‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு’. அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்…, ‘தயாரிப்பாளர் சதா முருகன் பேசியதாவது.., “பனிவிழும் இரவு என்பது மாறுபட்ட, கவித்துவமான தலைப்பு. நான் ஒரு பாடலாசிரியரும் கூட. சமீபகாலமாக வெளியாகும் பல தமிழ்ப் படங்களுக்குத் தமிழின் அழகையும் பெருமையையும் தாங்கும் தலைப்புகள் அமைவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதனால், அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம். ஆண்டுதோறும் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்கள்…

Read More

JioHotstar Unveils Trailer of Tamil Fantasy-Comedy Love Always, Featuring an AI-Recreated Voice of Legendary Crazy Mohan

_Directed by Madhumitha, the eight-episode limited series blends age-reversal fantasy with witty humour and eccentric characters, premiering October 30 exclusively on JioHotstar_ Link: https://youtu.be/VcwSOA7URHU?si=yGJP52hqwgCp5RtI Chennai, October 21, 2026: JioHotstar has unveiled the trailer of Love Always, an upcoming Tamil fantasy-comedy series directed by Madhumitha, set to premiere on October 30. Bringing together magic, humour and the complexities of relationships, the eight-episode limited series promises a quirky take on age reversal, driven by unexpected situations and entertaining character dynamics. Adding a special touch to the trailer is the AI-recreated voice of…

Read More

ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் இடம் பிடித்த ‘கெவி’ திரைப்படம்: 400 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக வெள்ளகெவி கிராமத்திற்கு ரேஷன் கடை வந்ததை கொண்டாடும் படக்குழு!

சென்னை — 98-வது ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் (Oscar Consideration Ballot) நுழைந்து உலக அரங்கில் கவனம் ஈர்த்துள்ள ‘கெவி’ (Gevi) திரைப்படத்தின் படக்குழு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிஜ உலக வெற்றியைத் தங்களது ‘மலை கீதத்தின்’ (Hill Anthem) மூலம் கொண்டாடியுள்ளது. ஆர்டப் ட்ரையாங்கிள்ஸ் (Artuptriangles Film Kampany) தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தின் மிக முக்கியமான இப்பாடலுக்கு, இசை ஜாம்பவான் ‘தேனிசைத் தென்றல்’ தேவா தனது கணீரென்ற குரலால் உயிர் கொடுத்துள்ளார். இப்பாடலின் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். பாடலைத் தொடர்ந்து, தேவா சார் பாடியுள்ள இப்பாடல் ஒரு மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டாடுகிறது. கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகெவி கிராமத்தின் 400 ஆண்டுக்கால வரலாற்றில், முதல்முறையாக ஒரு அரசு ரேஷன் கடை கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் உள்ள எளிய மக்களின்…

Read More

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6-ஆம் தேதி தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆகிறது

சசி எழுதி இயக்கியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கபா மற்றும் அருண் அருணாசலம் புரொடக்ஷன் சார்பில் அருண் அருணாசலம் தயாரித்துள்ள இப்படம், காதல், உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான முடிவுகளை மையமாகக் கொண்டுள்ளது. இப்படம் நவம்பர் 6, 2026 அன்று தமிழ் ZEE5 தளத்தில் நேரடியாக வெளியாகிறது. கட்டணம் செலுத்திப் பார்க்கும் (Pay-per-view) முறையில் இப்படத்தைக் காணலாம். ‘சொல்லாமலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானது முதல், அவரது சமீபத்திய வெற்றிப் படமான ‘நூறு சாமி’ வரை, மேலும் ‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற பாராட்டுப் பெற்ற திரைப்படங்கள் மூலம் சசி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். மனித உணர்வுகள், உறவுகள் மற்றும் அன்றாட…

Read More

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இளமைத் துள்ளல் நிறைந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் இங்க்’. ஏ. மகேந்திரன் வழங்க, மேகராஜ் தாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் ராஜ் அய்யப்பா மற்றும் டெல்னா டேவிஸ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்றைய இளம் தலைமுறையினரின் காதல், உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் சுனில் ரெட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இன்றைய தலைமுறையின் சமகால உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் ‘லவ் இங்க்’, நவீன காதலை ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவையுடன் சொல்லும் படமாக அமைவதுடன், அனைத்து வயதினரையும் கவரும் வகையிலும் உருவாகி…

