மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி – கருணாகரன்

தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை Monster திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்க உள்ள தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்த, என் கலைக்கு வடிவம் கொடுத்த இந்த மண்ணின் – தமிழ்நாடு அரசின் இந்த விருதினை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது இந்த 14 ஆண்டின் திரை உலக வாழ்வில் இந்த விருதானது ஒரு முக்கிய அங்கீகாரம். Monster திரைப்படத்தின் இயக்குனர் திரு. நெல்சன் அவர்களுக்கும், திரு. S.J. சூர்யா அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. S.R. பிரபு அவர்களுக்கும் திரு. S.R. பிரகாஷ்பாபு அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான விமர்சனம் அளித்து என்னை ஊக்குவித்த ரசிகர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் என்…

Read More

Salute to Mothers – 15வது ஆண்டு விழா -சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்

சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் Salute to Mothers நிகழ்ச்சி, இந்த ஆண்டும் தாய்மையின் மகத்துவத்தை போற்றும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. தாயை ஒரு உறவாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் சமூக மதிப்பாகவும் கொண்டாடும் இந்த நிகழ்ச்சி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளின் பங்கேற்புடன் அர்த்தமுள்ள சமூக விழாவாக அமைந்தது. நிகழ்ச்சிக்கு பத்மபூஷன் திரு நல்லி குப்புசாமி செட்டி, பத்மஸ்ரீ பேராசிரியர் டாக்டர் வி. காமகோட்டி, திரு ராமதாச ராவ் மற்றும் பத்மஸ்ரீ எழுத்தாளர் திருமதி சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். இந்த ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் வி. காமகோட்டி மற்றும் திருமதி சிவசங்கரி ஆகியோர் இணைந்து கலந்துகொண்ட முதல் பொதுநிகழ்ச்சியாக இது அமைந்ததால், நிகழ்ச்சியின் பெருமையும்…

Read More

ZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் சமீபத்தில் வெளியான “சிறை” திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதன் ஆழமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் உணர்வுபூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தனது உண்மை வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணமே “சிறை”…

Read More

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘ மச் ‘ திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர் வெற்றி விழாவை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த வெற்றி விழாவில் ஒளிப்பதிவாளர் ஜோசப் பால் பேசுகையில், ” அஸ்வின் குமாருடன் பணியாற்ற வேண்டும் என்ற போது முதலில் தயக்கம் இருந்தது. அதன் பிறகு பழகும் போது தான் அவருடைய அர்ப்பணிப்பு தெரிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அஸ்வின் குமார் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க முடியாதது. ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால்…

Read More

மெல்லிசை – விமர்சனம் !!

கதை… ஸ்கூல் பிடி மாஸ்டர் கிஷோர்.. இவரின் மனைவி சுபத்தரா-வும் இதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.. கிஷோருக்கு நல்ல பாடும் திறமை இருப்பதால் டிவி ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொள்கிறார்.. எனவே நிறைய தினங்களில் ஸ்கூலுக்கு லீவு போட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.. இதனால் ஸ்கூல் பிரின்சிபாலுக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.. நீங்கள் வேலை விட்டு செல்லுங்கள் உங்களிடத்தில் நாங்கள் வேறு PT மாஸ்டர் வைத்துக் கொள்கிறோம் என்கிறார்.. இதனால் மனைவி.. நீங்கள் பாட வேண்டாம் ஸ்கூல் வேலையை கவனியுங்கள் என்று சொல்கிறார்.. இந்த சூழ்நிலையில் கிஷோர் என்ன செய்தார்.? குடும்பத்தை கவனித்துக் கொண்டாரா அல்லது தன் திறமையை நிரூபித்து வெளியே வந்து வாழ்வில் உயர்ந்தாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..   நடிகர்கள்… G.Kishore Kumar – As Rajan Subatra Robert – As Vidya George…

