இன்றைய குழந்தைகளின் உலகம் பெரும்பாலான பெற்றோரின் கணிப்புக்கு அப்பாற்பட்டது.குழந்தைகளுக்கான நேரம் ஒதுக்கி அவர்களிடம் நட்பு பாராட்டினால் மட்டுமே அவர்களின் அந்த பருவத்து எண்ணங்களை புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை கொஞ்சம் எமோஷனல், அதிக காமெடியுடன் சொல்லியிருப்பதே இந்த பறந்து போ. மிர்ச்சி சிவா-கிரேஸ் ஆண்டனி தம்பதிகள் தங்கள் ஒரே மகன் விஷயத்தில் பெரிய கனவுடன் இருக்கிறார்கள். இதனால்குடும்பத்தின் அதிகபட்ச தேவைக்காக கணவர் சென்னையிலும் மனைவி கோவையிலுமாக வேலை, தொழில் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். மகன் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பது, அவன் எது செய்தாலும் பாராட்டுவது என்று இருந்தாலும், அந்த பிஞ்சு நெஞ்சின் விருப்பமோ அவர்கள் எதிர்பாராத கோணத்தில் இருக்கிறது. அதை மகனுடனான பைக் டூரில் அறிந்து கொள்ளும் அப்பா அதன் பிறகு என்ன முடிவு…
Read More“இளையராஜாவிற்கு பிறகு இசையை அதிகமாக நேசிப்பவர் வித்யாசாகர் தான்” ; தேசிங்கு ராஜா-2 விழாவில் ஆர்.கே.செல்வமணி பேச்சு
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ்,…
Read Moreவியோம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் புது படம் உருவாகிறது.
“Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது. வெற்றிகரமான டிரிப் மற்றும் தூக்குதுரை ஆகிய படங்களுக்கு பிறகு, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது அடுத்த சினிமா பயணத்தை Untitled Production No.1 எனும் பெயரில் புதிய திரைப்படத்தை ஆரம்பிக்கிறார். இந்தப் படத்தை “Vyom Entertainments” நிறுவனம் தயாரிக்க, திருமதி விஜயா சதீஷ் அதை வழங்குகிறார். இன்று அந்த திரைப்படத்திற்கான பூஜையும், சில படப்பிடிப்புகளும் தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நடிக்கிறார். அவருடன் பிரபல நடிகை குஷி ரவி இணைந்து நடிக்கிறார். இவர்களுடன், அனுபவமுள்ள நடிகர்கள் Y. G. மஹேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ்,…
Read More3 பி எச். கே – திரை விமர்சனம்
ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியின் வீடு வாங்கும் கனவு நனவு ஆனதா என்பதே படம். மனைவி, மகன், மகள் என்று அளவான குடும்பம் வாசுதேவனுடையது. வாடகை வீடு, மகன் மகள் படிப்பு என்று வாங்கும் சம்பளம் போதாத நிலையிலும் சொந்தமாய் ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பது வாசுதேவனின் லட்சியமாக இருக்கிறது. அதற்காக சிறுக சிறுக பணம் சேர்க்கிறார். இதற்கிடையே குறைந்தபட்ச மார்க்கில் பாசான மகனை இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க பெரும்பகுதி பணம் போகிறது. மறுபடி கொஞ்சம் பணம் சேர்ந்தபோது மகள் திருமணம் நிச்சயம் ஆகிறது. கணிசமான கையிருப்பை அது காலி செய்கிறது. இதற்கிடையே வாசுதேவனுக்கு மாரடைப்பு வந்து கட்டாய இதய ஆபரேஷன். இப்படி பணம் சேரச் சேர, செலவுகளும் அதற்கேற்ப வந்து சேர்ந்து கொள்ள, மேலும் சோதனையாக இன்ஜினியரிங் படிப்பில் கோட்டை விட்டு வந்து கண்ணீர்…
Read Moreஜியோஹாட்ஸ்டாரில் ரேவதி இயக்கத்தில் பிரியாமணி நடித்துள்ள “குட் வொய்ஃப்”!!
ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக இன்று வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி தமிழ் ஓடிடியில் அறிமுகமாகிறார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தொகுப்பாளர் கிஷன், “மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் சிறப்பாக கொண்டு வந்தோம். ரேவதி மேமுடன் வேலை பார்த்தது புது அனுபவம். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்”. ஒளிப்பதிவாளர், துணை இயக்குநர் சித்தார்த் ராமசாமி, “இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரேவதி மேம் என்னுடைய முதல் ஃபீமேல் டிரைக்டர். செம கூல்! நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும்…
Read Moreலவ்மேரேஜ் படக்குழுவினர் எனர்ஜியே இந்த வெற்றி
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் – ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இவ்விழாவில் படக் குழுவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் முருகானந்தம் பேசுகையில், ” இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், அதற்கு காரணமாக திகழ்ந்த ஊடகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்கள் கழித்து நான் நடித்த இந்த திரைப்படத்தை குடும்பத்தினருடன் சென்று பார்க்கும்படி என்னுடைய உறவினர்களிடம்…
Read Moreநமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் – உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!
உலகெங்கிலும் உள்ள 2.5 பில்லியன் மக்களால் என்றென்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவான ராமாயணம் போற்றப்படுகிறது. இந்த ராமாயணக் கதை மிகப்பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிறது. இந்தக் கதையில் ஹாலிவுட் மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற திறமையாளர்கள் ஒன்றிணைகிறார்கள். இந்தக் கதையை நிதேஷ் திவாரி இயக்க, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் 8 முறை ஆஸ்கார் விருது பெற்ற VFX ஸ்டுடியோ DNEG, யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. ராமாயணம் IMAX க்காக படமாக்கப்பட்டு முதல் பாகம் உலகம் முழுவதும் தீபாவளி 2026 மற்றும் இரண்டாம் பகுதி தீபாவளி 2027-லும் வெளியாகிறது. *ஜூலை 3, 2025:* ‘ராமாயணம்: தி இன்ட்ரடக்ஷன்’ காவியத்தை உலகளவில் பிரம்மண்டமாக ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்துள்ளது. இந்தக் கதையின் மாபெரும் சக்திகளான ராமர் vs ராவணன் இடையேயான போர் அறிமுகமாக…
Read Moreபாலிவுட் நட்சத்திரம் அபார்ஷக்தி குரானா, ROOT படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம்!
Verus Productions தனது முக்கிய படமான ‘ROOT – Running Out Of Time’ எனும் புதிய Sci-Fi கிரைம் த்ரில்லரை அறிவித்துள்ளது. சூரியபிரதாப் எஸ் இந்த படத்தை இயக்குகிறார், ’நாளைய இயக்குநர் – சீசன் 1’ மூலம் கவனத்தை ஈர்த்தவர், மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர். படத்தின் முதன்மை கதாநாயகனாகக் கௌதம் ராம் கார்த்தி நடிக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. அவருடன் இணைந்து, இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தி சினிமாவில் ‘Stree’, ‘Helmet’, ‘Luka Chuppi’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், இப்போது தென்னிந்திய சினிமாவில்…
Read More”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!
ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. நடிகை கிரேஸ் ஆண்டனி, “ராம் சார் படத்துக்காக என்னை அழைத்தபோது அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய கதையில் நான் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடைய டெடிகேஷன் வேற லெவல்! சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார். *நடிகர்கள்:* சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.
Read Moreசத்யராஜ் – காளி வெங்கட் நடித்த ‘மெட்ராஸ் மேட்னி’ ஜூலை நான்காம் தேதியன்று டிஜிட்டல் தளங்களில் வெளியீடு
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’ திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களுக்கு டிஜிட்டல் தளங்களிலும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஜூலை நான்காம் தேதியன்று அமேசான் பிரைம் (இந்தியா), சன் நெக்ஸ்ட்,சிம்பிள் சவுத் ( வேர்ல்ட் வைட்) மற்றும் டென்ட் கொட்டா ஆகிய முன்னணி டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது. நடுத்தர மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாகவும் , யதார்த்தமாகவும் விவரித்திருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி ‘ திரைப்படத்திற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடத்திலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Read More