கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னை மதுரவாயிலில் உள்ள பாக்கியலட்சுமி கல்யாண மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்,செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களையும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன் அவர்களையும்…

Read More

நடிகர் தனுஷ் வெளியிட்ட வ்யோம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு எண் 1 – படத்திற்கான தலைப்பு: மனிதன் தெய்வமாகலாம்

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் தயாரிக்கும் இந்தப்படம் *”மனிதன் தெய்வமாகலாம்”* எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பு வெளியீடு படக்குழுவிற்கும், நண்பர்களிற்கும் கொண்டாட்ட தருணமாக அமைந்துள்ளது. இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது. இந்தப்படத்தில் புகழ்பெற்ற இயக்குநர்-நடிகர் செல்வராகவன் முன்னணியில் நடிக்கிறார். அவருக்கு இணையாக குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன்…

Read More

ஒரு படப்பிடிப்பில் கதாநாயகனை படத்தில் நடித்துக் கொண்டிருந்த காளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கிராமத்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘வட மஞ்சுவிரட்டு’. இதில் முக்கியமாக மஞ்சுவிரட்டு சார்ந்த காட்சிகள் அதிகம் இருக்கின்றன. கிராமத்து மண்,மக்கள், கலாச்சாரம், மஞ்சுவிரட்டு போன்றவை கொண்ட கலந்த கதையாகவும் காதல், பாசம், வீரம் போன்றவற்றை வெளிப்படுத்தும் கலையாகவும் உருவாகி வரும் படம் இந்த ‘வட மஞ்சுவிரட்டு’. இப்படத்தின் நாயகனாக ‘முருகா’ அஷோக் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ‘முருகா’, ‘பிடிச்சிருக்கு’, ‘கோழி கூவுது’ போன்ற படங்களில்லிருந்து ஆரம்பித்து, தொடர்ந்து ‘காங்ஸ் ஆப் மெட்ராஸ்’ , ‘மாயத்திரை’ , ‘ஆர் யூ ஓகே பேபி?’ , ‘பெஸ்டி’, ‘மாயப்புத்தகம்’, ‘லாரா’ , இப்படி 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர். தனக்கென தனி இடத்தை பிடித்த நாயகன். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் சங்கிலி.CPA. அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ.பழனிச்சாமி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நிர்வாக…

Read More

பேட் கேர்ள் – திரை விமர்சனம்

பிளஸ்- 1 படிக்கும் பள்ளி மாணவி அஞ்சலிக்கு உடன்படிக்கும் சக மாணவன் மீது ஈர்ப்பு, கண்மூடித்தனமான காதல் என்றும் சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது பள்ளி மூலமாக பெற்றோருக்கு தெரிய வர, கண்டிக்கிறார்கள். மகளோ பெற்றோரின் கண்டிப்புக்கு அடங்குவதாக இல்லை. நிலைமை கைமீறிப் போவது தெரிந்தவுடன் வேறு பள்ளிக்கு மாற்றுகிறார்கள். இதனால் பெற்றோர் மீது கோபமடையும் அஞ்சலி, வேண்டுமென்றே அத்துமீறுகிறார். அதுவும் எப்படி? ”நீங்கள் சொல்வதை எல்லாம் இந்த பள்ளி வரை தான் கேட்பேன், அதன் பிறகு , என் இஷ்டப்படி தான் வாழ்வேன் ” என்கிறார். அவர் சொன்னது போலவே கல்லூரிக் காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்கிப் படிக்கிறார். அங்கே சீனியர் மாணவருடன் காதல், உறவு என்று போகிறார்.அதன் மூலம் இந்த சமூகத்தைப் பழிவாங்குவதாகவும் நினைக்கிறார். ஒருகட்டத்தில் இந்த வாழ்க்கை போலி. காதல்…

Read More

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான “கோல்ட் கால்”  Title Teaser – ஐ படகுழுவினர் வெளியிட்டனர்

தனித்துவமான கருப்பொருளுடன், மர்மமான சூழலை கொண்டுள்ள இந்த படம், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கட்டிப் போடக்கூடிய வலுவான கதை சொல்லலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கோல்ட் கால்” ஒரு விறுவிறுப்பான கதையையும், ஒரு பீதியூட்டும் சூழலையும் கலந்த ஒரு முயற்சி. இது, தலைப்பு வெளியீட்டிலிருந்தே பார்வையாளர்களை கவரும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் விற்பனை பற்றி அல்ல… ஆனால் விற்பனையாளர் அலுவலக வேளைகளில், விற்பனைக்கு அப்பால் களத்தில் செய்வதைக் குறித்து பேசுகிறது. கதை நகரும் போது, ஒவ்வொரு காட்சியும் பார்வையாளரிடமிருந்து சிரிப்பை கிளப்புவதே முதன்மையான நோக்கமாக அமைந்துள்ளது. நகைச்சுவை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது – வேடிக்கையான மோதல்கள், முரண்பட்ட குணநலன்கள், சற்றே விநோதமான கேமரா கோணங்கள் போன்றவை வழியாக. இனிமையான உணர்ச்சி பூர்வ தருணங்களும், கடினமான நிமிடங்களும் இணைந்துள்ளன. ஆனால் படம் ஒருபோதும் முட்டாள்தனமான…

Read More

நடிகர் தனுஷ் வெளியிட்ட வ்யோம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு எண் 1 – படத்திற்கான தலைப்பு: மனிதன் தெய்வமாகலாம்!!