Read More

Lockdown – விமர்சனம்

  கதை… சார்லி – நிரோஷாவின் மகள் அனுபமா.. இவர் ஐடி கம்பெனியில் வேலை தேடி அலைகிறார்.. அப்போது ஒரு நாள் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொள்கிறார்.. அப்போது மது அருந்தியதால் நினைவில்லாமல் இருக்கிறார்.. அப்போது அவருக்கே தெரியாமல் ஒரு சம்பவம் நடந்து விடுகிறது.. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் கர்ப்பம் என்பதை அறிந்து கொள்கிறார்.. வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும்.. தன் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியாத நிலையில் இவருக்கு ஒரு தோழி அபார்ஷன் செய்ய சொல்லி உதவுகிறார்.. அப்போது கொரோனா லாக்டவுன் அமலுக்கு வருகிறது.. இதனை அடுத்து அவர்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. கருவை கலைக்கவும் முடியாமல் வெளியே செல்லவும் முடியாமல் நாட்கள் கடந்து கொண்டிருக்க என்ன செய்தார் அனுபமா என்பது தான் மீதிக்கதை..   நடிகர்கள்… Anupama Parameswaran,…

Read More

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இதற்கு முன்பு வெளியான புதுமையான மற்றும் தரமான படங்கள் எல்லைகள், மொழிகள் தாண்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அனுஷ்கா ஷெட்டியின் ‘அருந்ததி’, கல்யாணி பிரியதர்ஷனின் ’லோகா: சாப்டர்1’ போன்ற படங்கள் இந்திய சினிமாவில் முத்திரை பதித்தவை. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உருவாகிறது ’வெள்ளகுதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமாரின் ’மண்டவெட்டி’ திரைப்படம். கோமலி பிரசாத் நடிக்கும் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 28) பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் நிறுவனத்தில், சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரிக்கும் இந்த படம் காட்சியமைப்பிலும் கதை சொல்லலிலும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். ’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல்…

Read More

“ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!

மனதை தொடும் நல்லுணர்வுகளுடன் வாழ்க்கையின் ஒரு பகுதியை திரையில் காட்ட இருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம் கிஷோர் நடிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உணர்வுப்பூர்வமான மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான பல மகிழ்வான தருணங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை திரவ் எழுதி இயக்கியுள்ளார். பட அனுபவம் பற்றி இயக்குநர் திரவ் பகிர்ந்து கொண்டதாவது, “ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பொறுப்பு, சுமைகள், கட்டுப்பாடுகள் காரணமாக இவற்றை எல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. இசையை உயிராக நேசித்த ஒருவன் குடும்ப பொறுப்பு காரணமாக தனது கனவுகளைத் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கிறான்.…

Read More

“ஆகாசம்லோ ஒக்க தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக்க தாரா” திரைப்பட உலகிலிருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார். Geetha Arts & Swapna Cinema வழங்க, சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும் நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக “ஆகாசம்லோ ஒக்க தாரா” படத்தில் நடித்து வருகிறார் . புதுமையான கதை சொல்லல் மற்றும் தனித்துவமான காட்சி அமைப்புகளுடன், பல வெற்றிப்படங்களைத் தந்து, புகழ் பெற்ற பவன் சடினேனி ( Pavan Sadineni ) இப்படத்தை இயக்குகிறார் . புகழ்பெற்ற Geetha Arts மற்றும் Swapna Cinema வழங்கும் இந்த திரைப்படத்தை, சந்தீப்…

Read More

STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் – சிம்புவின் “சிலம்பாட்டம்” பிப்ரவரி 6 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது!

STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சிலம்பாட்டம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2008ஆம் ஆண்டு வெளியான இந்த ஆக்‌ஷன்–மாஸ் படம், சிம்புவின் கேரியரில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. கிராமத்து எளிமையும், நகரத்து ஸ்டைலும் கலந்து இரட்டை வேடங்களில் சிம்பு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் தாயாரிப்பில், 2008ஆம் ஆண்டு வெளியான போது நல்ல வசூலும், ரசிகர்கள் ஆதரவும் பெற்ற “சிலம்பாட்டம்”, காலப்போக்கில் சிம்புவின் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட ஒலி – படத்தரத்தில், புத்தம் புது பொலிவுடன் இந்த படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் சிலம்பரசன் (STR) இந்தப் படத்தில் “தமிழரசன்”…

Read More