தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மாநிலம் என்ற அவல நிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கியிருப்பதும், நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும் பேரதிர்ச்சியளிக்கிறது”என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியா முழுதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மருத்துவமனைகளில் கடுமையாக இருக்கிறது. மருத்துவ ரீதியான ஆக்ஸிஜன் இல்லாமையால் கொரோனா நோயாளிகள் பலர் இறப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொள்ளையடித்துச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்துக்கும் ஆக்ஸிஜன் தேவை இருக்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து தமிழக அரசுக்கே தெரியாமல் ஆக்ஸிஜன் வெளி மாநிலங்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்பட்டுள்ளதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Read MoreCategory: அரசியல்
அரசியல்
தேமுதிகவில் வேட்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி-அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் தலைமை
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின் எல்லா கட்சி தலைமையும் எத்தனை இடங்களில் வெற்றிபெறுவோம் என்கிற ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் தலைமை தேர்தல் செலவுக்கும், வாக்களர்களுக்கும் என கொடுத்த பணம் கடைகோடி வரை செல்லாதவாறு கரன்சிகளை கவனமாக பதுக்கியவர்களை களை எடுக்கபட்டியல் தயாரித்து வருகின்றனர் விஜயகாந்த் செயல்பட இயலாத குழலில் கட்சி தலைமையை கைப்பற்றிய பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் இருவரும் தமிழக அரசியல் அரங்கில் மாத்தி யோசித்து செயல்படுபவர்கள் என கூறுவார்கள் தமிழகம் முழுவதும் 60 தொகுதிகளில் அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக தனது வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு எதையும் திட்டமிட்டு செய்யவில்லை பிரேமலதா விஜயகாந்த் தான் போட்டியிட்டவிருதாசலம்தொகுதிக்குள் முடங்கிபோனார். எல்.கே.சுதீஷ் கொரானாவால் முடக்கப்பட்டார் வேறுவழியின்றி விஜயகாந்த் மௌனமாக கை உயர்த்தி முரசு சின்னத்திற்கு தமிழகம் முழுவதும் பிரயாணம் செய்துவாக்கு கேட்டார் அவரது மகன் விஜய்…
Read Moreஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இதில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு அலட்சியம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்து விடும் என கணிக்கிறார்கள் நிபுணர்கள். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. ரெம்டேஸீவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம். பெரிய பெரிய தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை. பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வருபவர்களிடம் மது, புகை போன்ற பழக்கம் இருக்கிறதா என்பது பற்றியோ,…
Read Moreசோனியா, பிரியங்காவை சந்திக்காத ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதுபற்றி இன்று (ஏப்ரல் 20) தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் ராகுல் காந்தி, “லேசான அறிகுறிகளை அனுபவித்த பிறகு, நான் சோதனை செய்துகொண்டதில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.. சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருமே, தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு வயது 50. “ராகுல் காந்தி கடந்த 12 நாட்களாகவே சோனியா காந்தியை சந்திக்கவில்லை. மேலும் கடந்த 5 நாட்களாக தனது சகோதரியான பிரியங்காவையும் சந்திக்கவில்லை. மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது வீட்டிலேயே இருந்து வருகிறார். தனக்கு உள்ளூர காய்ச்சல் போல இருந்ததால்தான், ராகுல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்காளத்தில் தான் செய்ய இருந்த பிரச்சாரப் பயணங்களை ரத்து செய்துவிட்டார்” என்கிறார்கள் ராகுலுக்கு…
Read Moreதேர்தல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை கமல் அடுக்கும் புகார்
ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு குறித்து திமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையான புகார்களை கூறி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி மர்ம கன்டெய்னர்கள், ஸ்ட்ராங் ரூம் அருகே வைஃபை வசதிகள் செய்யப்படுவது குறித்து திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. இந்த நிலையில் இந்த புகார்களை மக்கள் நீதி மய்யமும் முதல் முறையாக எழுப்பியிருக்கிறது. தேர்தல் முடிந்ததும் தனது வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், இன்று (ஏப்ரல் 20) தமிழகத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை சந்தித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தன் கவனத்திற்கு வந்த சில பிரச்சனைகள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பில்…
