சாதனைப் படம் “பிதா”! : 23 மணி, 23 நிமிடங்கள் எடுக்கப்பட்டது

  இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘பிதா’! எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ். காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை. ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிப்பை நடத்தி, பலரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் எஸ்.சுகன். ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா, தொழில் அதிபர் கடத்தல் என, குறுகிய நேரத்தில் சிறப்பாக காட்சிகளை இயக்கியுள்ளார்…

Read More

“சினிமாவை அழித்துவிடாதீர்கள்” – நடிகர் நகுல் ஆவேசப் பேச்சு

5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ‘ வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள்.   விழாவில் நடிகை தேவயானி பேசும் போது, “முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன். சுறுசுறுப்பாக, அழகாக, நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைந்திருக்கின்றன. என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அவனை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. எனக்கும் அவனுக்கும் நல்ல அன்பான உறவு இருக்கிறது.…

Read More

சினிமா தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கும், முடியே இல்லாதவர்களுக்கும் வாய்ப்பளிக்கும்” – நடிகர் சிங்கம்புலி

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது, “இந்த இயக்குநர் முருகன் பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார்.சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆண்டுகளாக சினிமாவை ரசித்து வருகிறேன் அவ்வளவுதான். மற்றபடி நான் சினிமாவைப் பற்றி ஏதும் நினைத்ததில்லை. அவர் ஒரு இயக்குநராக என்னை அணுகிய போது நான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து வந்தார்.ஒரு நாள் சுருக்கமாகக் கதை சொன்னார். அப்படி அவர் சொன்ன போது உடனே நான் செய்யலாம் என்றேன்.…

Read More

எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், ஜீ 5 யின் ‘மனோதரங்கல்’ மலையாள ஆந்தாலஜி தொடர்

‘இலக்கிய மேதை’ எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், ஜீ 5 யின் ‘மனோதரங்கல்’ மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம் வெளியீடப்பட்டுள்ளது. எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றி கொண்டாடும் வகையில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில் தயாரான ‘மனோதரங்கல்’ எனும் மலையாள ஆந்தாலஜி தொடரை ஜீ 5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எம் டி வாசுதேவன் நாயரின் பிறந்தநாளில் ஜீ 5 – ஒன்பது புதிரான கதைகளை கொண்ட ‘மனோரதங்கல்’ எனும் மலையாள ஆந்தாலஜி திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது. இதில் மலையாள திரையுலகின் ஒன்பது சூப்பர் ஸ்டார்கள் மற்றும் எட்டு புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களுடன் முன் எப்போதும் இல்லாத ஒத்துழைப்புடன் உருவாகி இருக்கிறது. இந்த ஆந்தாலஜி தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று…

Read More

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் தமிழகம் மற்றும் பாண்டியில் அன்னதானம் வழங்கி அசத்திய அவரின் ரசிகர்கள்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஜூலை-17 விஷ்ணு விஷால் அவர்களின் பிறந்த நாளாகும்! அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது ரசிகர்கள், ‘இரத்த தானம், அன்னதானம்’ போன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து அசத்தியுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மனநலம் குன்றியோருக்கான ‘ஜாவல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு’ உணவும் வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ‘அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள ‘தாய்மை அன்புக் கரங்கள்’ குழந்தைகள் இல்லத்திற்கு ‘அன்னதானம்’ வழங்கியுள்ளனர் தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள ‘நேதாஜி இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். மேலும் சென்னையில் அமைந்துள்ள ‘அன்னை அன்பாலயா’…

Read More

டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் ஜூலை 26 முதல் “சட்னி சாம்பார்” வெஃப் சீரிஸ்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின், அசத்தலான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபுவின் முதல் வெப் சீரிஸாக உருவாகியுள்ள இந்த சீரிஸ், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது. ‘சட்னி – சாம்பார்’ டிரெய்லர், இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான முத்திரைகளுடன், அசத்தலான காமெடி, செண்டிமெண்ட் என ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது. இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும்…

Read More

பத்திரிக்கையாளர்களை சந்தித்த வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலய் சச்தேவு

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். நிக்கோலய் பேசியதாவது, “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே…

Read More

பூரி ஜெகன்நாத் ராம் பொதினேனியின் “டபுள் ஐஸ்மார்ட்” படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது

உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாபர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது! உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் ’ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இதன் சீக்வல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். முதல் சிங்கிள் ஸ்டெப்பா மார் அபார வரவேற்பைப் பெற்றது. இன்று, படத்தின் இரண்டாவது சிங்கிள் மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது. காசர்லா ஷ்யாம் எழுதிய பாடல் வரிகள் ஹைதராபாத் ஸ்லாங்கைப் பின்பற்றி வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது. இந்த பார்ட்டி பாடலுக்கு மணிஷர்மாவின் பூர்வீக நாட்டுப்புற இசையமைப்பு மற்றும்…

Read More

SIIMA 2024ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான பரிந்துரை பட்டியல் ரேஸில் முந்தும் “ஜெயிலர்”

தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) – தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும்.‌ மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்களில் விருதுக்குரியவற்றை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை சைமா 2024 – SIIMA 2024 வெளியிட்டுள்ளது.‌ இது தொடர்பாக சைமா ( SIIMA) தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி பேசுகையில், ” 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான சைமா (…

Read More

1000 கோடி வசூலித்து சாதனை படைத்த பிரபாஸின் கல்கி 2898 AD

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம் 1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளது!! பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. பாகுபலி 2க்குப் பிறகு பிரபாஸ், தற்போது ரூ. 1000 கோடி கிளப்பில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். கல்கி 2898 AD உண்மையில் தென்னிந்தியத் திரைப்படங்களில் பாகுபலி 2 படத்திற்குப் பிறகு, இந்த சாதனையை படைத்துள்ளது. இப்படம் தெலுங்கு மாநிலங்களில் இன்னும் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஹிந்தி திரையுலகிலும் மற்றும் பிற மொழிகளிலும் இப்படம் பெரிய…

Read More