இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து வலுவான கதாபாத்திர காட்சிகளை வெளியிட்டார் விஜய் சேதுபதி!! விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடக்கத்திலிருந்தே அதிரடியான தலைப்பாலும், மர்மமூட்டும் கதைச்சூழலாலும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தத் திரைப்படம், தற்போது தனது புதிய அப்டேட்டின் மூலம் மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது . படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு ஒரு சக்திவாய்ந்த முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, புகழ்பெற்ற நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சியை வெளியிட்டு, இந்தத் தீவிரமான குற்ற உலகத்திற்கான முதல் வலுவான பார்வையை வழங்கியுள்ளார். 1 நிமிடம் 27 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சிப்பதிவு, சிறைக் கம்பிகளின்…
Read Moreவழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் !!
Zee studios & Drumsticks Productions தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு சந்தோசமான சராசரி பெண்ணாக வாழும் கீர்த்தி, அவரது சீனீயர் ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது,…
Read Moreஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது
‘மேயாதமான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பி.எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி, பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ், ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் மகேந்திரன் பேசுகையில், 29 வயதில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலம் ‘மாஸ்டர்’ பட…
Read Moreபிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு
இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘எக்ஸாம் – EXAM’ எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம் – EXAM’ இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட…
Read Moreகர – திரை விமர்சனம்… 4.5/5..
கதை… 1990 ஆம் ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் கதை களத்தில் தனுஷ் நடிக்க விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் கர. வங்கியில் கொள்ளை அடிக்கிறார் தனுஷ்.. அதன் பிறகு போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார்.. சில ஆண்டுகளுக்குப் பிறகு திருந்தி வாழ ஆசைப்பட்டு உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் தனுஷ்.. அதற்கு பணம் தேவைப்படுவதால் தந்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவியை நாடி மீண்டும் வீட்டிற்கு வருகிறார்.. அப்போது தங்களின் நிலம் வங்கியால் ஜப்தி செய்யப்படுவதை அறிகிறார்.. மீண்டும் வங்கிக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறார் தனுஷ்.. அதன்படி மீண்டும் கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? இவர் வங்கியை கூறி வைப்பதன் காரணம் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… தனுஷ், மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சரமோடு, கே எஸ் ரவிக்குமார், ஜெயராம்,…
Read Moreதுருவ நட்சத்திரம் படக்குழுவின் அறிக்கை
“துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் வெளியீட்டிற்கு வழிவகை செய்துள்ளார் மாண்புமிகு நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி. எங்கள் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் தயாரிப்பில் செய்யப்பட்டுள்ள பெரும் முதலீடு, மற்றும் இத்திரைப்படத்துடன் தொடர்புடைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் மற்றும் திரை வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். படத் தயாரிப்போடு தொடர்புடைய அனைத்து தரப்பினரின் நலன்களும் போதுமான அளவு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், சில நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுடன் திரைப்படத்தை வெளியிட அவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு வாரத்திற்கும் மேலாக கணிசமான நேரத்தை ஒதுக்கி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி, அவர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கி, அதன்பின் திரைப்படத்தை வெளியிடுவதற்கான உத்தரவை பிறப்பித்த மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கு எங்கள்…
Read Moreயாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !!
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, CinemaCon நிகழ்வில் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு தனது வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது. படம் தற்போது முழுமையாக தயாராகியுள்ள நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும்…
Read Moreடிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை திரைப்படம் மே 1, 2026 முதல் Amazon Prime Video தளத்தில் வெளியாக உள்ளது.
1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது. டி. ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய இந்த திரைப்படத்தை பாலு மகேந்திரா எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் “கண்ணே கலைமானே”, “பொன்மேனி உருகுதே”, “பூங்காற்று புதிதானது” போன்ற என்றென்றும் நிலைக்கும் பாடல்கள் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. நெகிழ்ச்சியான கதை சொல்லல், கவிதைநயம் மிக்க காட்சியமைப்பு மற்றும் மறக்க முடியாத உச்சக்கட்ட காட்சியால் இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் மைல்கல்லாக போற்றப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் தனது சிறந்த நடிப்புகளில் ஒன்றை வழங்கியுள்ளார். அவருடன் இணைந்து ஸ்ரீதேவி தனது மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். துணை…
Read More‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் முழு வேகத்தில்!
“பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிப்பில் ரொமான்டிக் எண்டர்டெய்னராக உருவாகும் Love Oh Love திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும், உற்சாகமும் நேரத்தியும் நிறைந்த அட்டவணைக்குப் பிறகு வெற்றிகரமாக இன்று நிறைவு பெற்றுள்ளது. மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பெரும்பாலும் சென்னை நகரில் படமாக்கப்பட்டுள்ளது. நகரத்தின் தனித்துவமான நகர்ப்புற அழகையும், நவீன காதல் கதைக்கான பின்னணியையும் அழகாக பதிவு செய்துள்ளது. மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், படத்தின் First Look-ஐ விஜய் சேதுபதி வெளியிட்டது படத்திற்கு பெரும் கவனத்தை ஈர்த்தது. அவரது ஆதரவும் வாழ்த்துகளும், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. Zinema Media and Entertainment Ltd தயாரிப்பில், தினேஷ் ராஜ் மற்றும் Creative…
Read Moreகோலிவுட்டின் ‘ புதிய வரவு’ க்ரித்திக் மோகன்: அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட் – ஒரு அதிரடிப் பயணம்!
தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான் க்ரித்திக் மோகன்! கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘பிரேக்பாஸ்ட்’ திரைப்படம், இவரை ஒரு மெச்சூர்ட் ஹீரோவாக அடையாளம் காட்டியிருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, விஜய் வசந்தின் ‘அச்சமின்றி’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் தலைகாட்டியவர். அப்போது வந்த வாய்ப்புகளை ‘படிப்பு தான் முக்கியம்’ எனத் தள்ளி வைத்தவர், இன்று திரையில் மின்னிக் கொண்டிருக்கிறார். கவனிக்க வைத்த கதாபாத்திரங்கள்: சுப்புராம் இயக்கத்தில், வெளியாகி கவனத்தை ஈர்த்த அஞ்சாமை திரைப்படத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்படும் பிளஸ் டூ மாணவனாக/ விதார்த் மகனாக நடித்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கண்களையும் கலங்க வைத்தார். இப்போது காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், காதல் மனைவியிடம் அன்புப் போராட்டம் நடத்தும் கணவனாக நடித்து, காதல் காட்சிகளிலும், எமோஷனல்…
Read More