கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 16, 2026) சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைபிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம்…
Read More‘கிகி & கொகொ’ படத்தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர்!
குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்’. குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. கலர் பென்சில் நிறுவனர், நாராயணன் இந்த நிகழ்வில் பேசியதாவது, ”குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது ஒரு கலை. ஆனால், இந்த காலத்தில் அதை திணித்து வருகிறார்கள். இப்போதெல்லாம், குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்பதே பலருக்கும் பிடிக்காத விஷயமாக இருக்கிறது. அதை மாற்றும் விதமாகதான் ‘Joy of Y’ என்பதை கலர் பென்சிலில் உருவாக்கியுள்ளோம். இதனால், குழந்தைகளின் அடிப்படை அறிவு வலுவாக இருக்கும். அதைத்தான் நாங்கள் உத்திரவாதம் தருகிறோமே தவிர இங்கு படிப்பதால் குழந்தைகள் ஐஐடி போய்விடுவார்கள், நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என்பது கிடையாது” என்றார். கலர் பென்சில் தலைமை செயல் அதிகாரி,…
Read More*இயக்குநர் மணி ரத்னம் பாராட்டிய பிஜாய் நம்பியாரின் ‘து யா மெயின்’ திரைப்படம்!*
ஷனாயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கௌரவ் நடித்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படமான ‘து யா மெயின்’ சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பரபரப்பான மற்றும் அதன் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் காரணமாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தென்னிந்தியாவில் நடைபெற்ற இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் மணி ரத்னம் படத்தை பாராட்டினார். படத்தின் சிறப்பு திரையிடலுக்கு பின்பு ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் படத்தைப் பாராட்டிய காணொளிகளை பார்க்க முடிகிறது. சிலர் இதை அற்புதமான படம் எனவும், இன்னும் சிலர் படம் புதிய அனுபவத்தை கொடுத்தது எனவும் புகழ்ந்தனர். குறிப்பாக, படத்தின் பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றன. படம் பார்த்துவிட்டு இயக்குநர் மணி ரத்னம்…
Read Moreரியல் ஹீரோவான ஹரிஷ் கல்யாண்.. புற்று நோயிலிருந்து பல உயிரை காக்க கொடுத்த பரிசு!
கல்பவிருட்சம் டிரஸ்ட் மற்றும் பிரிவாரம் கேன்சர் ஹாஸ்பிடலுக்கு மார்பக புற்றுநோயை முன் கூட்டியை கண்டறியக்கூடிய கருவியை இலவசமாக வழங்கினர் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்… இந்த நிகழ்வு பிரிவாரம் கேன்சர் ஹாஸ்பிடல் இன்று காலை நடைபெற்றது. இதில் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை வரவேற்று டாக்டர் பானுப்ரியா பேசினார் அப்போது கேன்சரின் ஆபத்தை பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். அவர் தங்களது கற்பவிருட்சம் தொண்டு நிறுவனத்தின் மூலம் 3000 மேற்பட்ட மக்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்தபோது சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு கேன்சர் நோய் ஆரம்ப நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது . எனவே இது போல் தமிழகம் எங்கும் நாங்கள் எங்கள் சேவை தொடங்க உதவியாக இந்த கருவியை வழங்கிய ஹரிஷ் கல்யாண் மற்றும் ரோட்டரி கிளப்க்கு நன்றியை…
Read Moreசிறப்பாக நடைபெற்ற தலை நிமிர் திரை விருதுகள் 2026!!
தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. திரையுலகின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களும், எதிர்கால நம்பிக்கையான இளம் கலைஞர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில், பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு அவர்கள், நடிகர் கதிரவன், நடிகை ஸ்ருதி நாராயணன், நடிகை தியா, நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். பல்வேறு திரைப்படப் பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இவ்விழாவில் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விருது விழா சிவானி ஸ்டூடியோ சார்பில், செந்தில் மற்றும் டைகர் சக்கரவர்த்தி,டைகர் முத்து ஆகியோரின் ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மேலும், இவ்விழாவில் முதன்மை விருந்தினர்களாக மூத்த இந்திய…
Read MoreThat Day I Did Not Brush — குழந்தையின் நிர்ப்பாவமான பார்வையில் சொல்லப்படும் துயரத்தின் ஒரு மென்மையான படம்.
