இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி சயின்ஸ் ஃபிக்சன் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ்…
Read More”யாரிந்த லட்சுமி என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது” – நடிகை அபிராமி
’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. நடிகர் வினோத், “‘ராட்சசன்’ பட டீச்சரில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நானும் நீண்ட நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான கதையாக ‘மகாராஜா’ அமைந்துள்ளது. சேது அண்ணாவுடன் எனக்கு மூன்றாவது படம் இது. அவரின் வளர்ச்சி கடின உழைப்பால் படிப்படியாக வந்தது. அவருடைய சுறுசுறுப்பு நம் சோம்பேறித்தனத்தை தூர விரட்டி விடும். அனுராக் கஷ்யப் சாரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். அபிராமி, மம்தா மோகன்தாஸ் இருவர் கூடவும் வேலை பார்த்தது…
Read Moreதண்டுபாளையம் திரை விமர்சனம்
உண்மை சம்பவத்தை திரையில் பார்த்தாலே மனம் கதையோடு இன்னும் நெருக்கமாகி விடும். இதுவோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று வீடு புகுந்து நடத்தும் வன்முறைக் கதை. அதை திரைப்படுத்திய விதத்தில் மனதுக்குள் திகில், அதேநேரம் விழிப்புணர்வுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஆணியடித்து சொல்லியிருக்கிறார்கள். பெங்களூர் மற்றும் சுற்றுப்பகுதியில் வீடு புகுந்து கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவத்தை ஈவிரக்கமே இ்ல்லாமல் தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துகிறது. அந்த கூட்டத்தை போலீஸ் அதிகாரி கோர்ட்டில் நிறுத்தி தூக்கு தண்டனை பெற்று தருகிறார். மக்களை பயமுறுத்திய கூட்டம் ஒழிந்தது என்று போலீசார் எண்ணும் நிலையில் அதேபோல் இன்னொரு கூட்டம் புறப்பட்டு அட்டூழியம் செய்கிறது. அந்த கூட்டத்தை பிடிக்க புதிய போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார் அவரால் அந்த கூட்டத்தின்ஆணிவேரை அறுக்க முடிந்ததா என்பது ரத்தம் தெறிக்கும் திகுதிகு…
Read Moreவெப்பன் விமர்சனம் 3/5..
சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம். சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’.. Youtuber வசந்த் ரவி வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதில் வல்லவர். எனவே இவர் வீடியோவுக்காக ஒரு முறை சூப்பர் ஹுயூமன் பற்றிய தகவல்களைத் தேட ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கு திடீரென ஒரு வெடி விபத்து நடக்கிறது. அப்போது இவர் அங்கு இருப்பதால் போலீஸ் இவரை அழைத்துக் கொண்டு விசாரிக்கின்றனர். அப்போது இவர் சூப்பர் ஹியூமன் ஒருவர் இருக்கிறார். அவரை உங்களால் அழிக்க முடியாது அது ஒரு அபார சக்தி கொண்டது என்கிறார். மேலும் அந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரிய வருகிறது.. அப்படி என்றால் வசந்த ரவி உண்மையில் யார்.? அவருக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.…
Read Moreதிருவான்மியூரில், தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் கண்காட்சியை துவக்கி வைத்த கீர்த்தி சாந்தனு
சென்னையில் இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடவும், வீட்டுக்குப் பெண்களுக்கு குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் வகையில், திருவான்மியூரில், தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் கண்காட்சி இன்று துவங்கியது. சின்னத்திரை புகழ் கீர்த்தி சாந்தனு இந்த கண்காட்சியினை துவக்கி வைத்தார். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், முழுமையாக கைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், ஆடை, அணிகலன்கள், வீட்டுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள், பேக்ஸ், பர்னிச்சர்கள் என அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடு அனைவரும் சுற்றிப்பார்ப்பதுடன் ஜாலியாக ஷாப்பிங்கும் செய்யும் வகையில் ஒரு அருமையான வாய்ப்பாக இந்த கண்காட்சி இருக்கும். இந்த கண்காட்சியினை திறந்து வைத்த கீர்த்தி சாந்தனு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது… இந்த அருமையான கண்காட்சியினை திறந்து வைத்ததில் மகிழ்கிறேன். வட இந்தியா சென்று தேடித்தேடி வாங்கும் பொருட்களை, இங்கு நீங்கள் எளிமையாக வாங்கலாம். சுற்றுலா…
