கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘ படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் , ரக்சன், பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை விளம்பரப்படுத்தும்…
Read Moreதனித்த இடத்தை உருவாக்கி வரும் பவானி ஸ்ரீ!!
நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். விடுதலை படத்தில் அவர் வெளிப்படுத்திய வலுவான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றதோடு, ஆழமும் தீவிரமும் கொண்ட கதாபாத்திரங்களில் முழுமையாக ஒன்றி நடிக்கும் அவரது திறமைக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருமனதாக பாராட்டியுள்ளனர். அவரது பயணத்தில் புதிய மற்றும் உற்சாகமான கட்டமாக, ஹாட்ஸ்பாட் 2 மூலம் light hearted சினிமாவுக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கிறார். நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், இந்த வாரம் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படத்தின் preview காட்சிகளும் மற்றும் பத்திரிகையாளர் காட்சிக்கான திரையிடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது புத்துணர்ச்சியான திரைத் தோற்றமும் சிறப்பான நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. தன்…
Read Moreமாயபிம்பம் – விமர்சனம்
கதை… 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்.. ஒரு பெண்.. நாலு நண்பர்கள்.. நாலு நண்பர்கள் ஜாலியான பேர்வழிகள்.. இதில் ஒருவர்… எந்த பெண்ணை பார்த்தாலும் அவள் எப்படிப்பட்டவர் அவரது கேரக்டர் எப்படி என்பதை கிட்டத்தட்ட துல்லியமாக கணிப்பவர்.. ஒரு நாள் நாயகன் ஜீவா நாயகி ஜானகியை சந்திக்க பார்த்தவுடன் பிடித்தும் போகிறது.. அது காதலா.? என்று தெரியாமல் குழம்ப.. தன் நண்பர்களிடம் பகிர்கிறார்.. அடுத்த சில தினங்களில் எதிர்பாராத விதமாக நாயகன் நாயகியை சந்திக்கின்றனர்.. அப்போது ஒரு நண்பர்… அவள் உன்னுடன் உடலுறவு கொள்ள ஆசைப்படுகிறாள்… அதற்காக உனக்கு வலை வீசுகிறாள் என்றெல்லாம் சொல்கிறார்.. இதனை நண்பர் ஜீவாவும் நம்புகிறார்.. ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்.. ஆனால் அவள் உடனே தட்டிவிட்டு சென்று விடுகிறார்… அதன் பிறகு தான்…
Read Moreஹாட் ஸ்பாட் 2 மச் – விமர்சனம்
கதை… ஆந்தாலஜி பாணியில் கதைகள்.. முதல் கதை.. தாதா ராசா ரசிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள்.. அந்த ரசிகர்களின் தலைவர் குடும்பத்திலிருந்து இருவரை கடத்தி வைத்துக் கொள்கிறார் எம் எஸ் பாஸ்கர்.. அவர் வைக்கும் நிபந்தனைகளை தாதா மற்றும் ராசா ஆகியோர் நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.. நிறைவேறியதா.? இரண்டாவது கதையில்… தன் மகளை கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறார் தம்பி ராமையா.. ஆனால் அவளோ நாகரிக மோகத்தில் ஆடைகளை குறைத்து சுதந்திரமாக செயல்படுவேன் என்கிறார்.. தந்தைக்கு மகளுக்குமான போட்டி தான் இந்த படத்தின் மையக்கரு. மூன்றாவது கதையில் 2025-ல் இருக்கும் நாயகன் அஸ்வின் 2050 ஆம் ஆண்டில் இருக்கும் நாயகி பவானியுடன் காதல் கொள்கிறார்.. இருவருக்குமான காதல் நிறைவேறியதா.? என்பதுதான் கதை.. நடிகர்கள் (Cast): * பிரியா பவானி சங்கர் – ஷில்பா * பிரிகிடா சாகா…
Read Moreஇரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ – பிரியா தம்பதியர்!!
இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர இயக்குநரும், தொடர் வெற்றியை வழங்கி வரும் தனித்துவமான படைப்பாளியான இயக்குநர் அட்லீ மீண்டும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இயக்குநர் – தயாரிப்பாளர் அட்லீ – திருமதி பிரியா அட்லீ இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் எனும் மகிழ்ச்சியான செய்தியை.. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மீர் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக அட்லீ அப்பாவாகி இருக்கிறார். இது தொடர்பாக பிரியா அட்லி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” எங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைகிறார். ஆம்! நான் மீண்டும் கருவுற்று இருக்கிறேன். உங்களுடைய வாழ்த்துகளையும், அன்பையும் எதிர்பார்க்கிறேன்” என பதிவிட்டு, பிரத்யேக புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம்- அட்லீயின் விவரிக்க முடியாத தந்தையின் பாசத்தையும்,…
Read More‘லாரா’ திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு ‘அறுவடை’ திரைப்படம்.
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த், ஒளிப்பதிவு -ரகு ஸ்ரவண் குமார், இசை , படத்தொகுப்பு – கே .கே . விக்னேஷ். பாடல்கள் – கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி. கிராமியப் பின்னணியிலான கமர்சியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார். கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் ‘அறுவடை’ படத்தின் சார்பில் கோயம்புத்தூரில் பொங்கல் விழா கொண்டாடிப் படப்பிடிப்பை முடித்துள்ளனர். அறுவடைத் திருநாள்…
Read Moreபிரதமர் மோடி முன்னிலையில் மெய்சிலிர்க்க வைத்த திருவாசகம் – ஜனவரி 22ல் ஜி.வி. பிரகாஷ் வெளியிடும் முதல் பாடல் !!
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். பொங்கல் விழாவின் ஆன்மிகமும் தமிழ்ச் சுவையும் கலந்த அந்த காலை நேரம், தமிழ் உணர்வோடு ஒலித்த திருவாசக இசை நிகழ்ச்சியால், தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடி நேரில் அமர்ந்து இந்த இசையை ரசித்தது, நிகழ்வின் பெருமையை மேலும் உயர்த்தியது. ஜி.வி. பிரகாஷின் குரலும் இசையும், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை சமகால இசை மொழியில் வெளிப்படுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.…
Read Moreசசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும்…
Read More“’திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! நம் முன்னோர்களின் போர்க்குரலை மீண்டும் உயிர்பிப்பது” – நடிகர் ரிச்சர்ட் ரிஷி!
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தற்போது, வரலாற்றுப் படமான ‘திரௌபதி 2’ மூலம் இதுவரை காணாத வீரத் தோற்றத்தில் ரசிகர்களை திரையில் சந்திக்க உள்ளார். ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ’திரெளபதி 2’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்தான அனுபவங்களை ரிச்சர்ட் ரிஷி பகிர்ந்து கொண்டார். “’திரௌபதி 2’ படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. இது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த…
Read Moreமெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘மான சங்கர வர பிரசாத் ‘திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்து உணர்ச்சி பூர்வமான செய்தி வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி
உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற மான சங்கர வர பிரசாத் ‘ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி தனது இதய பூர்வமான -ஆழமான – உணர்ச்சி பூர்வமான- செய்தியை வெளியிட்டிருப்பதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுடனான தன்னுடைய பிரிக்க முடியாத பிணைப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஒரு தெலுங்குத் திரைப்படம் இந்த இலக்கை அடைவது இதுவே அதிவேகமான சாதனையாகும். இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் மூன்று மில்லியன் டாலர் வசூல் என்ற மைல் கல்லையும் கடந்து, சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் அனில் ரவி புடி கூட்டணியின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படமாகவுப் உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியாகி எட்டாவது நாளில் வலிமையான வசூலை பதிவு செய்த MSG- பெரும் முன் பதிவுகளின் ஆதரவுடன் ஒன்பதாவது நாளில் கூடுதல் வலிமையையும்…
Read More