அன்பும் நுட்பமும் கலந்த இந்த படம், ஒரு சிறுவன் இல்லாமையை எப்படி புரிந்து கொள்கிறான் என்பதை பெரிய சோக வெளிப்பாடுகளால் அல்ல… சிறிய தருணங்கள், அமைதியான கவனிப்புகள், மற்றும் அவன் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மெதுவான மாற்றங்கள் வழியாக சொல்லுகிறது. இழப்பை நெருக்கமாகவும் மென்மையாகவும் பார்க்கும் இந்த படம், எவ்வளவு சாதாரணமான பழக்கங்களுக்குள்ளும் ஆழமான உணர்வுகள் மறைந்து கிடக்கலாம் என்பதை நினைவூட்டுகிறது. மிக குறைந்த கதை சொல்லலும் அமைதியான காட்சித் தேர்வுகளும் மூலம், நாம் தினமும் கவனிக்காமல் கடந்து செல்லும் விஷயங்களை — தயக்கம், அமைதி, மனத்தின் நுண்ணிய அலைச்சல்கள் — ஒரு நிமிடம் நின்று கவனிக்க இந்த படம் அழைக்கிறது. இந்த குறும்படம் Haiku Kadhaigal தொடரின் ஒரு பகுதி. எழுத்தாளர்-இயக்குநர் பிரியதர்ஷினி ஸ்ரீதரன் அவர்கள் Huggaheim Pictures மூலம் மனிதர்களின் நெருக்கமான உணர்வுகளை ஆராயும்…
Read Moreகுஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!
அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது இறுதிக்கட்ட பின்தயாரிப்பு பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. காதல், கற்பனை மற்றும் அடையாளம் குறித்த சமகால சிந்தனைகளை உள்ளடக்கிய ‘டபுள் ஆக்குபன்சி’, தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான மோதல், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் உள்ள வலிமிகுந்த அழகு ஆகியவற்றை மையமாக வைத்து இந்த மாயாஜால யதார்த்தக் கதை பின்னப்பட்டுள்ளது. நட்சத்திர பட்டாளம்: ‘பொன்னியின்…
Read Moreராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் கமல்ஹாசன் வழங்கும் சிவகார்த்திகேயனின் “சேயோன்”
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் “சேயோன்”. துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாக மலரவிருக்கிறது. நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ரசிக்கும்படியான ஒரு முழுமையான ‘கமர்ஷியல் எண்டர்டெயினராக’, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய குடும்பக் கொண்டாட்டமாக “சேயோன்” அமையும். அனைத்து தரப்பின் பாராட்டுதலோடு, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்துடன் இணைவது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அனுபவமும் இளமையும் கைகோர்க்கும் இந்த வெற்றிக் கூட்டணி மாநில மொழி எல்லைகளைக் கடந்து…
Read MoreMoonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது. ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல்…
Read Moreயுனெஸ்கோ தலைமையிலான உலகளாவிய ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டு வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், ஐ.நா. ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜி.சி.இ. (Global Conference on Education for a Sustainable Future (GCE 2026) மாநாட்டில், உரையாற்ற காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி (Common Ground International Academy) பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவி ரூஹி மொஹசப் முக்கிய உரையாளராக (Keynote Speaker) அழைக்கப்பட்டிருந்தார். அங்கு ரூஹிக்கு பூடான் நாட்டின் கல்வியமைச்சர் திரு. யீசாங் டீ தாப்பா SDG Impact Award – விருதை வழங்கி கௌரவித்தார். இந்த சர்வதேச மாநாடு யுனெஸ்கோ இளைஞர் கல்வி ஆராய்ச்சி மையம் (UNESCO Youth Education Research Center) தலைமையில், பாங்காக்கில் உள்ள ஐ.நா மாநாட்டு மையத்தில் ( United Nations Conference Centre, Bangkok) நடைபெற்றது. மேலும், ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில்…
Read More