திரன்’ படத்தில் வெளியான ‘புதிய மனிதா…’ பாடலில் கதிஜா பாடகராக தனது மயக்கும் குரல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இப்போது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ரஹ்மான் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். அவரது மகள் கதிஜா ‘மின்மினி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். அவரது அற்புதமான பின்னணி இசை மற்றும் மெலோடி பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான் பேசியிருப்பதாவது, “இதுபோன்ற மனதுக்கு இதமான பாராட்டுக்களைக்…
Read Moreகனா காணும் காலங்கள் புது சீசன் – அப்டேட் வெளியீடு
இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான “கனா காணும் காலங்கள்” சீரிஸின், முதல் இரண்டு சீசன்களின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தற்போது ’கனா காணும் காலங்கள்’ சீரிஸின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களது வாழ்வியலைக் காட்டியதால், மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையிலும், அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக ரசிகர்களிடமிருந்து பெருமளவிலான கோரிக்கைகள் குவிந்ததையும் அடுத்து, டிஸ்னி+…
Read Moreராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படப்பிடிப்பு!!
நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ், தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்றதைக் காண முடிந்தது. நாள் முழுவதும், அவர்கள் ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்தனர். இந்த எதிர்பாராத நிகழ்வு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. எந்தவொரு புதிய திரைப்படத்தையும் தொடங்குவதற்கு முன்பாக, கோயில்களுக்குச் செல்லும் யாஷின் சடங்குடன் இது ஒத்துப்போகிறது என்று குறிப்பிட்டு, ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். படக்குழு உறுதிப்படுத்திய தகவலின் படி, கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படம் ஆகஸ்ட் 8, 2024 அன்று (8-8-8) பெங்களூரில் துவங்கவுள்ளது. இத்திரைப்படம் துவங்கும் தேதியின் கூட்டுத்தொகை 8-8-8 ஆகும். ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு…
Read Moreதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ” Sweety Naughty ” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!
Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரிக்கும் படத்திற்கு ” Sweety Naughty ” என்று கலகலப்பான பெயரை வைத்துள்ளனர். சூப்பர் ஹிட் படமான உளவுத்துறை படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் மற்றும் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய G. ராஜசேகர் இந்த படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயகுமார் கலை இயக்குனராக பணிபுரிகிறார். தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற…
Read More