Read More“பிதா படம் எடுக்கும்போதே படத்தின் தரம் தெரிந்தது.” – நடிகை வனிதா விஜயகுமார்
SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசியதாவது… மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர் புல் மீடியா. ஒவ்வொரு வாய்ப்பும் மிக முக்கியமானது. அது முடிந்த பிறகு தான் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் எனத் தோன்றும். எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தக்குழுவிடம் நிறைய உழைப்பு தெரிகிறது. மதி நடிகராக அறிமுகமாகும் படம். டிரெய்லர் நன்றாக உள்ளது, கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற…
Read Moreஹாட் ஸ்டாரில் ஸ்டீரிமிங் ஆக இருக்கும் அரண்மணை – 4
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை ஜூன் 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமர்ஷியல் என்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார். அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தைக் கொண்டுள்ளது, இது சரவணன் என்ற வக்கீலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சரவணன் தன் சகோதரியும் அவள் கணவனும்…
Read Moreதளபதி பிறந்தநாளை முன்னிட்டு போக்கிரி ரீ-ரிலிஸ்
கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்தியராமமூர்த்தி அவர்கள் தயாரிப்பில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா அவர்களின் இயக்கத்தில் ‘தளபதி’விஜய்,அசின்,வடிவேலு,நாசர்,பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு ஜனவரி-14 பொங்கல் தினத்தன்று வெளியாகிய போக்கிரி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. 2005-இல் வெளியான இவரது முந்தைய திரைப்படமான திருப்பாச்சியின் வசூல் சாதனையை முறியடித்து, அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது போக்கிரி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. போக்கிரி திரைப்படத்தில் காதல், ஆக்க்ஷன், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததனால் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன. இத்திரைப்படம் அப்போதே ‘ஷிப்டிங்’ எனப்படும் மறுவெளியீட்டில் வெளியாகி 100-நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சமீபகாலமாக மறுவெளியீட்டில் வெளியாகும் திரைப்படங்கள்…
Read Moreமாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் பதிப்பில் வாகை சூடிய ஆகாஷ் முரளிதரன்
மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் என்ற மதிப்புமிக்க பட்டத்தை வெல்வதற்கான பரபரப்பான பயணம் ஜூன் 7, 2024 அன்று பரபரப்பான இறுதிப்போட்டியில் முடிவடைந்தது. அற்புதமான சமையல் சவால்கள் மற்றும் சுவையான உணவுகள் நிறைந்த ஒரு சீசனுக்குப் பிறகு, சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் முரளிதரன் இந்த சீசனின் ஃபைனலில் மாஸ்டர் செஃப் பட்டத்தை வென்றார். போட்டி கடுமையாக இருந்தது, திறமையான ஹோம் குக்குகளான ஜரீனா பானு, வாணி சுந்தர் மற்றும் பவித்ரா நளின் ஆகியோர் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தனர். ஆகாஷ், மறந்துபோன காய்கறிகளை தனது சமையல் குறிப்புகளில் இணைத்து மீண்டும் அறிமுகம் செய்ததற்காக கொண்டாடப்பட்டு அவரது அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றார், சோனி LIV இல் நடந்த முதல் டிஜிட்டல் பிரத்தியேக சீசனில் தனது மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் கனவை நனவாக்கி, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றெடுத்துள்ளார். ஆகாஷ் முரளிதரனின்…
Read Moreதம்பி ராமையா மகன் கதை நாயகனாக நடிக்கும் “பித்தல மாத்தி”
ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த கால காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.ஜூன் மாதம் 11ம் தேதி திரு உமாபதி ராமையா வின் திருமணம் நடைபெற உள்ளது. இதே…
Read More