மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’. நம் மக்களின் வாழ்வியலை படம்பிடிக்கும் அருமையான காவியமாக, அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திங்கட்கிழமை அன்று சென்னை கலைஞர் அரங்கத்தில், படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்கள், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ‘வங்காள விரிகுடா…
Read Moreப்ளாக்பஸ்டர் “பிரேமலு”, ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்!!
தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான “பிரேமலு” ஏப்ரல் 12, 2024 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. மேலும் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. கிரிஷ் A D இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதராபாத்தில் அவன், ஐடி துறையில்…
Read Moreஇவி கணேஷ் பாபுவின் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம்
இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு குறும்படங்களை உருவாக்கி வருகிறது . அந்த வரிசையில் பார்வையற்றவர்களுக்காக இவி.கணேஷ்பாபு எழுதி,இயக்கி, நடித்த குறும்படம் அனைவரையும் ஈர்த்துள்ளது. இது பற்றி திரைப்பட இயக்குனர், இவி.கணேஷ்பாபு கூறியதாவது, பார்வையற்றவர்களுக்கான இந்த குறும்படத்தில் பார்வையற்ற ஒரு பெண்மணியே என்னோடு இதில் நடித்திருக்கிறார். மேலும் பிரத்தியேகமாக திருநங்கைகளுக்கான வாக்குரிமை மற்றும் காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்காக சைகை மொழியில் உருவாக்கிய குறும்படங்களை தேர்தல் விழிப்புணர்வுக்காக நான் இயக்கியதில் பெருமை அடைகிறேன் என்றார். செழியன் குமாரசாமி தயாரிப்பில், ராஜராஜன் ஒலிப்பதிவில், சுராஜ்கவி படத்தொகுப்பில் இந்தக் குறும்படங்கள் உருவாகி இருக்கிறது
Read Moreதெலுங்கு வருடப் பிறப்பில் ZEE 5 திரையில் வெளியாகும் “காமி”
உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டமாக, ஏப்ரல் 12 முதல், நடிகர் விஸ்வக் சென்னின் “காமி” திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில், ZEE5 இல் திரையிடப்படுகிறது! ~ வித்யாதர் ககிதா இயக்கியுள்ள, காமி திரைப்படத்தில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் ~ சென்னை, 3 ஏப்ரல் 2024: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தெலுங்கு பிளாக்பஸ்டர் ‘காமி’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, இந்த தெலுங்குப் படம் ஏப்ரல் 12 முதல், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ZEE5 இல் பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளது. கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வி செல்லுலாய்டு வழங்க, அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதா…
Read Moreபுஷ்பா 2 தி ரூல் டீசருடன் அல்லு அர்ஜூனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான ‘புஷ்பா2: தி ரூல்’ டீசர், இணையம் முழுவதும் ஆகிரமித்து இருக்கிறது! ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசரை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான உடனேயே இணையத்தை ஆக்கிரமித்ததோடு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டீசரை சிலாகித்து அல்லு அர்ஜூனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். பிரம்மாண்டம், வண்ணங்கள் மற்றும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள காட்சிகள் அனைத்தும் டீசரில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருக் காட்சியிலும் புஷ்பா ராஜ் நம்பமுடியாத, அதே சமயம் சக்தி வாய்ந்த அவதாரத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் தீவிரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதற்கு இன்னும் வலுசேர்க்கும் விதமாக தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை நம் இதயத்துடிப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது.…
Read Moreஇயக்குநர் ஹரியின் “குட்லக் ஸ்டுடியோஸில் புதிதாக துவங்கப்பட்ட 5.1 மிக்ஸிங்
கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட குட்லக் ஸ்டுடியோஸை கடந்த வருடம் தொடங்கினார். கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 5.1 மிக்ஸிங் மற்றும் டப்பிங் வசதி கொண்ட புதிய ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி தொடங்கினார். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் திரையுலகத்திற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்று கூறிய இயக்குநர் ஹரி, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும்…
Read More”பார்த்திபன் சார் பல புதிய பாதைகளை போட்டுக்கொண்டே செல்கிறார்.” – இயக்குநர் பேரரசு
உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘டீன்ஸ்’ படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.…
Read Moreஹாட் ஸ்பாட் வெற்றியைத் தொடர்ந்து “ஹாட் ஸ்பாட் – 2” அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. எடிட்டர் முத்தையா பேசியதாவது… அப்பா அம்மா நண்பர்களுக்கு நன்றி. அடியே படத்திற்கு முன்பே கிடைத்த வாய்ப்பு இது. இந்தப்படத்திற்காக நிறையச் சண்டை போட்டிருக்கிறோம் ஆனால் படம் நன்றாக வந்தது. சோஷியல் அவேர்னஸ் உள்ள படம். நல்ல வரவேற்பு தந்ததற்கு நன்றி. தொடர்ந்து இது போல் நல்ல படம் செய்ய முயற்சிக்கிறோம். நன்றி. இசையமைப்பாளர் வான் பேசியதாவது.. விக்னேஷ் கார்த்தி அண்ணாவிற்கு முதல் நன்றி. ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்து என்னால் இது முடியும்…
Read Moreகல்கி 2898 AD’ திரைப்படத்தின் எதிர்பார்ப்புமிக்க அடுத்த அப்டேட்
பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பார்வையாளர்களை காலத்தின் மீது ஒரு பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும். இப்படத்தின் மீது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த பிரமாண்ட படைப்பிலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ‘கல்கி 2898 AD’ உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அறிமுகப்படுத்தும் வகையில், இப்படத்தின் அனிமேஷன் அறிமுக வீடியோ OTT இல் திரையிடப்பட உள்ளது, இந்த வீடியோவிற்கு நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ளார். பொழுதுபோக்கு செய்தி நிறுவனமான பிங்க்வில்லா தளத்தில் கூறியுள்ள தகவலின்…
Read Moreபுஷ்பா தி ரூல்-லிருந்து வெளியான ராஷ்மிகாவின் அழகான போஸ்டர்
நடிகர் அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இப்போது மீண்டும் புஷ்பாவாக அவர் நடித்திருக்கும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது. சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்த புகழ்பெற்ற பான்-இந்தியா திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது. இன்று ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளையொட்டி, படத்தில் இருந்து அவரின் அழகான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் முதல் பாகத்தின் மூலம் முத்திரை பதித்த ஸ்ரீவள்ளி மீண்டும் இந்தப் பாகத்திலும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் இன்னும்…
Read More