‘கராத்தே பாபு’ டீசர் வெகு விரைவில் வெளியிடப்பட்டு திரைப்படம் விரைவில் உலகெங்கும் ரிலீஸ்

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்து ‘கராத்தே பாபு’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதை குறிக்கும் வகையில், ரவி மோகன் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த காணொலியில் அவர் பேசும் அரசியல் வசனம் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் இறுதி கட்ட…

Read More

கொம்பு சீவி – திரை விமர்சனம்

வைகை அணை கட்டியதால் வாழ்வாதாரத்தையும் பெற்றோரையும் இழந்த நாயகன் சண்முகபாண்டியன், ஊர்ப் பெரியமனிதராக வலம் வரும் சரத்குமாரின் அன்புக்கு பாத்திரமாகிறார். விசுவாச அடியாள் மாதிரி அவர் கூடவே இருக்கிறார். போகப்போக இருவரும் மாமா- மருமகன் என்று உறவு கொண்டாடும் அளவுக்கு அன்பில் ஐக்கியம் ஆகிறார்கள். எப்படியாவது பெரும் பணக்காரனாக வேண்டும் என்பது சண்முகபாண்டியன் ஆசை. ஒரு நாள் அது நடந்தே தீரும் என்கிறார் மாமா சரத்குமார். அதனால் சரத் -சண்முக பாண்டியன் இருவரும் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் அந்த ஊருக்குப் புதிதாக வந்த எஸ்பி. சுஜித் சங்கருடன் மோதல் ஏற்படுகிறது. எஸ்.பி.யோ கிட்டத்தட்ட ஒரு சைக்கோவின் மனோ பாவம் கொண்டவர். இந்நிலையில் கஞ்சா வைத்திருந்ததாக சண்முக பாண்டியன் கைது செய்யப்படுகிறார். லாக்கப்பில் வைத்து அவரை போலீஸ் அடித்து துவைக்கிறார்கள். இதனால் ஆத்திரமாகும் மாமா போலீஸ்…

Read More

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தில் ‘நாடியா’ (Nadia) வாக கலக்கும்  கியாரா அத்வானி (Kiara Advani)  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல்  ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரபூர்வமாக இன்று  வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடு, படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. பல்வேறு ஜானர்களில் தனது திறமையை நிரூபித்து, இந்தி திரையுலகின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக நிலைபெற்றுள்ள கியாரா அத்வானி, இந்தப் படத்தில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றுகிறார். இயக்குநர் கீத்து மோகன்தாஸ்  உருவாக்கியுள்ள தீவிரமான, கச்சிதமான உலகத்தில், கியாராவின் இந்த பாத்திரம் அவரது திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘நாடியா’வின் ஃபர்ஸ்ட்  லுக், வண்ணமயமான சர்க்கஸ் பின்னணியில், கவர்ச்சியான தோற்றத்தில் கியாராவை காட்டுகிறது.…

Read More

“எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் என்பது மண்ணின் இசை வரலாறு!”: இயக்குநர் சீனு ராமசாமி

“ஈழத்து மெல்லிசை மன்னர்” என போற்றப்படும் மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஸ், தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக மறு பதிவு செய்துள்ளார். அவரது இந்த ஆக்கத்துக்காகவும், அவரது 60 வருட இசைப்பயணத்துக்காகவும் அவரது மகள் இசைவாரிசு பிரபாலினி பிரபாகரன் பாராட்டு நிகழ்ச்சியை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார். பிரபாலினி இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்பது பெண்களுக்கே பெருமையுடைய விடயம். இந்த விழா 3 தலைமுறைகள் ஒன்று கூடுய ஒரு அற்புத் நிகழ்வாக அமைந்தது. இந்த முப்பெரும் விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில், திருச்சி சிவா (மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது: ” நம் தொப்புள்கொடி உறவான ஈழத்து மண்ணிலிருந்து வந்து, இசை உலகையே தன் பக்கம்…

Read More

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்களிடம் பரவலான பாராட்டுகள் பெற்ற ’ஸ்டீபன்’ படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சி உளவியல் த்ரில்லரை முழுமையாக மறுவரையறை செய்கிறது!

நெட்ஃபிலிக்ஸின் உளவியல் த்ரில்லர் படமான ’ஸ்டீபன்’ தற்போது உலகளாவிய ஆங்கிலம் அல்லாத படங்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை யாரும் எதிர்பார்த்திராத படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சி வெளியாகவுள்ளது. இறுதிவரை கதையின் சஸ்பென்ஸை தக்க வைத்த இந்த தமிழ் படம் கதையின் போக்கையே மாற்றி அமைத்தது. முடிவு என்று நினைத்த இடத்தில் இருந்து மீண்டும் கதைக்கான சாத்தியத்தைக் காட்டிய இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது பார்க்கலாம். அறிமுக இயக்குநர் மிதுன் இயக்கி இருக்க, கதையின் நாயகனான கோமதி சங்கர் இணைந்து எழுதிய ’ஸ்டீபன்’ கதை வழக்கமான ஒன்று அல்ல. பஸ் சீக்வன்ஸ் முடிச்சுகளை ஒன்றாக இணைக்கவில்லை. மாறாக அது முடிச்சுகளை அவிழ்க்கிறது. இது முடிவின் வெளிப்பாடா அல்லது ஒரு பெரிய கதையின் முதல் படியா? அந்தக் கேள்விதான் த்ரில். கிரெடிட்களுக்குப் பிறகு அதன்…

Read More

JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம் Post-Production கட்டத்திற்குள் நுழைந்துள்ளது; டப்பிங் பணிகள் நேற்று தொடங்கின.

JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படம் அதிகாரப்பூர்வமாக போஸ்ட்-ப்ரொடக்ஷன் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதன் ஒரு முக்கிய கட்டமாக, டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தற்போது படத்தின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் கலை சார்ந்த அம்சங்களும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்படும் வகையில், போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு முழு கவனம் செலுத்தி வருகிறது. படப்பிடிப்பின் போது பதிவான நடிப்பின் தீவிரமும் இயல்பும் குன்றாமல் இருக்க, அப்படத்தின் இயக்குநர் எஸ்.கே. ஜீவா டப்பிங் பணிகளை அவரே நேரடியாக மேற்பார்வை செய்து வருகிறார். தயாரிப்பாளரும் முதன்மை நடிகருமான JSK சதீஷ் குமார், படத்தின் உருவாக்கத்தில் தன்னுடைய வலுவான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார். படைப்பாற்றல் பார்வையும் தயாரிப்பு பொறுப்புகளையும் சமநிலையுடன் முன்னெடுத்து வரும் அவர், திட்டத்தின் முக்கியத் தூணாக…

Read More

பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்”  மூலம் தொடங்கி வைத்தார்!!

பாகுபலி, சலார் , கல்கி 2898 ஏடி போன்ற மெகா ஹிட் படங்கள் மூலம் கொண்டாடப்படும், உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக போற்றப்படும் பான்-இந்திய ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இன்று தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவலை ஒரு அற்புதமான அறிவிப்பு வீடியோ மூலம் அறிமுகப்படுத்தினார். தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த  முயற்சி, உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பையும், புகழ் பெரும் வாய்ப்பையும் வழங்கி, கனவுகளை சினிமா வாழ்க்கையாக மாற்றும் புதிய காலத்தை உருவாக்குகிறது. இந்த புரட்சிகர தளத்தை தனிப்பட்ட முறையில் ஆதரித்த பிரபாஸ், திரைப்பட உருவாக்கத்தை ஜனநாயகப்படுத்தும் இதன் சக்தியை வலியுறுத்தி பேசியுள்ளார். “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும்…

Read More

கோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு A எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி”

டிசம்பர் 25 திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் நடிகர் கோதண்டம் பேசியதாவது.., பருத்தி நல்ல படம். இப்படத்தை முழுக்க கஷ்டபட்டு எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. தயாரிப்பாளர் லட்சு கணேஷ் பேசியதாவது.., பருத்தி படத்தை படக்குழு மிகச்சிறப்பாக எடுத்துள்ளனர். படத்தில் நடித்த சோனியா அகர்வால் முதலாக அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. இயக்குநர் குரு A பேசியதாவது.., என் முதலாளி கோதண்டம், லட்சு கணேஷ் இருவரும் கதை சொன்ன உடனே, எப்போது ஷீட்டிங் போகலாம் என்று கேட்டனர். எனக்கு முழு ஆதரவு தந்து இப்படத்தை எடுத்ததற்கு இருவருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த குழந்தை தயாரிப்பாளரின் குழந்தை. அவர்கள் இருவருக்கும்…

Read More

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் டிசம்பர் 23, 2025 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறுகையில், “ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. படமாக்குவது குறித்து ஜேசன் சஞ்சயின் தெளிவும், திட்டமிட்டபடி முழு படப்பிடிப்பையும் அவர் முடித்துக் கொடுத்துள்ளதுள்ளதும் இயக்குநராக அவரது திறமையை காட்டுகிறது. படப்பிடிப்பை முதலில் 80 நாட்கள் திட்டமிட்டோம். ஆனால், எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஆக்‌ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் உட்பட முழு படப்பிடிப்பையும் படக்குழுவினர் திட்டமிட்ட நாட்களுக்கு…

Read More

நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய தமிழ் தொடருக்கான அறிமுக புரோமோவை ஜியோஹாட்ஸ்டார் அதன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது!

’ஹார்ட்பீட்’, ’போலீஸ் போலீஸ்’ மற்றும் ’ஆஃபீஸ்’ போன்ற லாங்-ஃபார்மேட் வெப் சீரிஸ் வெற்றியை தொடர்ந்து தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய வெப்சீரிஸை ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் அறிமுகப்படுத்துகிறது. பிளாக்பஸ்டர் ’ஹார்ட்பீட்’ வெப்சீரிஸை தயாரித்த அட்லீஃபேக்டரி தயாரித்திருக்கும் இந்தத் தொடர் மூலம் நடிகர் விக்ராந்த் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார். ஜனவரி 1, 2026 முதல் LBW ப்ரீமியர் ஆகிறது. சமீபத்தில் நடைபெற்ற, ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதன்படி ப்ரீமியர் ஆகும் முதல் அசல் தமிழ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’டின் புதிய புரோமோவில், ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரனாக இருந்த ரங்கனின் கரியரில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போகிறது. இப்போது பயிற்சியாளராக இருக்கும் ரங்கன், போராடும் கிரிக்கெட்…

Read More