ஓய்வு எடுக்ககொடைக்கானல் சென்றார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மாப்பிள்ளை சபரீசன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இன்று (ஏப்ரல் 16) நான்குநாள் பயணமாக கொடைக்கானல் சென்றனர்.தேர்தல் பணிகளுக்குப் பிறகு சிறிது ஓய்வெடுத்துக் கொள்ள நினைத்த ஸ்டாலின், வெளிநாட்டுப் பயண திட்டங்களைத் தவிர்த்து தான் ஏற்கனவே வந்து சென்ற கொடைக்கானலையே மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் பிற்பகல் 12.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு கொடைக்கானல் தாம்ரா ஹோட்டலுக்கு 3.30க்கு சென்று சேர்ந்தனர் ஸ்டாலினும், குடும்பத்தினரும்.கொரோனா பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பயணம் காரணமாக எந்த இடத்திலும் கட்சியினர் வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டார் ஸ்டாலின். எனவே வழக்கமான வரவேற்பு…

Read More

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருப்பவர் நடிகர் விவேக். நடிப்பு மட்டுமின்றி சமூக விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். கொரோனா பரவும் சூழலில் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வில் ஈடுபட்டார்.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்குத் தயக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், நேற்று, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா தடுப்பூசி குறித்து பலவித வதந்திகள் பொதுமக்களிடையே உலா வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. பாதுகாப்பு உண்டு. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனா வராது…

Read More

’99 சாங்ஸ்’ சினிமா விமர்சனம்

இந்தியில் ஒரு ஆங்கிலப் படம் என்று சொல்லும்படியான மேக்கிங்கில் ஒரு படம்! முழுக்க முழுக்க இசையை அடிப்படையாக வைத்து காதல் உணர்வைக் கலந்துகட்டிய கதை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதாசிரியராக களமிறங்கிய முதல் படைப்பு. இந்தியில் உருவாகி தமிழில் மொழிமாற்றமாகி ரிலிஸாகியிருக்கிறது! கதை… தனது மகன் இசை மீது அதீத ஆர்வமாக இருக்கிறான். அந்த ஆர்வத்திற்கு தந்தை தடைபோடுகிறார். அதற்கு காரணம் இல்லாமலில்லை. தந்தையின் தடையை மீறி இசை கற்றுக் கொள்கிற அந்த மகனுக்கு ஒரு காதலி. காதலியின் தந்தை கோடிகளில் புரள்பவர். அவர் தனது மகளை கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும்படியான பாடலை உருவாக்கு என்கிறார். காதலியின் தந்தை சொன்னதை சவாலாக ஏற்று அந்த பாடலை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறான். அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறான். அவற்றையெல்லாம் எப்படி…

Read More

‘மதில்’ சினிமா விமர்சனம்

உரிமைக்காக குரல் கொடுத்து, அது கிடைக்காமல் போகும்போது போராட்டத்தைக் கையிலெடுப்பவனுக்கு நேர்கிற கஷ்ட நஷ்டங்களை மையப்படுத்தி எக்கச்சக்க படங்கள் வந்தாயிற்று. அந்த வரிசையில் இன்னொரு படம்… படத்தின் நாயகன் எந்த உரிமைக்காக போராடுகிறான் என்பதுதான் ‘மதில்’ படத்தின் தனித்துவம். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொடாத சப்ஜெக்ட்! இந்த படம் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நேரடியாக, ‘ஜி 5’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சிறுவயதிலிருந்தே சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் கடுமையாக உழைத்து, பணம் சேர்த்து தனது 58-வது வயதில் தனது விருப்படி வீட்டைக் கட்டி முடிக்கிறார் படத்தின் ஹீரோவான கே.எஸ். ரவிக்குமார். புதுமனை புகுவிழா நடந்த சில நாட்களிலேயே அவர் வீட்டு சுவற்றில் அந்த பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரபலத்தின் படம் வரையப்பட்டு பிரசார வாசகங்கள் எழுதப்படுகிறது. அதைக் கண்டு…

Read More

சீமானின் நாம் தமிழர் கட்சி எதிர்காலம்?

முத்துவேலர் கருணாநிதியை ஈன்றெடுத்த திருக்குவளைக்குப் பக்கத்து ஊர் அந்த 23 வயது இளைஞனுக்கு. பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞன், விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது, திருவாரூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்துக்குப் போய்விட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த விபத்து நடந்தது. தலையில் பலத்த அடி. நினைவு போய் விட்டது. கை, கால்கள் எல்லாவற்றிலும் பலத்த காயம். கிட்டத்தட்ட கோமா நிலை. கடுமையான வறுமைக்கு உள்ளான குடும்பத்திலிருந்து தலையெடுத்து வந்த தலைமகன். தங்கைக்குத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு, தாய், தந்தைக்காக சின்னதாக ஒரு வீடும் கட்டிவிட்டு, பேருவகையோடு தன் இதயத்தை வென்ற தலைவனின் தன்னிகரற்ற பேச்சைக் கேட்டுவிட்டுத் திரும்பும்போதுதான் அந்த விபத்து. தஞ்சையில் சிகிச்சைக்குச் சேர்த்து, வீட்டை விற்று, சேமிப்பையெல்லாம் கரைத்து, தன் மகனைக் காப்பாற்ற அந்த தாயும் தந்தையும் போராடினர்.…

