ஒரு அபார்ட்மென்ட்-ல் உடல் கட்டப்பட்டு இருக்கிறார் அருள்நிதி. அவருக்குப் பின்னால் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள். இந்தச் சம்பவத்திற்கு யார் காரணம்? இப்படியான சூழலில் இருந்து அருள்நிதி எப்படித் தப்பித்தார் என்பதே படத்தின் திரில்லர் கதை. வெற்றிபெற்ற, பெறும் கலைகளின் ஆகப்பெரும் பலமே எளிமை தான். எளிமை இல்லாத கலை எளிய மனிதர்களை ஈர்ப்பதே இல்லை. அந்த வகையில் பெரும் குழப்பமான திரைக்கதையை K13-ல் கூடுமான வரையில் எளிமைப்படுத்தி தந்திருக்கிறார் இயக்குநர் பரத் நீலகண்டன். எந்தவொரு பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத படம் தான். கொஞ்சமேனும் ஒரு திரில்லிங்கான அனுபவத்தைத் தருவதால் படத்தோடு ஒன்ற முடிகிறது. மெளனகுருவையும் இரவுக்கு ஆயிரம் கண்களையும் இணைத்து தன் நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் அருள்நிதி. கதாநாயகிக்கு அடிச்சி அந்தர் பன்ற அளவிற்கான கேரக்டர் சிறப்பாக நடித்திருக்கிறார். குற்றவுணர்ச்சியோடு மல்லுக்கட்டும் காட்சிகளில் ஹீரோயினோடு முட்டி…
Read MoreCategory: விமர்சனம்
தேவராட்டம்- விமர்சனம்
மறுபடியும் முத்தையாவிடம் இருந்து வந்திருக்கும் ஒரு சாதிப்படம் தான் தேவராட்டம். முதலில் இவரிடம் இருந்து மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை மீட்டெடுக்க வேண்டும். வெட்டுவது, குத்துவது, குடிப்பது தவிர அங்குள்ளவர்களுக்கு வேறு எதுவுமே தெரியாதா? ஏன் எல்லாப்படங்களிலும் இப்படியே சித்தரிக்க வேண்டும். நிறைய விமர்சனங்களைப் பார்த்தால் இப்படத்தில் சாதி நெடி இல்லை என்று சொல்லி இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் படம் நெடுக சாதிய உள்குத்து இருக்கிறது. உதாரணத்திற்கு படத்தில் கெளதம் கார்த்தி அக்கா மகளின் தோழி ஒருவர் பாலியல் வன் புணர்வு செய்யப்படுவார். அந்தப்பெண்ணின் தாய் தகப்பன் போலீஸ் வரை சென்று நீதி கிடைக்காததால் கெளதம் கார்த்தியிடம் வந்து உதவி கேட்பார்கள். அவர்கள் கெளதம் கார்த்திக்கை அய்யா அய்யா என்றே அழைப்பார்கள். அதேபோல் பாலியல் வன்கொடுமை செய்யும் பையனும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவன் என்பது போன்ற குறியீடுகளை அந்தப்பையனின்…
Read Moreராக்கி – விமர்சனம்
நடிப்பு : ஸ்ரீகாந்த்,நாசர்,ஈஷான்யா,சயாஷி ஷின்டே,பிரம்மானந்தம் இயக்கம் : கே சி பொடியா கதை: தன் உயிரைக் காப்பாற்றி அடைக்கலம் கொடுத்த எஜமானை கொன்றவர்களை பழிவாங்கும் நாயின் டபுள் ஆக்ஸன் கமர்சியல் மசாலா. ஸ்ரீகாந்த் மிகவும் நேர்மையான போலீஸ் ஆபிசர், அவர் ஒரு நாள் வேலை முடிந்து வரும் போது விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க் குட்டியைப் பார்த்து காப்பாற்றி, வீட்டுக்கு எடுத்து வந்து ராக்கி என்று பெயர் வைத்து வளர்க்கிறார். அவரது மனைவி ஈஷான்யாவும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ராக்கியின் துறுதுறு தனத்தை கண்டா ஸ்ரீகாந்த் அதை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். துப்பறிவதில் எக்ஸ்பர்ட்டாகி விட்ட ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்கிறார் ஸ்ரீகாந்த் . இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ சாயாஜி சிண்டேக்கும் ஸ்ரீகாந்துக்கும்…
Read More‘தாதா 87’ திரைப்பட விமர்சனம்
நாயகன் ஆனந்த் பாண்டி, படித்து விட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். பார்க்கும் பெண்களை எல்லாம் தன் வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார். அதே பகுதியில் தாதாவாக இருக்கும் சாருஹாசன், சாதிகள் இருக்க கூடாது என்று நினைத்து வாழ்கிறார். இப்படி இருக்கும் நேரத்தில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் கவுன்சிலர் பதவிக்கான தேர்தலுக்கு போட்டி போட்டுகிறார்கள். இந்த இடத்திற்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஜனகராஜ், தனது மகள் நாயகி ஸ்ரீபல்லவியுடன் குடி வருகிறார். ஸ்ரீபல்லவியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் ஆனந்த் பாண்டி. எப்படியாவது ஸ்ரீபல்லவியை காதலில் விழ வைக்க வேண்டும் என நினைத்து தினமும் பின் தொடர்கிறார். இந்த விஷயம் ஜனகராஜ்க்கு தெரிந்து, போலீசில் புகார் கொடுக்கிறார். இருந்தாலும், ஸ்ரீபல்லவியை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீபல்லவி, ஆனந்த் பாண்டியின் காதலை ஏற்றுக்…
Read Moreசேரன் இயக்கிய திருமணம் – விமர்சனம்
ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் சுகன்யா. அவரது தம்பி உமாபதி. இவரும், காவ்யா சுரேசும் காதலிக்கிறார்கள். காவ்யாவின் அண்ணன் சேரன். குடும்ப பொறுப்பை தனது தோளில் சுமந்து கொண்டு நேர்மையானவராக இருக்கிறார். இந்த நிலையில், காவ்யா தனது காதலை குடும்பத்தாரிடம் தெரிவிக்க, இரு வீட்டாரும் சந்தித்து பேசுகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய வேலையில் இரு வீட்டாரும் ஈடுபடுகிறார்கள். ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது தம்பியின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று சுகன்யா விருப்பப்படுகிறார். ஆனால் தனது சக்திக்கு ஏற்ப மனநிறைவோடு தங்கைக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க நினைக்கிறார் சேரன். இவர்களது மாறுபட்ட எண்ணத்தால் உமாபதி – காவ்யா திருமணத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை கடந்து, உமாபதி – காவ்யா திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன…
Read More