Read More

*‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!*

இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த போஸ்டரில் ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதிலும் ஆக்‌ஷன் + தீவிரம் + சிறிதளவு காதல் ஆகியவற்றை ஒன்றிணைத்திருப்பதுடன், உதடுகளுக்கு இடையே ஒரு ரோஜாப்பூவையும், கண்களில் கனல் கக்கும் தீப்பொறியையும், கைகளில் துப்பாக்கியையும் ஏந்தியபடி தோன்றும் ஷாருக்கானின் பிரமிக்க வைக்கும் தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அத்துடன், ஆக்‌ஷன் திரில்லர் என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அவரது மூர்க்கமான அவதாரத்தையும் இந்தப் போஸ்டர் பிரதிபலிப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். ‘கொலையாளி அல்ல; நான் காதலன்!’ என்ற கவனம் ஈர்க்கும் வாசகத்துடன் வெளியாகியிருக்கும் இந்தப் போஸ்டர், ‘கிங்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருப்பதுடன்,…

Read More

திங்க் இன்டி வெளியிட்ட பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ ஆல்பம்

ராப் இசை கலைஞர் – பாடகர் – பாடலாசிரியர் – நடிகர் – என பன்முக ஆளுமை திறன் படைத்த பால் டப்பா சுயாதீன இசை உலகில் மிக முன்னணி இசைக்கலைஞராக அசைக்க முடியாத இடத்திற்கு உயர்ந்து வருகிறார். இவருடைய மியூசிக் ஆல்பம் வெளியானவுடன் பெரும் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று இணையத்தை அதிர வைத்து வருகிறது. இந்நிலையில் இவர் பாடல் எழுதி, பாடி ,நடித்த ‘ஏரோபிளேன்’ எனும் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை திங்க் இன்டி மியூசிக் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ ஆல்பத்தில் பால் டப்பா மற்றும் நடிகை அனன்யா ராம் பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் ராகுல் அசோக் குமார் இயக்க, இசையமைப்பாளர் அடியேல் மஸார் ( Adiel Massar) இசையமைக்க.., பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.…

Read More

ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘மின்னும் ஓர் இரவு’

நாகர்கோவிலில் பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை முன்னணி விளம்பரப் பட இயக்குநரான சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது. அஞ்சு கிருஷ்ணா அஷோக் நாயகியாக நடிக்க சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சிவபிரபு செல்வராஜ், “ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இரவுப் பொழுதை உற்சாகமாகக் கடக்க காட்டுப் பகுதிக்குள் செல்லும் நண்பர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்குகின்றனர். அதிலிருந்து அவர்கள்…

Read More

யோகி பாபுவின் 300வது திரைப்படம் – புதிய போஸ்டர் மூலம் வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு!

Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படத்தின் டீசரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கடினமாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குகிறான். ஆனால், அந்த வாகனம் திருடுபோகிறது. அதனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவன் இறங்கும்போது, அந்த வாகனத்திற்குப் பலரும் உரிமை கொண்டாடுகின்றனர். இதன் பின்னணியில் செயல்படும் வாகனத் திருட்டு…

Read More

ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஆர்.பி. பாலா, பி.ஜி. முத்தையா தயாரிக்கின்றனர்

இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நவீன் சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். ‘லெவன்’ படத்தில் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளை குவித்த நவீன் சந்திரா, தான் நடிக்கும் பாத்திரங்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்து வருகிறார். அவரது 51-வது படமான இது, ஒரு புதுமையான கதைக் களத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஆர்.பி. பாலா பிலிம்ஸ், பி.ஜி. முத்தையா புரொடக்ஷன்ஸ் பேனர்களில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு திங்கட்கிழமை (அக்டோபர் 26) அன்று சென்னையில் நிறைவுற்றது. படம் சிறப்பாக உருவாகியிருப்பதை குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினர். ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு…

Read More