இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான IFFI-யின் இந்தியன் பனோரமா பிரிவில் இடம்பெற்றிருப்பது, தமிழ் சினிமாவுக்கும், ‘தாய்க்கிழவி’ திரைப்படத்திற்கும், அதன் தயாரிப்பு நிறுவனமான SK Productions-க்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகும். இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் படக்குழுவினர் பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர். ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ‘தாய்க்கிழவி’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, வயதான பெண்ணின் வாழ்க்கை, குடும்ப உறவுகள், சமூகத்தின் பார்வை, பெண்களின் சுயமரியாதை எனப் பல்வேறு அம்சங்களை நகைச்சுவையும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் கலந்து சொல்லியிருந்த இப்படம், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. உலகளவில் 90 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்ற இப்படம், 2026-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களில் ஒன்றாகவும் இடம்பிடித்தது. இப்படத்தில் பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்த ராதிகா…
Read Moreகனவு வெட்டிங் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை பவித்ரா லட்சுமி அறிவிப்பு!
சென்னையில், சொகுசுத் திருமண அனுபவத்தை வழங்கும் முன்னணி நிறுவனமான ‘கனவு வெட்டிங்’ பிராண்ட், டிசம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள RK கன்வென்ஷன் சென்டரில் மூன்று நாள் பிரம்மாண்ட திருமணக் கண்காட்சியை நடத்தவுள்ளது. ஒவ்வொரு கொண்டாட்டமும் மறக்க முடியாத ஓர் அனுபவமாக அமைய வேண்டும். இந்த நோக்கத்துடன், தமிழில் ‘கனவு’ என்ற அழகான அர்த்தத்தைக் கொண்ட ‘கனவு வெட்டிங்’ என்ற சொகுசுத் திருமண அனுபவத்தை வழங்கும் பிராண்டின் அதிகாரப்பூர்வ லோகோ, சென்னையில் உள்ள ஹோட்டல் அக்கார்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லோகோவை நடிகர் கணேஷ் வெங்கட்ராம், பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், டாக்டர் சாம் பால், நடிகை பவித்ரா லட்சுமி மற்றும் உபாசனா உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊடகத்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த…
Read More‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘புரொடக்ஷன் நம்பர் 01’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்கிறார். திவிஜா பிரபாகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வாலி மோகன் தாஸ் தயாரித்து இயக்குகிறார். படத்தின் எழுத்துப் பணிகளை வாலி மோகன் தாஸ் மற்றும் உமர் எஸ். இணைந்து மேற்கொண்டுள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஒளிப்பதிவுப் பணிகளை ஆர்தர் ஏ. வில்சன் கவனிக்கிறார். இந்தியா ஃபிலிம் கம்பெனி, ஸ்ரீ சுமனோஹரா புரொடக்ஷன்ஸ் மற்றும் கிராட்டிட்யூட் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இயக்குநர் வாலி மோகன் தாஸ், கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ரங்கோலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள நடிகர்…
Read Moreஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘கிளிக்’
ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts) நிறுவனம் சார்பில் ராஜாபிரபு தயாரித்து, சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில், ஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘கிளிக்’ எனும் யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டைனர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தைத் தயாரிப்பதுடன் ராஜாபிரபுவே கதாநாயகனாகவும் நடிக்கிறார். துள்ளலான இளமை, சஸ்பென்ஸ் மற்றும் சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு புதுமையான கதையாக, இன்றைய தலைமுறையினருடன் எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஜென் சி (Gen-Z) கதைக்களத்துடனும், விறுவிறுப்பான திரைக்கதையுடனும் உருவாகும் ‘கிளிக்’, உறவுகளின் உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளின் எதிர்பாராத திருப்புமுனைகளை அழகாக வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கலகலப்பான திரை அனுபவத்தை வழங்க உள்ளது. *நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்* ஓவியா, ராஜாபிரபு, சுந்தர் மஹாஸ்ரீ , அஸ்மிதா, அமுதவாணன், ‘லொள்ளு சபா’…
Read More‘யானைமரம்’ திரைப்பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவரும், இயக்குநருமான சேரன், ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘யானைமரம்’ படத்தின் டிரைலரை பார்த்து, பாராட்டியது மட்டுமல்லாமல், ‘யானைமரம்’ படத்தின் போஸ்டரையும் வெளியிட்டார். உரிமைக்காக போராடும் சிறுவனின் முயற்சி கண்கலங்க வைக்கும். பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டிய படம் ‘யானை மரம்’. படத்தின் இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் ஆர்.சசிகலா இருவரையும் பாராட்டினார் சேரன். மாஸ்டர் அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், ஜெயிலர் சீனு, ராணி, மஞ்சு, லீலா ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இசை அரவிந்த் சித்தார்தா, கலை ஆர்.அபிராம், படத்தொகுப்பு கோபால், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். ஓப்பன் விண்டோ பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சசிகலா தயாரித்துள்ளார். விரைவில் திரைக்கு வருகிறது ‘யானை மரம்’.
Read Moreஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்! – ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்களுடன் இணைந்து தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்புப் பட்டியலை விரிவுபடுத்தும் பனோரமா ஸ்டுடியோஸ்!
ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா ஸ்டுடியோஸ் ( Panorama Studios ) தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ ( KOODU ) – விரைவில் திரைக்கு வருகிறது! குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையில் இயங்கி வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் சார்பில் M. கணேஷ் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் சூனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷி ஆகியோர் இணைந்து தனது புதிய தமிழ்த் திரைப்படமான ‘கூடு’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு வியப்பூட்டும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், மனிதநேயம், கருணை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட நெகிழ்ச்சியான கதையைச் சொல்ல வருகிறது. அறிமுக இயக்குநர்…
Read Moreடைட்டானிக் – விமர்சனம்…
கதை… கலையரசன் – காளி வெங்கட் – ராகவ் விஜய் மூவரும் ஒரே ரயிலில் பயணிக்கிறார்கள்.. இவர்கள் மூவருக்கும் குடும்பத்தில் பிரச்சனை.. ஒருவர் திருமணத்திற்காக பயணிக்கிறார்.. ஒருவர் பிரிந்து சென்ற மனைவியின் வீட்டுக்கு செல்கிறார் ஒருவர் விலகிச் சென்ற காதலியை தேடிச் செல்கிறார்.. ஏதோ ஒரு காரணத்தினால் இவர்கள் மூவரின் காதல் கதையும் பிரச்சனையில் இருக்கிறது.. டைட்டானிக் கப்பல் போல காதல் மூழ்கி கிடக்கிறது.. அதன் பிறகு என்ன ஆனது.? இவர்கள் காதலில் வென்றார்களா என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… ஒரே ரயிலில் பயணித்து காதல் கதையால் நண்பர்கள் ஆகிறார்கள் கலையரசன் – காளி வெங்கட் – ராகவ் விஜய்.. ஒவ்வொருவரும் அவரவர் காதல் கதையில் அதை சொல்லும் விதத்தில் நடிப்பில் கவர்கிறார்கள்.. தனது அப்பாவித்தனமான நடிப்பில் கவர்கிறார் கயல் ஆனந்தி.. பள்ளி கல்லூரி என இரண்டிலும்…
Read Moreகோந்தல் – விமர்சனம்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் திருமண சடங்குகளில் ஒன்றாகும் இந்த கோந்தல்.. கதை… ஹீரோயின் இஷிதா தேஷ்முக்.. இவருக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் சடங்குகள் ஏற்பாடுகள் நடக்கிறது.. இந்த சூழ்நிலையில் இவரின் மேல் ஆசைப்படுகிறார் ஊர் தலைவரின் மகன்.. இவளை அடைய நினைக்கிறார்.. அதே சமயத்தில் விருப்பமில்லாத திருமணத்தை விட்டு தன் காதலருடன் ஓடத் தயாராக நிற்கிறார் இஷிதா ள்.. இந்த சூழ்நிலையில் எதையும் அறியாத ஒரு அப்பாவி இளைஞன் இஷிதாவுக்கு தாலி கட்ட காத்திருக்கிறார்.. இப்படியான சூழ்நிலையில் அடுத்தது என்ன நடந்தது.? நாயகி நிலை என்ன என்பதை சுவாரசியமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் தேவகர்.. நடிகர்கள்… கதை நாயகனாக யோகேஷ் சோஹோனி.. உதவி செய்யும் மனப்பான்மை இரக்க குணம் அப்பாவி நடிப்பு என கவர்ந்து விடுகிறார்.. தன் மனைவி மீது சிலர் ஆசைப்படுகிறார்கள் என்பதை…
Read Moreபீப்பிள்’ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் இணைந்து காலத்தால் அழியாத இசைக் காவியமான ‘சங்கராபரணம்’ திரைப்படத்தை அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியிடுகின்றனர்
இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இசைக் காவியங்களில் ஒன்றான ‘சங்கராபரணம்’ திரைப்படம், அதிநவீன தொழில்நுட்பத்தில் மெருகூட்டப்பட்டு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இம்மாதம் மீண்டும் வெளியாகிறது. பீப்பிள்’ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மேம்படுத்தப்பட்ட 4கே அல்ட்ரா ஹெச்.டி காட்சித் தரம் மற்றும் 7.1 சரவுண்ட் ஒலி அமைப்புடன் புதுப்பொலிவுடன் வெளியிடுகின்றனர். இத்திரைப்படத்தின் புதிய டிஜிட்டல் பதிப்பை ஸ்ரீலால் தேவராஜ் உருவாக்கியுள்ளார். கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1980ம் ஆண்டு வெளியான ‘சங்கராபரணம்’, இந்தியப் பாரம்பரிய இசையின் மேன்மையையும், ஒரு கலைஞனின் வாழ்வையும், மனித உறவுகளின் ஆழத்தையும் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்த திரைப்படமாகும். ஜே.வி. சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜ்யலட்சுமி, துளசி, சந்திரமோகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல தசாப்தங்களைக் கடந்தும் இசை ரசிகர்களின் மனங்களில் நீங்கா…
Read Moreகண்ணன் ரவி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!
கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வித்தியாசமான உருவாக்கத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கண்ணன் ரவி குழுமம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருவதுடன், புதிய திறமையாளர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறது. அந்த வகையில், அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். டைட்டில் போஸ்டரில், ரத்தம் தேய்ந்த வேல்கம்பு, அதைச் சுற்றியுள்ள சிவப்பு நிறத் துணிகள் மற்றும்…
Read More