Read Moreதமிழக பாஜக தலைவர் மீது டெல்லிக்கு போன புகார்கள்
சட்டமன்றத் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்கான இடைவெளியில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் களத்தில் தங்களது நிர்வாகிகள் செயல்பட்ட விதம் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்கள். தலைமை ஆய்வு நடத்துவது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் கட்சி நிர்வாகிகளே தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகிறார்கள். இந்த வகையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனைப் பற்றி அக்கட்சியின் தேசிய தலைமைக்கு தமிழக நிர்வாகிகள் புகார்களை அனுப்பி வருகிறார்கள். “தமிழக பாஜக தனித்து நின்றால் 60 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது என்று தேர்தலுக்கு அதிரடியாக பேட்டியெல்லாம் கொடுத்தார் எல். முருகன். ஆனால் அமித்ஷா வந்து பேசிய பிறகும் கூட தமிழகத்தில் பாஜகவுக்கு 20 தொகுதிகளைத்தான் அதிமுக கொடுத்தது. தேர்தலையும் சந்தித்து முடித்துவிட்ட நிலையில், தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் டெல்லி தலைமைக்கு சரமாரியான புகார்களை அனுப்பியுள்ளனர். ’எல்.முருகன் தனக்காக…
Read Moreதேர்தல் முடிவில் முதல்வருடன் முரண்படும் அமைச்சர் தங்கமணி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஏப்ரல் 19) குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது ஏற்கனவே மருத்துவர்களின் ஆலோசனையோடு திட்டமிடப்பட்ட ஒன்று என்கிறார்கள் முதல்வர் வட்டாரங்களில். இதற்கிடையே தேர்தலுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தரப்பினரிடமும் பேசி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தரவுகளையும் கள அனுபவம் மூலம் கிடைக்கும் தகவல்களையும் பெற்று வந்தார். முதல்வரின் தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டுவரும் சுனில், “அதிமுக கூட்டணி 85-90 இடங்களில் வெற்றிபெறுவது உறுதி. மேலும் ஒரு 27 தொகுதிகளில் கடுமையான இழுபறி நிலவுகிறது. அதிலும் அதிமுகவுக்கே அதிக தொகுதிகள் கிடைக்கும்” என்று முதல்வரிடம் ஒரு ரிப்போர்ட் அளித்திருந்ததாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இதற்கிடையே முன்னாள் உளவுத்துறை ஐஜியும், முதல்வருக்கு நெருக்கமானவருமான சத்தியமூர்த்தி தனி…
Read Moreமன்மோகன்சிங்குக்கும் கொரானா
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், டெல்லியில் இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து நேற்று (ஏப்ரல் 19) அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க, தடுப்பூசி நிறுவனங்களுடன் பேசுதல், உற்பத்தியை அதிகரிக்க போதுமான நிதியுதவியை வழங்குதல், மத்திய அரசு அவசர தேவைக்கான 10 சதவிகிதத் தடுப்பூசியை வைத்துக் கொண்டு மீதி 90 சதவிகிதம் தடுப்பூசிகளை மாநிலங்களே கையாள வேண்டுமென்றும் வற்புறுத்தியிருந்தார். இதற்குப் பதிலளித்து நேற்று (ஏப்ரல் 19) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். “இந்தக் கடிதம் உங்களை பூரண உடல்நலத்தோடு…
Read Moreவாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு பலப்படுத்த மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அரசியல் கட்சியினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங்க் ரூம்களை ஊடுருவ முயற்சி நடப்பதாகவும், அதனை நிறுத்தக் கோரியும் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரிடம் அந்த கடிதத்தை கொடுத்திருக்கின்றனர். அக்கடிதத்தின் முழு விவரம்… “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு 6.4.2021 அன்று நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடியிலும் உள்ள கன்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ் ஆகியவை “சுவிட்ச் ஆஃப்” (பேட்டரிகளை எடுக்காமல்- செயலற்ற வடிவில்…
Read Moreசீமானின் நாம் தமிழர் கட்சி எதிர்காலம்?
முத்துவேலர் கருணாநிதியை ஈன்றெடுத்த திருக்குவளைக்குப் பக்கத்து ஊர் அந்த 23 வயது இளைஞனுக்கு. பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞன், விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது, திருவாரூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்துக்குப் போய்விட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த விபத்து நடந்தது. தலையில் பலத்த அடி. நினைவு போய் விட்டது. கை, கால்கள் எல்லாவற்றிலும் பலத்த காயம். கிட்டத்தட்ட கோமா நிலை. கடுமையான வறுமைக்கு உள்ளான குடும்பத்திலிருந்து தலையெடுத்து வந்த தலைமகன். தங்கைக்குத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு, தாய், தந்தைக்காக சின்னதாக ஒரு வீடும் கட்டிவிட்டு, பேருவகையோடு தன் இதயத்தை வென்ற தலைவனின் தன்னிகரற்ற பேச்சைக் கேட்டுவிட்டுத் திரும்பும்போதுதான் அந்த விபத்து. தஞ்சையில் சிகிச்சைக்குச் சேர்த்து, வீட்டை விற்று, சேமிப்பையெல்லாம் கரைத்து, தன் மகனைக் காப்பாற்ற அந்த தாயும் தந்தையும் போராடினர்.…
Read More