Read More

மேற்குவங்க முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தேர்தல்ஆணையம்தடைவிதித்துள்ளது.மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. இன்னும் நான்கு கட்ட வாக்குப்பதிவுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா என மூத்த தலைவர்கள் வங்கத்தில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடந்த பிரச்சாரத்தின்போது முதல்வர் மம்தா பானர்ஜி விதிகளை மீறி பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியதாகவும், முஸ்லிம் வாக்குகள் குறித்து விமர்சித்ததாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.தேர்தல் ஆணையத்தில் பாஜக தரப்பினர் புகார் அளித்திருந்த நிலையில்,…

Read More

பதட்டத்தில் கர்ணன் திரையிட்ட திரையரங்குகள்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார், விக்ரம்,சூர்யா, தனுஷ் ஆகியோர் நடித்த படங்கள் திரைக்கு வருகிறபோது தியேட்டர்களில் ஒருநாளுக்குரிய மொத்த காட்சிக்கான டிக்கட்டுகளை கூடுதல் விலை கொடுத்து ரசிகர் மன்றங்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வழக்கம் குறிப்பாக தென்மாவட்டங்களில் இதனை எல்லா ரசிகர்மன்ற தலைவர்களும் தொழிலாகவே செய்து வருகின்றனர் வசதிபடைத்த, கடன் வாங்கும் தகுதி படைத்த ரசிகர்மன்ற தலைவர்கள் குறிப்பிட்ட ஊர்களில் உள்ள தியேட்டர்களில் அவர்களே மினிமம் கேரண்டி அடிப்படையில் விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து படங்களை வாடகைக்கு திரையிடுவது உண்டு கர்ணன் படத்தின் முதல் மூன்று நாட்களுக்கான காட்சிகளுக்கான டிக்கட்டுகளைபல ஊர்களில் ரசிகர்மன்றத்தின் சார்பில்  மொத்தமாக வாங்கியுள்ளனர் அதுபோன்ற நடைமுறைகளை அனுமதிக்க வேண்டாம் இயல்பாக தியேட்டருக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் வந்தால் போதும் என தயாரிப்பு தரப்பு கறாராக கூறியுள்ளதாம் இதற்கு காரணம்…

Read More

திரெளபதி பாணியில் சமூகம் கொண்டாடும் கர்ணன்

தமிழகம் முழுவதும் கர்ணன் திரையரங்குகளில் கொரானா பரவலை பற்றிய பயமின்றி இளைஞர்கள் கூடி கல்லாவை நிரப்பி வருகின்றனர் படம் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் அதேபோன்று படத்தை பாராட்டி விமர்சனங்கள் சம அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது அசுரன் படம் வணிகரீதியாக வெற்றிபெற்ற பின்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை கர்ணன் இந்த இரண்டு படங்களை காட்டிலும் அதிகபட்ச வசூலை குவித்து வருகின்றது சாதிக்கு ஆதரவான படம் கர்ணன் என்கிற குற்றசாட்டு,விவாதம் முதல் நாளே சமூக வலைதளங்களில் தொடங்கியது இதனை முறியடிக்கவும் சாதி உரிமை பேசும் படமாக கர்ணன்அடையாளப்படுத்தபட்டு விடக்கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சினிமா, அரசியல், பொதுவானவர்கள் என அனைத்து தரப்பு VIP க்களிடமும் படம் பற்றி பாசிட்டுவான விமர்சனங்களை பதிவு செய்யுமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் வைத்திருக்கிறார் ஆனால்களநிலவரம்…

Read More

கதை எழுதியதும் – தயாரிப்பாளரான அனுபவமும்-ஏ. ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதன்முறையாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “99 சாங்ஸ்”.இப்படம் ஏப்ரல் 16 இல் தமிழ் தெலுங்கு இந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்துக்கான கதை எழுதியது எப்படி? தயாரிப்பாளரானது எப்படி? என்பவை உட்பட படத்தைப் பற்றிய பல அனுபங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஏ.ஆர்.ரகுமான். 1. 99 சாங்ஸ் படம் பற்றி…? பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸ்-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட் மற்றும் ராகுல் ராம் போன்ற இசை…

Read More

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமாவதை உறுதிப்படுத்திய கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்திய சினிமா உலகம் எதிர்பார்க்கும் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். கொரானா தொற்று அச்சத்தால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஐதராபாத்தில் பிரமாண்டஅரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது என்று அறிவிக்கப்படவில்லை இந்நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியான’சுல்தான்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் கார்த்தி – ராஷ்மிகா இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள். அப்போது ‘பொன்னியின் செல்வன்’ குறித்த கார்த்தியிடம் கேட்கப்பட்டது.அதற்கு, எனது அடுத்த…

Read More