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் தயாரிக்கும் இந்தப்படம் *”மனிதன் தெய்வமாகலாம்”* எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பு வெளியீடு படக்குழுவிற்கும், நண்பர்களிற்கும் கொண்டாட்ட தருணமாக அமைந்துள்ளது. இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது.   இந்தப்படத்தில் புகழ்பெற்ற இயக்குநர்-நடிகர் செல்வராகவன் முன்னணியில் நடிக்கிறார். அவருக்கு இணையாக குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி…

Read More

அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !!

மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மோஷன் போஸ்டரிலேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது.  அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ படத்தின் மைய கதாப்பாத்திரமாக,  நிவின் பாலி உள்ளதை இந்த மோஷன் போஸ்டர் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையில் நிவின் பாலி எவ்வாறு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தப்போகிறார் என்பதைக் காண, ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த திரைப்படத்தை சமீபத்தில் ‘கருடன்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய அருண் வர்மா இயக்குகிறார். கதை, திரைக்கதை பிரபல எழுத்தாளர்கள் ஜோடி பாபி &…

Read More

நவம்பர் 21 ஆம் தேதியன்று வெளியாகும் “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்”;

🎬 டிரைலர் இணைப்பு: https://youtu.be/fZuk0oru-ik சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா, மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்ஷன்-த்ரில்லர் படமான “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்” திரைப்படத்தின் தமிழ் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கலக்கிய SISU படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படம், தத்ரூபமான சினிமா ஆக்ஷன் அனுபவத்தை வழங்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 21, 2025 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. கதை சுருக்கம் : போரின்போது தனது குடும்பம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பின் வீடு திரும்பும் “மரணத்தை ஏற்க மறுக்கும் மனிதன்” (ஜோர்மா டோமிலா), அந்த வீட்டை இடித்து ஒரு லாரியில் ஏற்றி, தனது குடும்பத்தின் நினைவாக பாதுகாப்பான இடத்தில் அதை மீண்டும் அமைக்கத் தீர்மானிக்கிறார். ஆனால், அவரது குடும்பத்தை கொன்ற சிவப்பு…

Read More

நேச்சுரல் ஸ்டார் நானி – ‘தி பாரடைஸ்’ படத்திலிருந்து புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது !!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்திலிருந்து புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது !! சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் நேச்சுரல் ஸ்டார் நானி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தனது புதிய பரிணாமத்துடன் வருகிறார். உலகளாவிய ஆக்சன் படமான ‘தி பாரடைஸ்’ படத்திற்காக, நானி தனது தோற்றத்தை முழுமையாக மாற்றி, சக்திவாய்ந்த, பீஸ்ட் மோட் அவதாரத்தில் ‘ஜடல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிம் புகைப்படத்தில், நானி தடிமனான கை, பருமனான உடற்கட்டுடன், உண்மையான ஆக்சன் ஹீரோவாக காட்சியளிக்கிறார். ‘தசரா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, இந்த கதாபாத்திரத்தை மிகுந்த வலிமை மிக்கதாக வடிவமைத்துள்ளார். அதற்காக நானி தினமும் இரண்டு முறை வொர்க்அவுட், ஹெவி ரெசிஸ்டன்ஸ் ட்ரெயினிங்,…

Read More

காந்தி கண்ணாடி – திரை விமர்சனம்

பணம் மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புபவன் கதிர். அதனாலேயே சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தவற விடக் கூடாது என்பதில் கவனமாக, அதாவது கறாராக இருக்கிறான். காதல் திருமணம் புரிந்து ஊரை விட்டு வந்த காந்தி- கண்ணம்மா தம்பதிகளுக்கு இப்போது வயது அறுபதை தாண்டுகிறது. இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் கிடையாது. அதனால் தான் என்னவோ தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பில் பொங்கி வழிகிறார்கள். மனைவி தான் தனக்கு எல்லாமே என காந்தியும், கணவரே தன் உலகம் என வாழும் கண்ணம்மாவும் ஆதர்ச தம்பதிகளாக ஊராரின் கண்களுக்கு ஆச்சரியம் தருகிறார்கள். இவர்களில் கண்ணம்மாவுக்கு தங்கள் அறுபதாம் கல்யாணத்தை சிறப்புற நடத்தி பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதற்கு காந்தியும் உடன்படுகிறார். தன்னுடைய அறுபதாம் கல்யாணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தித் தரும்படி இவென்ட் மேனேஜ்மென்ட் செய்யும் கதிரிடம் கேட்கிறார். கதிரும் ரூ 52…

Read More